செய்திகள் :

நடிகரும் இயக்குநருமான தக்காளி சீனிவாசன் காலமானார் - பெங்களூரு ஆசிரமத்தில் உயிர் பிரிந்தது!

post image

நடிகர், வசனகர்த்தா, இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பல முகங்களாகப் பணிபுரிந்த 'தக்காளி' சீனிவாசன் நேற்று பெங்களூருவில் காலமானார். அவர் உடலடக்கம் இன்று நடக்கிறது.

நடிகை சரணயா தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆன முதல் படமான 'மனசுக்குள் மத்தாப்பூ' படத்தைத் தயாரித்தது இவர்தான். இப்படத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே சரண்யாவுக்கு நாயகன் அறிமுகப் படமாக ரிலீஸ் ஆனது என்கிறார்கள்.

தயாரிப்பாளர் ஆவதற்கு முன் பல படங்களில் குணச்சித்திர மற்றும் நெகடிவ் வேடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார் இவர். சூரசம்ஹாரம் படத்தில் இவரது நெகடிவ் கேரக்டர் பேசப்பட்டது எனச் சொல்லலாம்.

அசோகவனம் உள்ளிட்ட சில படங்களை இயக்கவும் செய்த சீனிவாசன், 'நாளைய மனிதன்' உட்பல சில படங்களுக்கு 'பிரேமி - ஸ்ரினி' என்கிற பெயரில் இசையமையக்கவும் செய்தார்.

'மனசுக்குள் மத்தாப்பூ' தவிர ஜென்ம நட்சத்திரம், அதிசய மனிதன், விட்னஸ் ஆகியவையும் இவர் தயாரிப்பில் வெளியான படங்களே.

மனசுக்குள் மத்தாப்பூ

ஒரு கட்டத்தில் சினிமாவுக்கு ஓய்வு கொடுத்தவர், கடந்த சில வருடங்களாக பெங்களூருவில் வசித்து வந்தார். அங்கு ஆதரவற்றவர்களுக்கு ஆசிரமம் ஒன்றை நிறுவி நடத்தி வந்தார் என்கிறர்கள். கடந்த சில மாதங்களாக உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார்.

தமிழ் திரையுலகினர் பலரும் சீனிவாசனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காதல் அறை ஒண்ணு விழுந்துச்சு: `அறை என்பது வலிதான், ஆனாலும்.!' - Lyricist முத்தமிழ் | வரித்துணையே 8

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க

Aaranya Kaandam Release: "'சப்பை' கேரக்டருக்கும் ஆடிஷன் கொடுத்தேன்; ஆனால்" - குரு சோமசுந்தரம் பேட்டி

தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படமாக இன்றும் கொண்டாடப்படும் படமான 'ஆரண்ய காண்டம்' மீண்டும் ரீரிலீஸ் ஆகிறது. 2011ல் வெளியான இப்படம் ப்ளாக் காமெடி ஜானராகவும் பெயரை அள்ளியது. 'ஆரண்ய காண்டம்' மூலம் சிறந்... மேலும் பார்க்க

Karuppu: 'எனக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டைனு போடுறாங்க!' - 'கருப்பு' பட அப்டேட் தந்த ஆர்.ஜே. பாலாஜி

சூர்யா, த்ரிஷா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் 'கருப்பு' படத்தின் ரிலீஸுக்காகத்தான் சூர்யா ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி எங்கு சென்றாலும், அவரை கருப்பு படத்தின் அப்டேட... மேலும் பார்க்க