செய்திகள் :

TVK: '6 சிலிண்டர்கள் இலவசம், அண்ணன் சீர்; பெண்களுக்கு மாதம் ரூ.2500' - விஜய்யின் தேர்தல் அறிக்கை!

post image

தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. திரண்டிருந்த பெண் நிர்வாகிகள் மத்தியில் விஜய் உரை ஆற்றினார்.

விஜய்
விஜய்

விஜய் பேசியதாவது, "நெஞ்சில் குடியிருக்கும் சிங்கப்பெண்கள் அத்தனை பேருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். ஒரு ஊரில் ஒரு பெரிய கோயில் யானை இருந்தது. அது உஷாரான யானை. யாராலும் ஏமாற்ற முடியாது. ஆனால், ஒரு ஜகஜால கில்லாடி அந்த யானையை ஏமாற்றிவிட்டார்.

எப்படி என்றால் தேங்காய் முடிக்குள் சுண்ணாம்பை வைத்துக் கொடுத்திருக்கிறார். அந்த யானையும் சாப்பிட்டுவிட்டது. 'ஏமாத்துறதெல்லாம் தொழில் ரகசியம்' என அந்த ஆள் தன் நண்பனிடம் பெருமை பேசியிருக்கிறார். கொஞ்ச நாட்கள் கழித்து அந்த நண்பர்கள் மீண்டும் சந்தித்திருக்கிறார்கள்.

'ஒரு வேளை அந்த யானை முதல் தடவை என்பதால் தெரியாமல் ஏமாந்திருக்கும்' என்று நண்பன் சொல்ல, 'நான் மீண்டும் ஏமாற்றி காட்டுகிறேன்' என அந்த ஜகஜால கில்லாடி சொல்கிறான். வாழைப் பழத்தை வாங்கி அதில் பஞ்சைத் திணித்து யானைக்கு மீண்டும் கொடுக்கிறான். இப்போது யானை தும்பிக்கையைச் சுழற்றி அவனை வீசி எறிகிறது. அந்த யானைதான் நாம்.

பெண்களுக்காக தவெகவின் சில முக்கிய அறிவிப்புகள்:

பெண்கள், குழந்தைகள், முதியோருக்கான தனி இலாகா அமைக்கப்படும். அது என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும்.

மதிப்புமிகு மகளிர் திட்டம் - மகளிர் உரிமைத் தொகை வெறும் 1000 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது. நம்முடைய அரசில் 60 வயது வரையுள்ள மகளிருக்கு மாதாமாதம் 2500 ரூபாய் வழங்கப்படும். மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு விதி விலக்கு.

அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் - வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

அண்ணன் சீர் - பெண்களின் திருமணத்துக்குத் தரமான பட்டுப் புடவையும் ஒரு பவுன் தங்கமும் வழங்கப்படும்.

காமராஜர் கல்வி உறுதித் திட்டம் - மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க தாய் அல்லது பாதுகாவலருக்கு 15,000 ரூபாய் உதவித்தொகை

விஜய்
விஜய்

வெற்றிப் பயணம் திட்டம் - அரசுப் போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம்.

ராணி வேலுநாச்சியர் படை - பெண்கள் பாதுகாப்புக்கு ராணி வேலுநாச்சியார் படை. சாதாரண உடையில் கேமராக்களுடன் பெண்கள் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள்.

அஞ்சலையம்மாள் அதிவிரைவு நீதிமன்றங்கள் - பெண்களுக்கு Import குற்றங்களை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றம்.

TVK: "வருத்தப்படாதீங்க; அதெல்லாம் அவ்வளவு வொர்த் இல்ல!" - சமீப பிரச்னைகள் பற்றி விஜய்

மாமல்லபுரத்தில் தவெக சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் திரண்டிருந்த பெண் நிர்வாகிகள் மத்தியில் தவெக தலைவர் விஜய் பெண்களுக்கான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, சமீபத்தி... மேலும் பார்க்க

வாயைத் திறக்காத தலைமை; காத்திருப்பில் உடன்பிறப்புக்கள்; திமுக விருப்ப மனு அப்டேட்!

முடிந்த விருப்ப மனு விநியோகம்!கடந்த பிப்ரவரி 20-ம் தேதி திமுகவில் தொடங்கிய விருப்ப மனு விநியோகம் மார்ச் 2-ம் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிப்பு வெளியானது. கூடுதலான விருப்ப மனு வந்த காரணத்தினால் கடை... மேலும் பார்க்க

மாவட்டம் Vs வாரிசு; அண்ணா நகருக்குக் குறிவைக்கும் இருவர்! யாரை டிக் அடிக்கப் போகிறார் மாப்பிள்ளை?

உடன்பிறப்புகளிடம் விருப்ப மனுக்களை வாங்கி முடித்திருக்கிறது அறிவாலயம். கருணாநிதி போட்டியிட்ட சென்னையின் 'அண்ணா நகர்' தொகுதியைப் பிடிக்க சபரீசனின் ஒப்புதலுடன் மாவட்டச் செயலாளர் சிற்றரசுவும் சிட்டிங் எம... மேலும் பார்க்க

அண்ணா அறிவாலயத்தில் கவனம்பெற்ற `தளபதி அறிவாலயம்’ - வாணியம்பாடியைக் கைப்பற்றுமா திமுக?

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிட விரும்பும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளரான வி.எஸ்.ஞானவேலன் சீட்டுக்கான ரேஸிலும் முந்துகிறார். இந்த நிலையில், அண்ணா அற... மேலும் பார்க்க

ஈரோடு: எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வைத்திருந்த பேனர்கள் - இரவோடு இரவாக கிழித்துச் சென்ற மர்ம நபர்கள்

'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் ' என்ற‌ பெயரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டாரப் ... மேலும் பார்க்க

Christopher Tilak: "உழைக்கும் தொண்டனுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்" - கிறிஸ்டோபர் திலக்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான கிறிஸ்டோபர் திலக், மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, இன்று திருச்சி ... மேலும் பார்க்க