செய்திகள் :

தூத்துக்குடி துறைமுகம்: ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகளைக் கையாண்டு இந்திய அளவில் சாதனை!

post image

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சரக்குகளைக் கையாளுவதில் ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகளைக் கையாண்டு தேசிய சாதனையைப் படைத்துள்ளது.

இதுகுறித்து பேசிய துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோகித், “இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே கப்பலில் இருந்து 147 காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களைக் கையாண்டு தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி ஒரே கப்பலில் 103 காற்றாலை இறகுகளைக் கையாண்டதே சாதனையாக இருந்தது.

காற்றாலை இறகுகள் ஏற்றி வந்த கப்பல்
காற்றாலை இறகுகள் ஏற்றி வந்த கப்பல்

தற்போது அந்தச் சாதனையை வ.உ.சி துறைமுகம் முறியடித்துள்ளது. சீனாவின் 'சின்சோ' (Qinzhou) துறைமுகத்திலிருந்து 'எம்.வி. போ ரன் ஜியூ சோ'என்ற கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட, தலா 76 மீட்டர் நீளமுள்ள இந்த 147 இறகுகளும் வெற்றிகரமாக இறக்கி முடிக்கப்பட்டன.

75% அதிரடி வளர்ச்சி

இந்த நிதியாண்டில் பிப்ரவரி 2026 வரை வ.உ.சி துறைமுகம் மொத்தம் 4,211 காற்றாலை இறகுகளைக் கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் (2,395 இறகுகள்) ஒப்பிடுகையில் 75.82% வளர்ச்சியாகும்.

காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் இந்தியாவின் முன்னணி துறைமுகமாகத் திகழும் வ.உ.சி துறைமுகம், தனது உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்தி வருகிறது.

காற்றாலைகள் இறக்குமதி
காற்றாலைகள் இறக்குமதி

துறைமுகத்தின் உட்பகுதியில் 60,000 சதுர மீட்டர் கூடுதல் சேமிப்பு இடம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் மேலும் 1,80,000 சதுர மீட்டர் பரப்பளவு சேமிப்பு வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

பிரதமர் நரேந்திர மோடியின் 'Maritime Amrit Kaal Vision 2047' திட்டத்தின்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த கடல்சார் துறையை உருவாக்க இத்துறைமுகம் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது” என்றார்.  

`எங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம்..!' - அன்புமணி ராமதாஸ்

தங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறார். தாம்பரத்தில் நேற்று (மார்ச்.10) பாமக சார்பில் மகளிர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ந... மேலும் பார்க்க

கோவை: அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு - அதிர்ச்சி பின்னணி!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்துள்ளது. இதை அறியாமல் உணவருந்திய மாணவ, மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ... மேலும் பார்க்க

10ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவிகள் - அரசுப் பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை கடித்த வெறி நாய்!

தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக இன்று காலை பள்ளிக்கு சென்றனர். தேர்வு தொடங்குவதற்கு முன்... மேலும் பார்க்க

அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலாகும் ஈரான் 'டிரோன்கள்' - உக்ரைனுக்கு 'நோ' சொன்ன விளைவு இது!

அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே வளர்ச்சி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்திலும் மிகப்பெரிய நாடுகள். இந்த விஷயங்களில் ஈரானை ஒப்பிட்டால், அதற்குக் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும். ஆனாலும், 12 நாள்களாகப்... மேலும் பார்க்க

'கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலனே முக்கியம்!' - திமுகவிடம் துரை வைகோ சரண்டர்?

திமுக கூட்டணியில் இன்னும் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கும் இடங்களுக்கும் திமுக தர விரும்பும் இடங்களுக்கும் ஒத்துப்போகாததால் இழுபறி நிலவுகிறது... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் தவெக? "EPS-ஸிடம்தான் கேட்க வேண்டும்; ஏனென்றால்" - பியூஸ் கோயலின் பதில் என்ன?

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நேற்று (மார்ச். 10) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், 'த... மேலும் பார்க்க