செய்திகள் :

அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலாகும் ஈரான் 'டிரோன்கள்' - உக்ரைனுக்கு 'நோ' சொன்ன விளைவு இது!

post image

அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே வளர்ச்சி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்திலும் மிகப்பெரிய நாடுகள். இந்த விஷயங்களில் ஈரானை ஒப்பிட்டால், அதற்குக் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும்.

ஆனாலும், 12 நாள்களாகப் போர் தொடர்ந்தும், ஈரானை இன்னமும் வழிக்குக் கொண்டு வரமுடியவில்லை.

இந்தப் போரில் 'டிரோன்கள்' ஈரானுக்கு மிகப்பெரிய பக்க பலமாக இருந்து வருகிறது.

போரின் தொடக்கத்தில் டிரோன்களை அமெரிக்கா பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், இப்போது அது தான் அமெரிக்காவின் பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது.

ஈரானிய ஷாகேத் டிரோன்
ஈரானிய ஷாகேத் டிரோன்

விலை...

இப்படி அமெரிக்காவிற்குத் தலைவலியாக ஈரான் பயன்படுத்தும் டிரோன் வகையின் பெயர், 'ஈரானிய ஷாகேத் டிரோன்'.

ஒவ்வொரு ஷாகேத் டிரோனின் விலையும் 20,000 - 50,000 டாலர்கள். ஆனால், அதை தகர்க்கும் அமெரிக்காவின் இடைமறிப்பான்கள் (Interceptors) விலையோ மில்லியன் கணக்கில்.

மேலும், டிரோன்களை எளிதாகக் குறுகிய காலத்தில் ஈரான் தயாரித்துவிடலாம். ஆனால், இடைமறிப்பான்களைத் தயாரிக்க பல மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை ஆகும்.

இதனால், ஷாகேத் டிரோன்களைத் தடுக்க ஒரு சிஸ்டத்தை அமைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

கண்டே பிடிக்க முடியவில்லை

டிரோன் விஷயத்தில் பணம் ஒரு பிரச்னை என்றால், அதை அமெரிக்கா இடைமறிப்பான்கள் கண்டுபிடிப்பதே பெரும் சிரமமாக இருக்கிறது.

ஆம்... அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பினால் அனைத்து ஷாகேத் டிரோன்களையும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

இந்த டிரோன்கள் மெதுவாகவும், குறைந்த உயரத்திலும் பறக்கக்கூடியது. இதனால், அமெரிக்க ரேடார்களால் இந்த டிரோன்களைக் கண்டுபிடிக்க முடிவதில்லை.

அதனால், இவை பிற நாடுகளுக்குள் புகுந்து எளிதாகத் தாக்குதல் நடத்துகின்றன. இது குறித்து அந்த நாடுகள் அமெரிக்காவிடம் புகாரளிப்பது அதற்குப் பெரும் பிரச்னையாக இருக்கிறது.

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி
ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி

அமெரிக்கா செய்த 'தவறு'

இந்த டிரோன் பிரச்னைகளை அமெரிக்கா எளிதாக தவிர்த்திருந்திருக்கலாம். ஆனால், அமெரிக்கா செய்த ஒரு 'தவறு' இப்போது பெரும் பிரச்னையாக இருக்கிறது.

2022-ம் ஆண்டில் இருந்து உக்ரைன் மீது ரஷ்யா பொழிந்து வருவது இந்த வகையான டிரோன் தான். அதனால், அதை தடுக்கத் தேவையான அமைப்பை வைத்திருக்கிறது உக்ரைன்.

இதை இன்னமும் வலுப்படுத்த அமெரிக்காவிடம் நிதியுதவி கேட்டது உக்ரைன். பதிலுக்கு உக்ரைன் அமெரிக்காவிற்கு அந்த அமைப்பைத் தருவதாகத் தெரிவித்திருந்தது.

ஆனால், அதை அமெரிக்கா மறுத்துவிட்டது. அது தான் இப்போது அமெரிக்காவின் பூதாகரச் சிக்கலாக மாறி நிற்கிறது.

தூத்துக்குடி துறைமுகம்: ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகளைக் கையாண்டு இந்திய அளவில் சாதனை!

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சரக்குகளைக் கையாளுவதில் ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகளைக் கையாண்டு தேசிய சாதனையைப் படைத்துள்ளது. இதுகுறித்து பேசிய துறைமுக ஆண... மேலும் பார்க்க

`எங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம்..!' - அன்புமணி ராமதாஸ்

தங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறார். தாம்பரத்தில் நேற்று (மார்ச்.10) பாமக சார்பில் மகளிர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ந... மேலும் பார்க்க

கோவை: அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு - அதிர்ச்சி பின்னணி!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்துள்ளது. இதை அறியாமல் உணவருந்திய மாணவ, மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ... மேலும் பார்க்க

10ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவிகள் - அரசுப் பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை கடித்த வெறி நாய்!

தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக இன்று காலை பள்ளிக்கு சென்றனர். தேர்வு தொடங்குவதற்கு முன்... மேலும் பார்க்க

'கட்சியின் நலனை விட தமிழகத்தின் நலனே முக்கியம்!' - திமுகவிடம் துரை வைகோ சரண்டர்?

திமுக கூட்டணியில் இன்னும் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கும் இடங்களுக்கும் திமுக தர விரும்பும் இடங்களுக்கும் ஒத்துப்போகாததால் இழுபறி நிலவுகிறது... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் தவெக? "EPS-ஸிடம்தான் கேட்க வேண்டும்; ஏனென்றால்" - பியூஸ் கோயலின் பதில் என்ன?

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நேற்று (மார்ச். 10) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், 'த... மேலும் பார்க்க