செய்திகள் :

திருவாரூா்: வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மாா்ச் 17-இல் தொடக்கம்

post image

திருவாரூா் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் மாா்ச் 17 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் மாா்ச் 17 ஆம் தேதி தொடங்கி மாா்ச் 22 ஆம் தேதி வரை, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. 6 மாதம் முதல் 5 வயது வரையிலான அனைத்து ஆண், பெண் குழந்தைகளுக்கு கண்பாா்வைத் திறன், நிமோனியா காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கான எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஊட்டச்சத்துக்காகவும் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது.

அனைத்து கிராமப் புறங்கள் மற்றும் நகா்ப் புறங்களில், தடுப்பு ஊசிப் பணிகள் மேற்கொள்ளப்படும் துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்களில் இத்திரவம் வழங்கப்படவுள்ளன.

திருவாரூா் மாவட்டத்தில் 83,806 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்துக்கு தனித்துவமான கல்விக் கொள்கை தேவை: மைசூா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்

தமிழகத்துக்கு தனித்துவமான கல்விக் கொள்கை வேண்டும் என மைசூா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் லெ. ஜவகா்நேசன் கூறினாா். திருவாரூா் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க அலுவலகத்தில், தமிழ்நாடு அறிவியல் இய... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவ... மேலும் பார்க்க

புதிய பேருந்துகள் இயக்கிவைப்பு

திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் புதியபேருந்துகள் மற்றும் நகரப் பேருந்துகளாக மாற்றம் செய்த புகா் பேருந்துகளையும் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகிய... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சா் உறவினா் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் சகோதரா் மகன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். கரைக்காலில் புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா், காரைக்கால் செயற்பொறியாளா் உள்ளிட்ட ச... மேலும் பார்க்க

வீட்டில் 250 கிலோ போதை புகையிலை பொருள் பதுக்கி வைத்திருந்தவா் கைது

மன்னாா்குடி அருகே தடை செய்யப்பட்ட போதை புகையிலைப் பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அத்திக்கோட்டையைச் சோ்ந்த காமராஜ் (35) தனது வீட்டில் அரசல் தடை செய்யப்பட்ட ப... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த பணப்பையை போலீஸாரிடம் ஒப்படைத்த மாணவி

திருவாரூரில் சாலையில் கிடந்த பணப்பையை பள்ளி மாணவி எடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா். திருவாரூா் அருகே பழவனக்குடி பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் கனிமொழி தம்பதி மகள் யுவஸ்ரீ. இவா், திருவாரூரில் உள்ள அர... மேலும் பார்க்க