செய்திகள் :

கோவை மாணவி பாலியல் வழக்கு: 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

post image

கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கும், தனியார் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் 20 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2025 நவம்பர் 2-ம் தேதி கோவை விமான நிலைத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில் இரவு 11 மணியளவில் இருவரும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

கோவை மாணவி வழக்கு
கோவை மாணவி வழக்கு

அப்போது அங்கு திடீரென வந்த 3 பேர் கொண்ட கும்பல், கார் கண்ணாடியை உடைத்து வினீத்தை கத்தியால் சரமாரியாக குத்தி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தவசி ஆகிய 3 பேரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர். இதுதொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 4 மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது.

கருப்பசாமி
காளீஸ்வரன்

அரசுத் தரப்பில் 72 சாட்சிகளாக விசாரித்தனர். சாட்சி விசாரணை மற்றும் அனைத்துத் தரப்பு வாதங்கள் நிறைவடைந்தன. இதுதொடர்பாக 270 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதால் கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. மூன்று பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பளித்துள்ளார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜிஷா செய்தியாளர்களிடம், “பாதிக்கப்பட்ட மாணவியும், ஆண் நண்பரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

கோவை மாணவி பாலியல் வழக்கு
ஜிஷா

அன்றைய தினம் இயற்கை உபாதையை கழிக்க சென்றபோதுதான் அவர்கள் 2 பேரையும் தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சம், அவரின் நண்பருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். சம்பவம் நடைபெற்ற 126 நாள்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

'வீட்டில் சிலுவை இருக்கிறது என்பதற்காக கிறிஸ்தவராகிவிட்டார் என அர்த்தமாகாது'- மும்பை உயர் நீதிமன்றம்

மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவை சேர்ந்த பட்டியலின மாணவர் ஒருவர் தனக்கு பட்டியலின சாதிச்சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மாணவர... மேலும் பார்க்க

அமைச்சர் நேரு மீது FIR பதிவு செய்யாத வழக்கு - லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டும், வழக்குப் பதிவு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ந... மேலும் பார்க்க

`அழுகை; சிரிப்பு.!' சிபிஐ-யை லெஃப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்; விடுவிக்கப்பட்ட கெஜ்ரிவால்! முழுவிவரம்

இந்திய அரசியலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் புயலை கிளப்பிக் கொண்டிருந்த 'டெல்லி மதுபானக் கொள்கை ஊழல்' வழக்கில் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பம் ஏற்பட்டுள்ளது. டெல்லி முன்னாள் முதலமைச்சர்... மேலும் பார்க்க

உடைந்து அழுத கெஜ்ரிவால் - மதுபான கொள்கை ஊழல் வழக்கில் இருந்து விடுவிப்பு: சிபிஐக்கு கடும் கண்டனம்!

டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மதுபானக்கொள்கை ஊழல் விவகாரத்தில் அம்மாநிலத்தில் முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் 2024ம் ஆண்டு செப்டம்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி அரசுக்க... மேலும் பார்க்க

பாஜக அரசு vs நீதித்துறை: `NJAC (2014) டு NCERT (2026)' - ஆண்டுகள் கடந்தும் தொடரும் ‘நிழல் யுத்தம்’

என்.சி.இ.ஆர்.டி பாட புத்தகத்தில் இந்திய நீதித்துறையில் ஊழல்கள் என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றிருந்ததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. `இதில் தொடர்புடையவர்கள் அத்தனை பேரும் நிச்சயம... மேலும் பார்க்க

தவெக வழக்கு : `எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளீர்கள்?' - உயர் நீதிமன்றம் காட்டம் | முழு விவரம்

கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கான வழிகாட்டு ந... மேலும் பார்க்க