செய்திகள் :

`துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02

post image

(கூட்டணி வியூகங்கள், வசீகர வாக்குறுதிகள், பிரசார வியூகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கட்சிகள் ஆட்சிக்கு வந்த கதைகளை, சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும் கட்டுரைகளை உள்ளடக்கிய தொடர்தான் ‘வாவ்’ வியூகம்.)

தேர்தல் வெற்றிக்காக அரசியல் கட்சிகள் வகுக்கும் வியூகங்கள் பல ரகங்கள். ஆனால், சில நேரங்களில் ‘அவனவன் எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாகத் தான் இருக்குது’ என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நிகழும் சில சம்பவங்கள் ஒரு கட்சிக்கு லாபகரமாக மாறும். அதுவும் குறிப்பாக சில களேபரங்களோ, சில அசம்பவிதங்களோ தேர்தல் முடிவுகளைத் திருப்பிப் போடும் தீர்ப்புகளைத் தந்த வரலாறு தமிழக அரசியலில் உண்டு. அப்படியாக அனுதாப அலைகளால் மாறிப் போன திமுக, அதிமுகவுக்கான மக்கள் தீர்ப்பு பற்றிய குவிக் ஃப்ளேஷ்பேக் இது...

1967 தமிழகம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திருக்கவிருந்தது. அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களில் படு பிஸியாக இருந்தன. பிப்ரவரியில் தேர்தல் நடத்த அட்டவணை வெளியாகியிருந்தது. ஜனவரியில் சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த திமுக சிறப்பு மாநாட்டில் எம்ஜிஆர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் நிதியாக ரூ.1 லட்சத்தை வழங்குவதாக அவர் மேடையில் அறிவித்தார். அதற்கு மேடையில் அண்ணா ஒரு சுவாரஸ்ய பதிலளித்து ஒரு கோரிக்கையையும் முன்வைத்தார்.

“எம்.ஜி.ஆரிடம் இருக்கும் பணம் என்னிடம் இருக்கும் பணம் போன்றது. எங்கும் போய்விடாது” என்று அண்ணா பேச, கரகோஷம் விண்ணைப் பிளந்தது. தொடர்ந்து அண்ணா, “இந்தத் தேர்தலுக்காக எம்ஜிஆர் ஒரு மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். அவர் முகத்துக்கே முப்பதாயிரம் வாக்குகள் விழும்” என்றார்.

எம்ஜிஆர் - அண்ணா

ஜனவரி 1, 2 தேதிகளில் ஒரு பிரம்மாண்டக் கூட்டம் மூலம் திமுக மாஸ் காட்ட ஜனவரி 8-ம் தேதி பெரியார் திடலில் ஒரு பிரச்சார நிகழ்ச்சி நடந்தது. அதில் பெரியார் கலந்து கொண்டார். அப்போது, அண்ணா, எம்ஜிஆரை பெரியார் விமர்சித்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. அதே மேடையில் உரையாற்றிய எம்.ஆர்.ராதாவும், கோபம் தெறிக்க எம்ஜிஆரை விமர்சித்ததாக தகவல்.

தொடர்ந்து நடந்த ஒரு சம்பவம்தான் தமிழக அரசியல் வரலாற்றின் இன்னொரு திருப்புமுனை. ஆம், 1967 ஜனவரி 12 - தமிழக வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்றைய தினம்தான் எம்ஜிஆரை நடிகவேள் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார். 

ஜனவரி 12-ம் தேதி மாலை எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு புதுப்பட விஷயமாக பேச  தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஆர்.ராதாவும் வருவதாக தகவல் வர, பிரச்சார பரபரப்புக்கு இடையேயும், வந்தவர்களை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார் என்பதுதான் அந்த திருப்புமுனை நிகழ்வு.

அதன்பின்னர் சிகிச்சை, விசாரணை, கைது, வழக்கு என நடந்ததெல்லாம் இன்று நீட்டி எழுதினால் ஒரு ஓடிடி சீரிஸுக்கான கதை ஆகிவிடும். அந்த அளவுக்கு அதன் பின்னணியில் பல விவரங்கள், சூட்சமங்கள் உண்டு. அதுவும் குறிப்பாக எம்ஆர் ராதா எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், ‘எம்ஜிஆரை சுட்டதேன்?’ என்பது தொடர்பாக இருக்கும் விவரங்கள் மட்டுமே அத்தனை நுணுக்கமானவை.

அந்தத் துப்பாக்கிச் சூட்டால் தமிழகம் முழுவதும் பரபரப்பு பற்றிக்கொள்ள, மருத்துவமனையில் இருந்தபடி  எம்ஜிஆர் பிரச்சாரம் செய்தார். அவர் மருத்துவமனையில் கழுத்தில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை போஸ்டராக திமுக மாநிலம் முழுவதும் ஒட்டியது. எம்ஜிஆர் அந்தத் தேர்தலில் செயின்ட் தாமஸ் தொகுதியில் போட்டியிட்டார்.

துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெறும் எம்.ஜி.ஆர்...

மருத்துவமனையில் இருந்ததால் எம்ஜிஆர் தொகுதிக்கு நேரில் பிரச்சாரத்துக்கு வரவே இல்லை. ஆனால், அவர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதல்வரானார். இந்த ஆட்சி மாற்றத்துக்குப் பின்னால் பல முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் எம்ஜிஆர் சுடப்பட்டதால் உருவான அனுதாப அலையும். இதையெல்லாம் விட மிக முக்கியமானது, 1967-க்குப் பின்னர் காங்கிரஸால் தமிழகத்தில் இதுவரை ஆட்சியைப் பிடிக்க இயலவில்லை. கூட்டணியில்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

1967 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு என தனித்த உத்திகள் இருந்திருக்கலாம். இந்தி திணிப்பு போன்ற பிரச்சினைகளால் அதிருப்தி அலையும் கூட இருந்திருக்கலாம். அதில் மிக முக்கிய பங்காற்றியது, எம்ஜிஆர் சுடப்பட்டதால் எழுந்த அனுதாப அலை. திமுகவுக்கு அன்று வெற்றியைத் தேடித்தந்தது மட்டுமல்ல, எம்ஜிஆரின் அரசியலுக்கு மிகப் பெரிய அடித்தளம் இட்டதும் அந்த அனுதாப அலை என்றால் அது மிகையாகாது.

1977-ல் அதிமுக முதன்முதலில் ஆட்சி அமைத்தது. எம்ஜிஆர் முதல்வரானார். அந்த ஆட்சி 1982 வரை நீடித்திருக்க வேண்டும். ஆனால், 1980 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி தமிழகத்தில் ஆட்சிக் கலைப்புக்கு வழிகோலியது. தமிழ்நாட்டுடன் சேர்த்து 9 மாநிலங்களின் ஆட்சி கலைக்கப்பட்டது.

எம்ஜிஆர் முதல்வரான பின்னர் இட ஒதுக்கீட்டுக்கான ‘கிரீமீ லேயர்’ முறையை அறிமுகப்படுத்தியிருந்தார். அதாவது  பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெற அவர்களது பெற்றோரின் வருட வருவாய் ரூ.9000-க்குள் இருக்க வேண்டுமென அறிவித்தார். இதற்கு திமுக, தி.க கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. தமிழக அரசியலில் இது பெரிய விவகாரமாகவும் உருவெடுத்தது. இதை முன்வைத்து திமுக செய்த பிரச்சாரம் 1980 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலித்தது எனலாம். அந்தத் தேர்தலில் திமுக - இந்திரா காங்கிரஸ் - முஸ்லிம் லீக் கூட்டணி போட்டியிட்டது. திமுக கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது.

1980 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி எம்ஜிஆருக்கு ஒரு படிப்பினையாக அமைந்தது. அதன்பின்னர் மாநிலத்தில் அவர் கொண்டுவந்த சில நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டுவந்தார். அதில் ஒன்றுதான் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கான கிரீமி லேயர் வருமான வரம்பு நீக்கம். இந்த ஒரு திருத்தத்தால் உருகிப்போய் தி.க, எம்ஜிஆருக்கு ஆதரவு அளித்தது. கூடவே, சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரங்களில் எல்லாம் தனது ஆட்சி கலைக்கப்பட்டது சதியென்று மக்கள் மத்தியில் பதியவைத்தார். விளைவு, எம்ஜிஆர் மக்கள் இதயங்களை வென்றார். அது தேர்தலில் பிரதிபலித்தது. அதிமுக தனித்து 129 இடங்களில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் 32 இடங்களைக் கைப்பற்றின.

எம்.ஜி.ஆர்

எம்ஜிஆர் சுடப்பட்டதால் எழுந்த அனுதாப அலை, திமுகவை ஆட்சி அரியணையில் அமர்த்திய காரணங்களுள் ஒன்றாக இருக்க, ‘துரோகத்தால் வீழ்த்தப்பட்டேன்’ என்று எம்ஜிஆர் முன்னெடுத்த பிரச்சாரப் பேரலை அனுதாப அலையாக மாறி மீண்டும் 1980-ல் எம்ஜிஆரை ஆட்சியில் அமர்த்தியது. மக்கள் தங்கள் தலைவன் வாடினாலும் வாக்களிப்பார்கள், அவன் உரிமைக் குரல் எழுப்பினாலும் வாக்களிப்பார்கள். இது வாக்களிப்பியலில் ஒரு ‘டிசைன்’.

மத்தியிலும், ஒரு மாநிலத்திலும் ஒரே நேரத்தில் ஒரு மிகப் பெரிய அனுதாப அலை வீசியது என்றால், அது 1984-ம் ஆண்டு தான். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி இந்திரா காந்தி படுகொலை நடந்தது. அப்போது ராஜீவ் காந்தி உடனடியாகப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவர் தனது பலத்தை நிரூபிக்க விரும்பியதால், நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் 414 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்திரா காந்தி என்ற மிகப் பெரிய ஆளுமை அவரது பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்ட அனுதாப அலை, ராஜீவ் காந்திக்கு மக்கள் அங்கீகாரத்தைத் தந்தது.

1984 நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது, எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார். அப்போது தமிழகத்திலும் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டுமென்று அதிமுக முக்கியப் புள்ளிகள் விரும்ப, அப்போது அதிமுகவுடன் நட்பு பாராட்டிய ராஜீவ் காந்திக்கு தகவல் சென்றது. ராஜீவ் காந்தியும் அதற்கு ஆவன செய்ய, ஆட்சி கலைக்கப்படுவதாக ஆளுநர் உத்தரவிட்டார். முதல்வர் மாநிலத்தில் இல்லாதபோது, வேறு ஏதும் சட்டம், ஒழுங்கு இல்லாத போது ஆட்சி கலைக்கப்பட்டதற்காக கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

எம்.ஜி.ஆர்

ஆனால், எல்லாவற்றையும் மீறி தமிழக சட்டப்பேரவை கலைக்கப்பட்டது.  1984 டிசம்பர் 24-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதிமுக - காங்கிரஸ் கட்சி இடையில் கூட்டணி அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் சிகிச்சையிலிருந்த எம்ஜிஆர் இந்தத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் இன்றைக்கு மட்டும் விமர்சனங்களுக்கு உள்ளாகவில்லை. எல்லாக் காலத்திலும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது என்பதற்கு 1984 தமிழகத் தேர்தலும் ஒரு வரலாற்று சாட்சி. காரணம், எம்ஜிஆருக்காக வேட்புமனு அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அமெரிக்காவுக்கான இந்திய தூதர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இருந்தபோதும் எம்ஜிஆரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது.

அந்தத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றிருந்தது. 

எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்ததால் மட்டுமே அனுதாப அலை மேலோங்கிவிடவில்லை. எம்ஜிஆரின் உடல்நிலை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக சந்தேகங்களை எழுப்பின. அதன் வீரியத்தைப் புரிந்துகொண்ட அதிமுக, எம்ஜிஆரைப் பற்றிய ஒரு வீடியோவை அமெரிக்காவில் உருவாக்கி, தமிழகத் திரையரங்குகளில் திரையிட்டது.

அந்த ஆவணப்படத்துக்கு தேர்தல் வெற்றியை முன்கூட்டியே கணித்தது போல ‘வெற்றித் திருமகன்’ என்று பெயரிடப்பட்டது. சுமார் 10 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ, பல பிரிண்டுகள் போடப்பட்டு திரையிட்டப்பட்டது. நம் சம காலத்தில் ஜெயலலிதா டிவி பார்ப்பது போல் நாம் பார்த்த ஃபோட்டோக்களைப் போல் அன்று திரையரங்குகளில் காட்டப்பட்ட வீடியோவில்,  எம்ஜிஆர்  அமெரிக்காவில் மருத்துவமனையில் அமர்ந்திருப்பது, உணவு அருந்துவது, இரட்டை இலையைக் காண்பிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்ற காட்சிகள்

நாடாளுமன்றம் மற்றும் தமிழகத் தேர்தல் டிசம்பர் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 19-ம் தேதி எம்ஜிஆருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அது வெற்றிகரமாகவே நடந்தது.

ஒரு பக்கம் இந்திரா காந்தியின் மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலை, மறுபக்கம் எம்ஜிஆர் சிகிச்சையில் இருப்பதால் எழுந்த அனுதாப அலை. இரண்டும் சேர்ந்து அனுதாப சுனாமியாகி மத்தியிலும், மாநிலத்திலும் அதிமுக கூட்டணிக்கு அமோக வெற்றியைத் தந்தது. அதை கிட்டத்தட்ட எல்லோரும் கணித்தே இருந்தனர்.

ஆனால், ‘அனுதாப அலை’களை வாக்குகளாக அறுவடை செய்ய முடியாத அரசியல் குழப்பங்களும் சொதப்பல்களும் கூட தமிழக அரசியலில் அரங்கேறியிருக்கின்றன. அதற்கும் சாட்சியாக நிற்கிறது அதிமுக. அது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

(வியூகங்கள் தொடரும்.!)

``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.!" - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பி... மேலும் பார்க்க

'NDA-க்கு முதலமைச்சர் யாருன்னு உங்களுக்கே தெரியும்; தெரிந்தே கேட்கிறீர்கள்!' - டிடிவி தினகரன் பதில்

என்.டி.ஏ கூட்டணியில் இணைவதாக அறிவித்திருக்கிறார் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணியை உறுதி செய்த டிடிவி தினகரன் பத்திரிகையாளர்கள... மேலும் பார்க்க

Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன?

முதல் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... இரண்டாம் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... ட்ரம்ப் 'அமெரிக்காவிற்கு கிரீன்லேண்ட் வேண்டும்' என கடுமையாக அடம்பிடிக்கிறார். அமெரிக்காவின் 'பாதுகாப்பு' மட்டும... மேலும் பார்க்க

"OPS-ன் காலதாமதம்... திமுக தமிழ்நாட்டிற்குத் தேவை" - திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சொல்வது என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. கட்சி மாறுதல், கூட்டணி மாறுதல், கூட்டணிப் பேச்சுவார்த்தை போன்றவற்றுக்கு இனி பஞ்சமிருக்காது.அதில் ஒருவர்தான், இன்று திமுகவில் இணைந்துள்ள ஒரத்தநாடு எம்.எல்.... மேலும் பார்க்க

தூத்துக்குடி தொகுதி: முட்டிமோதும் நிர்வாகிகள்; கூட்டணி முடிவில் அதிமுக? - ஜாலியில் அமைச்சர் தரப்பு!

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில், கடந்த தேர்தலில் அமைச்சர் கீதா ஜீவன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். தூத்துக்குடி தி.மு.கவின் முகமாகவும், மக்கள் மத்தியில் நன்கு பரிட்சியமானவர் என்பதால் வரும் தேர... மேலும் பார்க்க

`விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை' - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்!

என்.டி.ஏ கூட்டணியில் இணையப் போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார். மாவட்டச் செயலாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்திருக்கிறார். டி.டி.வி. தினகரன்அடையாறில் உள்ள அ... மேலும் பார்க்க