செய்திகள் :

தூத்துக்குடி: அஜிதா ஆக்னலுக்கு சீட் மறுப்பு; த.வெ.க கொடியை கழற்றி வீசிய ஆதரவாளர்கள்!

post image

தமிழக வெற்றிக் கழகம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. எந்தக் கட்சியுடணும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டிலை அறிவித்துள்ளார் விஜய்.

இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக தனது நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத்தை அறிவித்துள்ளார். கட்சி தொடங்கியது முதலே தூத்துக்குடி தொகுதியில் களப்பணி ஆற்றி வந்த அஜிதா ஆக்னல், தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால்,  தமிழ் மாநில காங்கிரஸின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலனின் உடன்பிறந்த சகோதரரான எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ், த.வெ.கவின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

ஸ்ரீநாத்

இதனால், அதிருப்தி அடைந்த அஜிதா ஆக்னல், பனையூரில் நடிகர் விஜய்யின் காரை வழிமறித்ததுடன் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இதனையடுத்து தூத்துக்குடிக்கு வந்த அஜிதா ஆக்னல், விரக்தியில் தூக்க மாத்திரைகளை போட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் த.வெ.க வேட்பாளராக நடிகர் விஜய்யின் நண்பர் நடிகர் மற்றும் இயக்குநருமான ஸ்ரீநாத் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு மனையியும், ஒரு மகளும் உள்ளனர். இவர், அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஜி.ஆர்.எட்மண்டின் சகோதரி மகன் என்பதும், மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு தூத்துக்குடி த.வெ.கவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டாக தூத்துக்குடியில் த.வெ.க சார்பில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார் அஜிதா ஆக்னல். மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காவிட்டாலும், எம்.எல்.ஏ சீட் கிடைக்கும் என்ற நினைப்பில் இருந்தவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

அஜிதா ஆக்னல், விஜய்

இதனால், அஜிதா ஆக்னலின் ஆதராவாளர்கள் தங்களின் கார்களில் இருந்த த.வெ.க கட்சிக் கொடியை அகற்றியும், வீடுகளில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களையும் கிழத்தனர். பெண்கள் பலரும் விசில்களை தரையில் போட்டு உடைத்தனர். சிலர் கொடியை தீயிட்டும் கொளுத்தி அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இது ஒருபுறமிருக்க அஜிதா ஆகன்லுக்கும், மாவட்ட செயலாளரன சாமுவேல்ராஜூவுக்கும் இடையே கோஷ்டிப்பூசலால், தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில்தான் சென்னையிலுள்ள தனது நண்பரான ஸ்ரீநாத்தை தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக்க விஜய் முடிவெடுத்தார் எனவும், இந்த யோசனையை கூறியதே பொதுச் செயலாளர் ஆனந்த்தான் என்கின்றனர்.  

'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் சீனா

அமெரிக்கா - ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது.இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது.ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி,... மேலும் பார்க்க

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க