“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க' ; ராஜினாமா, மெளனம், திடீர் குழப்பம்" - செங்கோட்டையன் ர...
`தூங்கிவிட்டேனாம்’ கேக் வாங்கி சர்ப்ரைஸ் செய்ய நினைத்த கணவன் - வைரலான மனைவியின் `பிறந்தநாள்’ போஸ்ட்
மனைவி மற்றும் காதலியின் பிறந்தநாளை ஞாபகம் வைத்திருக்காத ஆண்கள் பெண்களிடம் கடுமையாக வாங்கிக்கட்டிக்கொள்வது வழக்கம். ஹரியானா மாநிலத்தில் தனது மனைவியின் பிறந்தநாளை நினைவில் வைத்திருந்து, அதனை கொண்டாட நினைத்த கணவனின் திட்டம் உறக்கத்தால் கெட்டுப்போனது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சோகம் என்பவர் தனது மனைவியின் பிறந்தநாளில் அவருக்கு ஆச்சரியம் கொடுக்க நினைத்தார். இதற்காக மனைவிக்கு தெரியாமல் கேக் மற்றும் சில அலங்கார பொருட்களை வாங்கி வந்து பிரிட்ஜில் வைத்தார்.
இரவு 9.30 மணிக்கு அவரது மனைவி உறங்கிவிட்டார். அதன் பிறகு சோகம் இரவு 12 மணி வரை டிவி பார்க்கலாம் என்று எண்ணி டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அவர் டிவியில் படம் ஒன்றை பார்த்தார். டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது அவருக்கு உறக்கம் வந்தது. இதனால் மொபைலில் 12 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு சிறிது நேரம் உறங்கலாம் என்று நினைத்து உறங்கினார்.

ஆனால் உறங்கியவர் 12 மணிக்கு எழும்பவேயில்லை. அவரது மொபைல் போன் அலாரம் அடித்துக்கொண்டே இருந்தது. இதில் அவரது மனைவிதான் எழுந்தார். ஏன் மொபைல் அடித்து கொண்டிருக்கிறது என்று கருதி எழுந்து அலாரத்தை ஆப் செய்துவிட்டு உறங்கினார். காலை 7 மணிக்கு சோகம் மனைவி எழுந்து பிரிட்ஜை திறந்து பார்த்தபோதுதான் அவருக்கு தனது கணவரின் திட்டம் தெரிய வந்தது.
மொபைல் அலாரம் அடித்ததும் இதற்குத்தான் என்று தெரிந்து கொண்டார். உடனே வாய்வலிக்க சிறித்த மனைவி தனது கணவன் தனது பிறந்தநாளை நினைவு வைத்திருந்ததை நினைத்து பெருமைப்பட்டார். இதை அப்படியே தனது சமூக வலைத்தள பக்கத்தில் அப்பெண் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், ``நள்ளிரவில் மொபைல் போன் அலாரம் அடித்தபோது எனக்கு எந்தவித சந்தேகமும் வரவில்லை. காலையில் எழுந்து பிரிட்ஜை திறந்து பார்த்தபோதுதான் எனது கணவரின் திட்டம் தெரிந்தது.
எனது பிறந்தநாளுக்காக கேக், அலங்கார பொருட்கள் வாங்கி வந்துள்ளார். ஆனால் அனைத்தையும் வைத்துவிட்டு உறங்கிவிட்டார். எனது பிறந்தநாளை நினைவில் வைத்து கேக்காவது வாங்கி வந்தாரே என்று நினைத்தேன். அவர் வாங்கி வந்த கேக்கை 12 மணிநேரம் கழித்து வெட்டி பிறந்த நாளைகொண்டாடினேன்''என்று குறிப்பிட்டு கேக் படத்தையும் பகிர்ந்துள்ளார்.


















