செய்திகள் :

`துரோகம் செய்த சி.வி.சண்முகத்தை கட்சியை விட்டு தூக்குங்க!' - விழுப்புரம் அதிமுகவில் உட்கட்சி பூசல்

post image

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் பேட்டை முருகன் தலைமையில், அவருடைய ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி-யுமான சி.வி.சண்முகத்திற்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் சி.வி.சண்முகத்தின் சுயநலத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க தோல்வியை தழுவியுள்ளது. இதற்கு சிவி.சண்முகம்தான் பொறுப்பேற்க வேண்டும். அ.தி.மு.க என்பது ஒரு மாபெரும் இயக்கம். அதில் பல அணிகள் எல்லாம் கிடையாது. எப்போதும் அது ஒரே அணிதான். சிவி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் போன்றவர்களின் சுயநலம் மற்றும் பதவி ஆசையாலும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கத்தாலும்தான் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு த.வெ.க-விற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

விழுப்புரம் அதிமுக

அ.தி.மு.க-வில் பதவி சுகத்தையும், பணத்தையும் சம்பாதித்துவிட்டு கட்சிக்கு துரோகம் செய்கிறார்கள். அவர்களால் அ.தி.மு.க-வை ஒன்றும் செய்ய முடியாது. விரைவில் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். கட்சியை பிளவுபடுத்தும் நோக்கத்தில் செயல்பட்டால், பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி சிவி.சண்முகத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.

மேலும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சிக்கு துரோகம் செய்யும் சிவி.சண்முகம் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்களை விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் கண்டிக்கிறோம். சுனாமி போல வந்த த.வெ.க ஆட்சி, அதே சுனாமி போலவே கலைந்து விடும். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி வரும். விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றுமையாக இருப்போம்" என்றார்.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு - இரண்டே வாகனங்களுடன் பிரதமர் மோடி!

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்ட... மேலும் பார்க்க

Vijay : `கொளத்தூர் வெற்றியின் வீச்சைப் பார்த்துமா புரியவில்லை?' - உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதிலடி

இன்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனத்துக்கு தன் எக்ஸ் பக்கத்தில் முதல்வர் விஜய் பதிலளித்திருக்கிறார். அதில், ``என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும், வ... மேலும் பார்க்க

`சின்னம்மா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும்' - எஸ்.பி.வேலுமணி உறுதி!

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக 144 பேர் வாக்களித்திருந்தனர். இதில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இரண்டாகப் பிரிந்து, 25 பேர் தவெக-விற்கு ஆ... மேலும் பார்க்க

`6 அமைச்சர் பதவி; 10 வாரியப் பொறுப்பு; ஆசைகாட்டிய தவெக... அதிமுக-வுக்கு துரோகம்!' - இபிஎஸ் சாடல்

இன்று தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 234 சட்டமன்ற உறுப்பினர்களில், திமுக வெளிநடப்பு மற்றும் இதர காரணங்களால் 63 பேர் பங்கேற... மேலும் பார்க்க

கலைக்கப்பட்ட அரசுகள்; சிறைக்குச் சென்ற முதல்வர்... தமிழ்நாடு சட்டசபையின் கடந்தகால ஹைலைட்ஸ்!

பதினேழாவது சட்டசபையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தவெக, இன்று தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இந்தச் சூழலில் கடந்த பதினாறு சட்டமன்ற நிகழ்வுகளின்போது நடந்த சில முக்கிய சம்பவங்களைத் திரும்பிப் பா... மேலும் பார்க்க

தவெக எம்.எல்.ஏ வழக்கு: `இது அடாவடித்தனம்!' - சென்னை உயர் நீதிமன்றத்தைக் கண்டித்த உச்ச நீதிமன்றம்

தமிழக அரசியலில் ஒரு ஓட்டு வித்தியாசம் ஏற்படுத்திய புயல் இன்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கரை கடந்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய உச்ச நீதிமன்ற... மேலும் பார்க்க