செய்திகள் :

`எங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம்..!' - அன்புமணி ராமதாஸ்

post image

தங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறார்.

தாம்பரத்தில் நேற்று (மார்ச்.10) பாமக சார்பில் மகளிர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசியிருக்கும் அன்புமணி ராமதாஸ், " கடந்த ஆறு மாதங்களாக நடக்கும் எல்லா விஷயங்களையும் நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். அது எல்லாவற்றையும் நாம் கடந்து வந்துவிடுவோம்.

 அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

ஐயா (ராமதாஸ்) ஒரு சமூக சீர்த்திருத்தவாதி. நமக்கு எல்லாம் குலதெய்வம், குலவிளக்கு ஐயா தான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஐயா இன்றைக்கு 10 வயது குழந்தை மாதிரி ஆகிவிட்டார்.

அதைப் பயன்படுத்திக்கொண்டு சுற்றி இருக்கும் தீய சக்திகள், துரோகிகள், திமுக கைக்கூலிகள் எல்லாம் சேர்ந்து அவர் மனதை கெடுத்து எங்கள் குடும்பத்தை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

ஆனால் இதையெல்லாம் கடந்து இந்தக் கட்சி, தமிழ் சமுதாயம், பெண்கள் பாதுகாப்பு எல்லாம் நமக்கு முக்கியம். ஆனால் நான் பலமாக இருக்க நீங்கள் தான் காரணம். தமிழ்நாட்டில் இருக்கும் பெரிய பெரிய தலைவர்களுக்கு கிடைக்காத தம்பி, தங்கைகள் எனக்கு கிடைத்திருக்கிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.

தூத்துக்குடி துறைமுகம்: ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகளைக் கையாண்டு இந்திய அளவில் சாதனை!

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சரக்குகளைக் கையாளுவதில் ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகளைக் கையாண்டு தேசிய சாதனையைப் படைத்துள்ளது. இதுகுறித்து பேசிய துறைமுக ஆண... மேலும் பார்க்க

கோவை: அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு - அதிர்ச்சி பின்னணி!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்துள்ளது. இதை அறியாமல் உணவருந்திய மாணவ, மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ... மேலும் பார்க்க

10ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவிகள் - அரசுப் பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை கடித்த வெறி நாய்!

தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக இன்று காலை பள்ளிக்கு சென்றனர். தேர்வு தொடங்குவதற்கு முன்... மேலும் பார்க்க

அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலாகும் ஈரான் 'டிரோன்கள்' - உக்ரைனுக்கு 'நோ' சொன்ன விளைவு இது!

அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே வளர்ச்சி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்திலும் மிகப்பெரிய நாடுகள். இந்த விஷயங்களில் ஈரானை ஒப்பிட்டால், அதற்குக் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும். ஆனாலும், 12 நாள்களாகப்... மேலும் பார்க்க

'கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலனே முக்கியம்!' - திமுகவிடம் துரை வைகோ சரண்டர்?

திமுக கூட்டணியில் இன்னும் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கும் இடங்களுக்கும் திமுக தர விரும்பும் இடங்களுக்கும் ஒத்துப்போகாததால் இழுபறி நிலவுகிறது... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் தவெக? "EPS-ஸிடம்தான் கேட்க வேண்டும்; ஏனென்றால்" - பியூஸ் கோயலின் பதில் என்ன?

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நேற்று (மார்ச். 10) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், 'த... மேலும் பார்க்க