செய்திகள் :

TVK: "வருத்தப்படாதீங்க; அதெல்லாம் அவ்வளவு வொர்த் இல்ல!" - சமீப பிரச்னைகள் பற்றி விஜய்

post image

மாமல்லபுரத்தில் தவெக சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் திரண்டிருந்த பெண் நிர்வாகிகள் மத்தியில் தவெக தலைவர் விஜய் பெண்களுக்கான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, சமீபத்திய சர்ச்சைகள் குறித்தும் பேசியிருக்கிறார்.

Vijay
Vijay

பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய், குடும்பத்துக்கு 6 சிலிண்டர்கள் இலவசம், மாணவர்களின் தாய்க்கு 15,000 ரூ உதவித்தொகை எனப் பல முக்கிய அறிவிப்புகளையும் விஜய் வெளியிட்டிருந்தார்.

விஜய் தனது உரையை முடிக்கையில், "சமீபமாக நிறைய பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதற்காக நீங்கள் வருந்துவதைப் பார்க்க முடிகிறது. அதைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருக்கிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நாம் எல்லாரும் சேர்ந்து மக்கள் பிரச்னைகளைப் பார்ப்போம். அவ்வளவு எல்லாம் வருத்தப்படாதீர்கள். அது வொர்த் இல்லை" என்றார்.

Vijay
Vijay

தவெகவின் இந்த நிகழ்வில் துறைவாரியாக சாதித்த பல பெண்களையும் நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி விஜய் கௌரவித்திருந்தார். தவெக சார்பில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட மகளிரணி நிர்வாகிகளுக்கும் இந்த நிகழ்வில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

வாயைத் திறக்காத தலைமை; காத்திருப்பில் உடன்பிறப்புக்கள்; திமுக விருப்ப மனு அப்டேட்!

முடிந்த விருப்ப மனு விநியோகம்!கடந்த பிப்ரவரி 20-ம் தேதி திமுகவில் தொடங்கிய விருப்ப மனு விநியோகம் மார்ச் 2-ம் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிப்பு வெளியானது. கூடுதலான விருப்ப மனு வந்த காரணத்தினால் கடை... மேலும் பார்க்க

TVK: '6 சிலிண்டர்கள் இலவசம், அண்ணன் சீர்; பெண்களுக்கு மாதம் ரூ.2500' - விஜய்யின் தேர்தல் அறிக்கை!

தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. திரண்டிருந்த பெண் நிர்வாகிகள் மத்தியில் விஜய் உரை ஆற்றினார்.விஜய்விஜய் பேசியதாவது, "நெஞ்சில் குடியிரு... மேலும் பார்க்க

மாவட்டம் Vs வாரிசு; அண்ணா நகருக்குக் குறிவைக்கும் இருவர்! யாரை டிக் அடிக்கப் போகிறார் மாப்பிள்ளை?

உடன்பிறப்புகளிடம் விருப்ப மனுக்களை வாங்கி முடித்திருக்கிறது அறிவாலயம். கருணாநிதி போட்டியிட்ட சென்னையின் 'அண்ணா நகர்' தொகுதியைப் பிடிக்க சபரீசனின் ஒப்புதலுடன் மாவட்டச் செயலாளர் சிற்றரசுவும் சிட்டிங் எம... மேலும் பார்க்க

அண்ணா அறிவாலயத்தில் கவனம்பெற்ற `தளபதி அறிவாலயம்’ - வாணியம்பாடியைக் கைப்பற்றுமா திமுக?

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிட விரும்பும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளரான வி.எஸ்.ஞானவேலன் சீட்டுக்கான ரேஸிலும் முந்துகிறார். இந்த நிலையில், அண்ணா அற... மேலும் பார்க்க

ஈரோடு: எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வைத்திருந்த பேனர்கள் - இரவோடு இரவாக கிழித்துச் சென்ற மர்ம நபர்கள்

'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் ' என்ற‌ பெயரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டாரப் ... மேலும் பார்க்க

Christopher Tilak: "உழைக்கும் தொண்டனுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்" - கிறிஸ்டோபர் திலக்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான கிறிஸ்டோபர் திலக், மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, இன்று திருச்சி ... மேலும் பார்க்க