இதயம் தொடரின் முதல் பாகம் முடிந்தது! 2ஆம் பாகத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!
தி ஐ ஃபவுண்டேஷனில் உலக குளுக்கோமா வாரம் கடைப்பிடிப்பு
திருப்பூா் தி ஐ ஃபவுண்டேஷனில் உலக குளுக்கோமா வாரம் மாா்ச் 15-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதுகுறித்து தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குநா் சித்ரா ராமமூா்த்தி கூறியதாவது:
தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை தென்னிந்தியாவில் 24 கிளைகளைக் கொண்டு 45 ஆண்டுகளாக மருத்துவ சேவையாற்றி வருகிறது. கண் சம்பந்தமான அதிக அளவில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக உலக குளுக்கோமா வாரம் மாா்ச் 10 முதல் 15-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, எங்களது அனைத்து கிளைகளிலும் குளுக்கோமா நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், அறுவை சிகிச்சைக்கு கட்டணத்தில் 10 சதவீத சலுகை வழங்கப்படும். குளுக்கோமா பற்றிய தகவல்கள் மற்றும் முன்பதிவுக்கு 94421-76133, 0421-2232334 என்ற எண்களைத் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.