செய்திகள் :

கரூர்: மதுபோதையில் பேருந்தை இயக்கிய டிரைவர்; குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

post image

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பரளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் விஜயகுமார் (வயது 30). இவர், நாமக்கலில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையலராக வேலைபார்த்து வந்தார்.

இவருக்கு திருமணம் ஆகி சௌந்தர்யா என்ற மனைவியும், சன்மதி என்ற ஒரு வயது பெண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், பொங்கல் விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்திற்கு வந்த அவர், புலியூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் செல்வதற்காக ஸ்கூட்டியில் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்துகொண்டு நேற்று இரவு கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார்.

dead
dead

அப்போது, குளித்தலையை அடுத்த லாலாபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே கரூரிலிருந்து தனியார் டெக்ஸ்டைல் தொழிலாளிகளை ஏற்றிக் கொண்டு திருச்சி மாவட்டம், தும்பலம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி வந்த தனியார் டெக்ஸ்டைல் பேருந்து அதிவேகமாக வந்துள்ளது.

அப்போது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் சென்று ஸ்கூட்டியின் மீது பயங்கரமாக மோதி 50 அடி தூரம் வரை இழுத்துச் சென்றது. இதில், பஸ்ஸின் அடியில் சிக்கி ஒரு வயது பெண் குழந்தை, கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீஸார், அவர்களது உடலைக் கைப்பற்றி, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, குளித்தலை அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் போதிய குளிர்சாதன அறை இல்லாததால் அவர்களது உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இந்த விபத்தை ஏற்படுத்திய தனியார் டெக்ஸ் பஸ் டிரைவர் முருகேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும், பஸ் டிரைவர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல், இந்தச் சம்பவத்தை அறிந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா, விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

dead
dead

மேலும், லாலாபேட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து மேம்பாலம் முடியும் வரை சாலையில் எந்தவித மின்விளக்குகளும் இல்லை. கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையானது குறுகிய இருவழிச் சாலையாக உள்ளது. இந்தச் சாலையில் செல்லும் வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அதிவேகத்தில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி வரும் சம்பவம் தொடர்கதையாகி வருவதாக அங்குள்ளவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஸ்கூட்டி மீது தனியார் டெக்ஸ் பஸ் மோதிய விபத்தில் ஒரு வயது பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதியினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

`தினமும் முட்டைகறியா?' எனக் கேட்ட கணவனின் நாக்கை கடித்து துப்பிய மனைவி கைது

கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன பிரச்னைக்கெல்லாம் சண்டை வருவதுண்டு. ஆனால் அந்த சண்டை அடுத்த சில மணி நேரத்தில் சரியாகிவிடும். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் திருமணமாகி ஒரு ஆண்டில் குழம்பு குறித்து கேள்வி எழுப... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த SSI-யின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாதது ஏன்?- முதல்வருக்கு பறந்த புகார்!

தூத்துக்குடி, தெர்மல்நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சுப்பையா. கடந்த 17.01.1986-ம் நாள், அப்போதைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந... மேலும் பார்க்க

சென்னை: உள்ளாடைக்குள் ஸ்பெஷல் பாக்கெட்; சூப்பர் மார்க்கெட்களில் கைவரிசை காட்டும் பெண்கள் சிக்கினர்

சென்னை, அண்ணா நகர் 6-வது அவென்யூவில் உள்ள பிரபலமான சூப்பர் மார்க்கெட்டின் மேலாளர் அனில் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``19.01.2026-ம் தேதி வாடிக்கையாளர்கள் போல... மேலும் பார்க்க

விழுப்புரம்: ஓய்வுபெற்ற எஸ்.ஐ-யால் மகளுக்கு ஏற்பட்ட சோகம் - கதறிய கணவன்; கத்தியுடன் சிக்கிய தந்தை

தெருவை உலுக்கிய அலறல் சத்தம்விழுப்புரம், கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன், தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது இரண்டாவது மகள் சுமலதாவுக்கு திருமணமாகி ஏழு வயதில... மேலும் பார்க்க

வேலூர்: CMC மருத்துவர் அறையில் அமெரிக்க போதைப்பொருள்; அமலாக்கத்துறை விசாரணையில் வெளியான தகவல் என்ன?

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் முதுநிலை அறுவை சிகிச்சை மருத்துவராக கேரளாவைச் சேர்ந்த பெல்கிங் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.இவர், வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோயில் தெ... மேலும் பார்க்க

வேலூர்: போதைப்பொருள் பயன்படுத்திய கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது - கஞ்சா, போதை மாத்திரை பறிமுதல்

வேலூர், பழைய காட்பாடி செல்வம் நகர் பகுதியிலுள்ள தனியார் குடியிருப்பில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக பிரம்மபுரம் காவல் நிலையப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் அங்கு சென்று சோதனையில்... மேலும் பார்க்க