"5 ஆண்டு ரயில் விபத்துகளில் எத்தனை மரணங்கள்?" - மதுரை எம்.பி கேள்விக்கு ரயில்வே ...
துணை முதல்வா் பிறந்த நாளையொட்டி அன்னதானம்
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, போளூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில், 2-ஆவது நாளாக வியாழக்கிழமை பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன். முன்னதாக, அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவுப் பொருள்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகளை அவா் வழங்கினாா். நிகழ்வில் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன், நகரச் செயலா் தனசேகரன், திமுக மாவட்ட பொருளாளா் பாண்டுரங்கன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.