Eggless Cakes: `சாக்லேட் கேக்' - அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?
Egg less Cakes: `ஆரஞ்சு க்ரான்பெர்ரி கேக்' - அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?
ஆரஞ்சு க்ரான்பெர்ரி கேக்
தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்
சர்க்கரை - அரை கப்
கார்ன் மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
ரிஃபைண்ட் எண்ணெய் - கால் கப் + 2 டேபிள்ஸ்பூன்
ஆரஞ்சு ஜூஸ் - ஒரு கப்
துருவிய ஆரஞ்சுப்பழத் தோல் - 2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
ஆரஞ்சு எசென்ஸ் - அரை டீஸ்பூன்
ஆரஞ்சு நிற ஃபுட் கலர் (விருப்பப்பட்டால்) – கால் டீஸ்பூன்
உலர்ந்த க்ரான்பெர்ரி பழம் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். கோதுமை மாவு, கார்ன் மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை இரண்டு முறை சலித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, கால் கப் எண்ணெய், இரண்டையும் சேர்த்து சர்க்கரை கரைந்து க்ரீம் போல ஆகும்வரை நன்கு அடிக்கவும்.
பிறகு இதனுடன் ஆரஞ்சு ஜூஸையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் அதில் துருவிய ஆரஞ்சுப்பழத் தோல், ஆரஞ்சு எசென்ஸ், ஒரு டேபிள் ஸ்பூன் க்ரான்பெர்ரி பழம், ஆரஞ்சு ஃபுட் கலர் மற்றும் சலித்துவைத்துள்ள கோதுமை மாவு ஆகியவற்றை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒரு பேக்கிங் பானில் எண்ணெய் தடவவும். அதில் பேக்கிங் பேப்பரை வைக்கவும். அதன் மேலும் எண்ணெய் தடவவும். இதில் தயாரித்துவைத்துள்ள கேக் கலவையை ஊற்றி அதன்மீது ஒரு டேபிள்ஸ்பூன் உலர்ந்த க்ரான்பெர்ரியைத் தூவவும்.
பின்னர் இதை ஓவனில் 30 முதல் 35 நிமிடங்கள் வைத்து நன்றாக பேக் செய்து எடுக்கவும்.
ரஷ்யர்கள் தங்களின் வசந்தக் கடவுளான Maslenitsa-வுக்குச் சிறிய வட்ட வடிவ கேக்குகளை ‘சூரிய கேக்குகள்’ என்னும் பெயரில் படைத்தனர்.

















