விஜய்க்கு எதிராக யாரை நிறுத்துவது? - தி.மு.க முகாமில் நடக்கும் டிஸ்கஷன்!
Nagarjuna 100 : "இந்த படத்துக்கு என்னை தேர்வு பண்ணினதுக்குக் காரணம்.!" - இயக்குநர் ரா. கார்த்தி
நாகர்ஜுனாவின் 100-வது படத்தை 'நித்தம் ஒரு வானம்' இயக்குநர் ரா.கார்த்திக் இயக்குவதாக 'கூலி' படத்தின் ரிலீஸ் சமயத்தில் நாகர்ஜுனாவே ஒரு நிகழ்வில் அறிவித்திருந்தார்.

இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கும் 'மேட் ஒன் கொரியா' திரைப்படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
இப்படத்திற்காக இயக்குநர் ரா. கார்த்திக் சினிமா விகடன் யூட்யூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் இப்படம் தொடர்பாகப் பேசியிருக்கிறார்.
அவர், "ஷூட் ஆரம்பிச்சு போயிட்டு இருக்கு. நாக் சார் ஸ்டைலிஷா, சூப்பரா இருக்காரு. நமக்குப் பிடித்த 'சிவா', 'ரட்சகன்' மாதிரியான வைப் இந்தப் படத்துல இருக்கும்.
இந்தப் படத்துல அவரை வித்தியாசமான கெட்டப்களில் நீங்க பார்ப்பீங்க. நான் அவர்கிட்ட, 'நம்மள விட நல்ல டைரக்டர்ஸ் அங்கேயே இருக்காங்க, நல்ல ஸ்கிரிப்ட் வச்சிருக்க உதவி இயக்குநர்களும் இருக்காங்க.
ஆனா, 100வது படத்திற்கு இங்க இருந்து நான் வரேனே, அது உங்களுக்கு ஓகேவா'ன்னு அவர்கிட்டயே கேட்டேன்.

அவரும் 'ஓகே'ன்னார். அதுதான் அவரோட சிறப்பு. நாகர்ஜுனா சார் கடந்த 40 வருஷமா எல்லாத்தையுமே பண்ணிருக்காரு, எல்லாத்தையுமே பிரேக் பண்ணிருக்காரு.
இங்க இருந்து மணி சாரை கூட்டிட்டு போய் 'கீதாஞ்சலி' பண்ணதும் அவர்தான். பிரியதர்ஷன் சாருக்கும் அப்படி நடந்துருக்கு.
நிறைய தமிழ் கலைஞர்களுடன் வேலை பார்த்திருக்கிறார். மலையாள இயக்குநர்கள் நிறைய பேரோட முதல் தெலுங்கு படம் அவர்கூட பண்ணினதாகத்தான் இருக்கும்." எனத் தெரிவித்தார்.













