செய்திகள் :

இந்தியா வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் போரால் பதற்றம்!

post image

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. 10 நாள்களைக் கடந்து போர் தொடர்ந்துவரும் நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஹார்மூஸ் ஜலசந்தி வழியே சரக்கு கப்பல்கள் பயணிக்க வேண்டிய சூழலில், ஈரான் ஹார்முஸ் பகுதியை மூடுவதாக அறித்தது. தற்போது ஏற்பட்டிருக்கும் எரிவாயு உள்ளிட்ட எண்ணெய் பொருள்களின் தட்டுப்பாடுக்கு இதுவும் ஒரு காரணம்.

தாக்கப்பட்ட கப்பல்
தாக்கப்பட்ட கப்பல்

இதற்கிடையில், ஹார்மூஸ் பகுதியை மூடுவதாகவும், அந்தப் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் அறிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து தாய்லாந்து கொடியுடன் புறப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே தாக்கப்பட்டதாக ராயல் தாய் கடற்படை தெரிவித்துள்ளது.

தாய்லாந்து நிறுவனமான பிரீசியஸ் ஷிப்பிங் பிஎல்சிக்குச் சொந்தமான மயூரி நரீ என்ற சரக்கு கப்பல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள கலீஃபா துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, இந்தியாவில் உள்ள கண்ட்லா துறைமுகத்திற்கு வந்துகொண்டிருந்தது. அப்போது ​​ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும்போது அந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கப்பலில் பயணித்த 20 மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் மூன்று பேரின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை.

தாக்கப்பட்ட கப்பல்
தாக்கப்பட்ட கப்பல்

ராயல் தாய் கடற்படை வெளியிட்ட அறிக்கையில், ``தாக்குதலுக்கான கப்பல் குறித்த குறிப்பிட்ட விவரங்கள் மற்றும் காரணம் தற்போது விசாரணையில் உள்ளது. ஓமானி கடற்படை 20 மாலுமிகளை மீட்டுள்ளனர். மீதமுள்ள மூன்று பணியாளர்களை மீட்பதற்கான முயற்சிகள் தற்போது நடந்து வருகிறது. நேற்று வளைகுடாவில் மூன்று வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

விஜய்க்கு எதிராக யாரை நிறுத்துவது? - தி.மு.க முகாமில் நடக்கும் டிஸ்கஷன்!

த.வெ.க தலைவர் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கு போட்டியிடுவார் என்கிற பரபரப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பலமாக எழுந்துள்ளது. இந்நிலையில் த.வெ.க தரப்பில் தமிழகம் முழுவதும் நடத்திய சர்வேயில் த.வெ.கவ... மேலும் பார்க்க

LPG விலை உயர்வு: ``உண்மையிலேயே தட்டுப்பாடு உள்ளதா அல்லது..." - மம்தா பானர்ஜி எழுப்பும் கேள்வி!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) விலை உயர்ந்து வருகிறது. சிலப் பகுதிகளில் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மேற்கு வங்க ... மேலும் பார்க்க

விமர்சிக்கப்பட்ட‌ ராஜ்ய சபா வருகை விவகாரம்: `சம்பளம் வாங்க மட்டுமே சபைக்கு போகல!' - அன்புமணி தரப்பு

தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் டாக்டர் அன்புமணி. அதிமுக சார்பில் இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என இருந்த நிலையில், ஒரு இடத்தை அன்புமண... மேலும் பார்க்க

`தடைபோடும் எ.வ.வேலு; சிதைக்கப்படும் இஸ்லாமியர் பிரதிநிதித்துவம்’ - ஆட்டம் காணும் ஆம்பூர் தொகுதி

திருப்பத்தூர் மாவட்டத்தில், பிரியாணிக்குப் பெயர்போன ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் பட்டியலின மக்களும், இஸ்லாமியர்களுமே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர். ஆனால், `இந்த இரண்டு சமூக... மேலும் பார்க்க

கம்யூனிஸ்டுகளின் 'இரட்டை இலக்கு' கனவும் ஸ்டாலினின் 'கறார்' முடிவும்! - எப்போ முடியும் பங்கீடு?

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.கதர் சட்டைகளுடன் இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில், தற்போ... மேலும் பார்க்க

'ஒரே ஒரு தொகுதியிலாவது தனிச்சின்னம்...' - கூடிப் பேசி முடிவெடுத்த வைகோ? - ஏற்குமா அறிவாலயம்?

திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென ஒரு அவசர உயர்நிலைக் குழுவை கூட்டி கூட்டணி விவகாரங்கள் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை செய்திர... மேலும் பார்க்க