செய்திகள் :

``முடிந்த பணிக்கு மீண்டும் டெண்டரா?” – தூத்துக்குடி மாநகராட்சியில் சர்ச்சை!

post image

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரே பணிக்கு இரண்டு முறை டெண்டர் விடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பா.ஜ.கவின் மனு மீதான விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, ஒரு மூத்த வழக்கறிஞரை ஆணையராக நியமித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சித்ராங்கதன், மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், `தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தால் கடந்த 04.04.2025 அன்று மின்னணு ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் ஐந்து பணிகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றில் 1, 2 மற்றும் 5-வது எண்களில் இடம்பெற்ற பணிகளாக, தூத்துக்குடி மாநகராட்சி 12-வது வார்டு பி.என்.டி நகரில் பூங்கா அமைத்தல், மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறச் சாலையில் நடைபாதை பயிற்சிக்காக தார் சாலை அமைத்தல் மற்றும் கருப்பட்டி சொசைட்டி ஜங்ஷனில் உள்ள போக்குவரத்து வட்டப்பாதைக்கு வேலி அமைத்து மின்விளக்குகள் நிறுவுதல் ஆகிய பணிகளுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டிருந்தது.

பணி முடிக்கப்பட்ட பூங்கா

ஆனால், இந்த பணிகள் அனைத்தும் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு கடந்த 17.02.2025 அன்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் சமூக நலத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் ஆகியோர் முன்னிலையில் திறப்பு விழா நடத்தப்பட்டது.

ஆனால்,  ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளுக்காக மீண்டும் டெண்டர் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த பணிகளுக்கான டெண்டர்களை ரத்து செய்யுமாறு கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தேன். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் இடைக்கால தடை உத்தரவும் பெறப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அடங்கிய அமர்வில் இன்று (11.03.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி அரசுத் தரப்பில் வாதிட்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு மூத்த வழக்கறிஞரை ஆணையராக நியமித்து, குறிப்பிட்ட மூன்று பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வரும் 18.03.2026க்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்" என்றார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரே பணிக்கு இரண்டு முறை டெண்டர்  விடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றக் கிளை ஆணையரை நியமித்திருப்பது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 ஆண்டுகளாக படுத்தப் படுக்கையாக இருக்கும் மகன்; `கருணை கொலை' கோரிய பெற்றோர் - நீதிமன்றம் அனுமதி!

2013-ல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஹரிஷ் ராணா என்ற மாணவர் தான் தங்கி இருந்த மாணவர் விடுதியின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து பலத்த காயமடைந்தார். இந்தச் சோகமான விபத்துக்குப் பிறகு கடந்த ... மேலும் பார்க்க

மதுராந்தகம் சிறுமி வன்கொடுமை கொடூரம்: `பொதுநல வழக்கு தாக்கல் செய்தால், விசாரணை.!' - உயர் நீதிமன்றம்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தன் தோழிகளான தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி, அவரது தோழியான 16 வயது சிறுமி ஆகியோருடன், நேற்று முன... மேலும் பார்க்க

கோவை மாணவி பாலியல் வழக்கு: 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கோவைஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கும், தனியார் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் 20 வயதுமாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2025 நவம்பர் 2-ம் தேதிகோவைவிமான நிலைத்தின்... மேலும் பார்க்க

'வீட்டில் சிலுவை இருக்கிறது என்பதற்காக கிறிஸ்தவராகிவிட்டார் என அர்த்தமாகாது'- மும்பை உயர் நீதிமன்றம்

மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவை சேர்ந்த பட்டியலின மாணவர் ஒருவர் தனக்கு பட்டியலின சாதிச்சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மாணவர... மேலும் பார்க்க

அமைச்சர் நேரு மீது FIR பதிவு செய்யாத வழக்கு - லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டும், வழக்குப் பதிவு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ந... மேலும் பார்க்க

`அழுகை; சிரிப்பு.!' சிபிஐ-யை லெஃப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்; விடுவிக்கப்பட்ட கெஜ்ரிவால்! முழுவிவரம்

இந்திய அரசியலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் புயலை கிளப்பிக் கொண்டிருந்த 'டெல்லி மதுபானக் கொள்கை ஊழல்' வழக்கில் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பம் ஏற்பட்டுள்ளது. டெல்லி முன்னாள் முதலமைச்சர்... மேலும் பார்க்க