செய்திகள் :

தீராத கஷ்டங்களுக்குத் தீர்வாகும் யதிதுவாதசி, கஜச்சாயை.! மகாளயபட்சத்தில் இந்த நாள்களைத் தவறவிடாதீங்க!

post image

மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாத அமாவாசைக்கு முன்பு வரும் 15 நாள்கள். இந்த நாள்கள் மிகவும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக முன்னோர்களை வழிபட மிகவும் உகந்தவை. இந்தக்காலகட்டத்தில் நம் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகம் வந்து இந்த 15 நாள்களும் நம்மோடு தங்கி இருப்பதாக ஐதிகம்.

எனவே இந்த நாள்களில் அவர்களை நினைப்பதும் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் அவர்களுக்குப் பெரும் திருப்தியைக் கொடுப்பதோடு அநேக ஆசீர்வாதங்களையும் நமக்குப் பெற்றுத்தரும். அப்படிப்பட்ட மகாளயபட்சத்தில் பல முக்கிய தினங்கள் உண்டு. அவற்றில் யதி துவாதசி, கஜச்சாயை போன்றவை சிறப்புவாய்ந்தவை.

துறவிகள்

தீராத பிரச்னைகளுக் காரணம் இதுவாக இருக்கலாம்

அந்தக் காலத்தில் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் சந்நியாசிவிடுவார்கள். அப்படி சந்நியாசி ஆனவர்களுக்கும் குடும்பத்துக்குமான தொடர்பு விட்டுப்போய்விடும். மூன்று நான்கு தலைமுறைகளுக்குப் பின் அவர்கள் குறித்த எந்தத் தகவலும் குடும்பத்தில் இருக்காது. அப்படி சந்நியாசியாகி இறந்துபோனவர்களுக்குத் தனியாக எந்த கர்மாவும் செய்யவேண்டியதில்லை. அதேவேளையில் அவர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்க முடியும். அப்படி சந்நியாசம் அடைந்தவர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கும் நாள்தான் யதி துவாதசி. யதி என்றால் துறவி. துறவிகளுக்கான துவாதசி என்று பொருள். இந்த நாளில் நம் குடும்பத்தில் தோன்றி இறந்தவர்களின் பெயர்கள் தெரியாவிட்டாலும் அவர்களை மனதில் நினைத்துக்கொண்டு அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் விட சகலவிதமான நன்மைகளும் வந்து சேரும். இந்த நாளில் சந்நியாசிகளுக்கும் சந்நியாசிகள் வாழும் மடங்களுக்கும் தானங்கள் கொடுப்பது மிகுந்த ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.

கஜச்சாயை

‘கஜம்’ என்றால் யானை; ‘சாயை’ என்றால் நிழல். யானையின் நிழலைப் போன்ற ஒரு குறிப்பிட்ட நிழல் விழும் காலத்தைக் குறிக்கும் பெயராக கஜச்சாயை சொல்லப்படுகிறது. சூரியனின் நிலையும், காலத்தின் கணக்கீடும் இணையும் ஒரு குறிப்பிட்ட தருணத்தைப் பண்டையோர் இவ்வாறு அழைத்தனர்.

முன்னோர்கள்

மகாளய பட்ச காலத்தில் வரும் திரயோதசி திதியே கஜச்சாயை எனப்படுகிறது. இந்த நாளில் முன்னோர் வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. அதிலும் குடும்பத்தில் துர்மரணம் அடைந்தவர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நாள். தீவிபத்து, கொலை, சாலை விபத்துகள் போன்றவற்றால் மரணம் அடைந்தவர்களின் ஆன்மா இந்த நாளில் தர்ப்பணம் கொடுத்தால் திருப்தி அடையும் என்கிறார்கள்.

பொதுவாக துர்மரணம் அடைந்தவர்களின் ஆன்மா சீக்கிரம் சாந்தி அடையாது என்பது நம்பிக்கை. நம் குடும்பத்தில் நிம்மதி அற்ற தன்மை நிலவுவதற்கு அதுவும் ஒரு காரணம் என்பார்கள். பல நேரங்களில் புண்ணியத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்தாலும் இந்த தோஷம் தீராது. அப்படிப் பட்டவர்கள் கஜச்சாயை நாளில் வழிபாடு செய்வது அவசியம். இந்த நாளில் குடும்பத்தில் மூன்று தலைமுறைகளுக்குள்ளாக துர்மரணம் அடைந்தவர்களின் பெயரைச் சொல்லி எள்ளும் தண்ணீரும் மூன்று முறை விட எளிதாக அவர்கள் திருப்தி அடைவார்கள். அப்படிப்பட்ட புண்ணிய தினம் இது என்கிறது ஞானநூல்.இந்த நாளில் உணவு தானம் செய்வது மிகவும் சிறப்பு. நீர், மோர் ஆகியன தானம் செய்ய நிச்சயம் முன்னோர்களின் ஆன்மா திருப்தி அடையும்.

தர்ப்பணம்

இந்த ஆண்டு யதி துவாதசி நாளை (7.10.26) புதன்கிழமையும் கஜச்சாயை (8.10.26) அன்று வருகிறது. எனவே தீராத பிரச்னைகள் தீர உங்கள் முன்னோர்களை தவறாமல் நினைத்து வழிபடுங்கள். இந்த மகாளயபட்சத்தில் இதுவரை நீங்கள் முன்னோர்வழிபாடு செய்யவில்லை என்றாலும் அடுத்து வருகிற நான்கு நாள்களிலும் செய்யத் தவறாதீர்கள். அப்படிச் செய்வதன்மூலம் குடும்பத்தில் தீராத பிரச்னைகளும் தீரும் என்பது நம்பிக்கை.

'எடுக்க எடுக்கக் குறையாத அன்னம்... எல்லா உயிர்க்கும் அன்பு' - வள்ளலார் அவதார தின சிறப்புப் பதிவு!

வடலூர் ராமலிங்க அடிகள் தமிழகத்தில் அவதரித்த மகான். வாழும்போதே ஜோதிவடிவமாக இறைவனை தரிசித்து அந்த வழியை மற்றவரும் அடைய வழிகாட்டியவர். அதேவேளையில் உயிர்களுக்குச் செய்யும் தொண்டே அந்த ஈசனுக்குச் செய்யும் ... மேலும் பார்க்க

Anbe Sivam | காந்தியடிகள் வியந்துபோற்றிய தமிழ்ப்பெண் | Inspirational Speech | பொன்னம்பல அடிகளார்

மகாத்மா காந்தியடிகள், தில்லையாடி வள்ளியம்மை, சுவாமி விவேகானந்தர், பேரறிஞர் அண்ணா மற்றும் பகத் சிங் போன்ற மாபெரும் தலைவர்களின் வாழ்க்கையில் வாசிப்புக்கும் தியாகத்திற்கும் இருந்த முக்கியத்துவத்தை விளக்க... மேலும் பார்க்க

'மஞ்சள் முதல் பழங்கள் வரை; இயற்கையில் மலர்ந்த விநாயகர்!' - 'Vikatan Organic Vinayagar Contest 2026'

விநாயகர் சதுர்த்தி என்றாலே விநாயகரை விதவிதமாக அலங்கரிப்பது வழக்கம். ஆனால், இயற்கையில் கிடைக்கும் பொருள்களையே விநாயகராக மாற்றினால்? இந்தக் கேள்விக்கான அழகான பதிலாக அமைந்தது, விகடன் நடத்திய 'Organic Vin... மேலும் பார்க்க

நீங்கள் செல்வந்தராக வேண்டுமா? வீட்டில் செல்வம் பெருகிட சாஸ்திர நூல்கள் சொல்லும் 9 எளிய வழிமுறைகள்!

1. இனிப்பு (கல்கண்டு): இனிப்பு பொருட்கள் மீது மிகுந்த பிரியத் துடன் வாசம் கொண்டிருப்பவள் லட்சுமி. கல்கண்டு, வெல்லம் போன்ற இனிப்புப் பொருள்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக் கும். ஆகவே, வீட்டில் ஏதேனு... மேலும் பார்க்க

திருமணம் தள்ளிப்போகிறதா... மதுரையில் நடக்கும் சுயம்வர பார்வதி ஹோமத்தில் நீங்களும் சங்கல்பிக்கலாம்!

மதுரையில் வரும் 17 ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இந்த நாளில் லட்சக்கணக்கானவர்கள் மதுரையில் திரள்வார்கள். அப்படிப்பட்ட புண்ணியமான நாளில் விகடனும் வாசகர்களி... மேலும் பார்க்க

விநாயகர் சதுர்த்தி: 12 ராசிகளுக்கும் பிரத்யேக விநாயகர் வழிபாடு! எந்த ராசிக்கு என்ன வழிபாடு?

மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு, 12-ல் சனி. மேலும் ராகுவும் கேதுவும் சஞ்சரிக்கும் நிலைப்படி. வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நீங்கள், அம்மன் கோயிலில் அருளும் விநாயகருக்குப் பாலபிஷேகம் செய்யவேண்டும... மேலும் பார்க்க