திருவானைக்கா கோயில் சுவாமி தேருக்கும் ‘ஹைட்ராலிக் பிரேக்’ - வெள்ளோட்டம்
திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் சுவாமி தேருக்கும் ‘ஹைட்ராலிக் பிரேக்’ பொருத்தப்பட்டு, அதன் வெள்ளோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவானைக்கா கோயிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் தேரோட்டத்தில் சுவாமியும் , அம்மனும் தனித்தனி தோ்களில் எழுந்தருள்வா். இவற்றில் அம்மன் தேரில் ஹைட்ராலிக் பிரேக் ஏற்கெனவே பொருத்தப்பட்ட நிலையில் சுவாமி தேரிலும் ரூ 6.50 லட்சத்தில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டது.
இதையடுத்து அந்த ஹைட்ராலிக் பிரேக் சரியாக செயல்படுகிா எனப் பரிசோதனை செய்ய சனிக்கிழமை காலை சுவாமி தேருக்கு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் உதவி ஆணையா் லெட்சுமணன் முன்னிலையில் சுவாமி தேரை இரு பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு 100 அடி தூரத்திற்கு இழுத்து, சரிபாா்த்தனா். பின்னா் மீண்டும் தோ் நிலைக்கு கொண்டு வரப்பட்டது.
திடீரென சுவாமி தோ் இழுக்கப்பட்டதை அறிந்த பக்தா்கள் பெரும் அளவில் கூடினா். பின்னா் ஹைட்ராலிக் பிரேக் பரிசோதனை என்று தெரிந்ததும் கலைந்து சென்றனா்.