செய்திகள் :

தூத்துக்குடி: நேபாள வெள்ளத்திற்குக் காரணம் என்ன? - விளக்கும் நிலத்தியல்துறை பேராசிரியர்!

post image

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த வெள்ளத்திற்கு காரணம் என்ன? என, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நிலத்தியல் துறை பேராசிரியர் முனைவர். செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “நேபாளம் – சீனா (திபெத்) எல்லைப் பகுதியில் கடந்த 27-ம் தேதி திடீர் பனிப்பொழிவு மற்றும் வெள்ளப்பேரழிவு உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செயற்கைகோள் படங்கள், ஆய்வுகளின் அடிப்படையில் இந்தப் பேரழிவிற்கு பனிப்பாறைகளின் உடைப்புதான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேபாள வெள்ளம்

உயரமான இமயமலைப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், குறிப்பாக எல்நினோ போன்ற கடுமையான காலநிலை மாற்றத்தினால் வெப்ப நிலை அதிகரித்துள்ளது. இதனால், பனிப்பாறைகள் வேகமாக உருகி, பனிக்கட்டிகளுக்கு இடையே நீர் தேங்கும் அளவு அதிகரித்துள்ளது. இந்த நீர், மிகுந்த அழுத்தத்தை உருவாக்கி பனிப்பாறைகளின் உள்ளாக நிலைத்தன்மையை குறைத்துள்ளது.

இந்த அதிக அழுத்தத்தின் காரணமாக பெரிய கொள்ளளவு கொண்ட பனிப்பாறைகள் திடீரென உடைந்து கீழ் நோக்கி சரிந்து விழுந்துள்ளன. இந்த பனிப்பாறையுடன் சேர்த்து பெருமளவில் நீர், மண் மற்றும் பாறைகள் கலந்த வெள்ளப்பெருக்கு உருவாகி மிகுந்த சக்தியுடன் பள்ளத்தாக்குக்குள் பாய்ந்தது. இந்த வெள்ளப்பெருக்கு வேகமாக நகர்ந்து ஆறுகளில் திடீர் நீர்மட்ட உயர்வினை ஏற்படுத்தியது. சில பகுதிகளில் 30 நிமிடங்களிலேயே சுமார் 9 மீட்டர் வரை நீர்மட்டம் உயர்ந்தது. செயற்கைகோள் படங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் பனிப்பாறையின் கீழ்ப்பகுதி உடைந்தும் சரிந்தும் இருப்பது தெளிவாக பதிவாகியுள்ளது.

நேபாள வெள்ளப் பெருக்கு

இது, பனிப்பாறையின் நிலைத்தன்மை குறைபாடு மற்றும் உள்ளக நீர் அழுத்தத்தின் தாக்கத்தினை வெளிப்படுத்துகிறது. வெள்ளப்பெருக்கு கீழ் நோக்கி பாய்ந்ததால், ஆற்றின் இயல்பான பாதை பல இடங்களில் மாற்றமடைந்துள்ளது. இதன் விளைவாக புதிய சேற்றுப்பாதைகள் உருவாகி ஆற்றுப்பாதையின் இயற்கை வடிவமைப்பினை மாற்றி அமைத்துள்ளன.  

 இதுபோன்ற பனிச்சரிவு மற்றும் வெள்ள பேரழிவு அபாயத்தைக் குறைக்க பல நிலைகளில் ஒருங்கிணைந்த முன்னெச்சரிக்கை அமைப்புகள் உருவாக்கப்படுவது அவசியம். இதற்காக பனிக்குளங்களில் நீர்மட்ட மாற்றங்களை தொடர்ந்து கண்காணிக்க சென்சார் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். இந்த தரவுகளின் அடிப்படையில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க முடியும்.

நேபாள வெள்ளப் பெருக்கு

இதுபோன்ற பேரழிவுகள் காலநிலை மாற்றத்துடன் நேரடியாக தொடர்புடையவை. எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவு நிகழ்வுகள் நிகழவும் வாய்ப்புள்ளது. செயற்கைகோள் கண்காணிப்பு, நிலையான முன்னெச்சரிக்கை அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான முன்னறிவிப்பு மாதிரிகள் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இத்தகைய பேரழிவுகளின் தாக்கத்தை குறைக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.  

நேபாளம்: பாலம் இல்லை… பாதையும் இல்லை… ஆபத்தான பயணம் ஜிப்லைனே ஒரே நம்பிக்கை!

பாலங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 250 மீட்டர் நீளமுள்ள ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து உணவு, உடைமைகளை எடுத்துச் செல்லும் நேபாள மக்களின் போராட்டம், பாலம் போன இடத்தில் உயிர்நாடியான ஜிப்லைன்!நேபாளத்... மேலும் பார்க்க

Nepal: ”இதுவரை பஸ் கிடைக்காததே நல்ல விஷயம்தான்” - டி.என்.ஏ சோதனைக்கு வந்த மகன் நம்பிக்கை

நேபாளத்தில், கடந்த 26ம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில், ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 305 பேரில், சுமார் 220 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 85 பேர் மயாமான நிலையில், அவர்களை மீட்க மத்திய... மேலும் பார்க்க

நேபாள வெள்ளம்: நீர்மின் சுரங்கத்துக்குள் 9 நாட்கள்... உயிருடன் மீட்கப்பட்ட 2 தொழிலாளர்கள்!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்துக்குப் பிறகு, மண்ணாலும் குப்பைகளாலும் மூடப்பட்ட நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.... மேலும் பார்க்க

பனிமலையின் பகுதி உடைந்து விழுந்த நொடிகள்... நேபாளப் பேரழிவின் தொடக்கத்தை பதிவு செய்த ட்ரோன் வீடியோ!

நேபாளத்தின் லாங்டாங் லிருங் (Langtang Lirung) மலையில் அண்மையில் நிகழ்ந்த பாறை மற்றும் பனிச்சரிவு, சில நிமிடங்களில் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கிய பெருவெள்ளமாக மாறியது. 900-க்கும் மேற்பட்டோரின் உயிர... மேலும் பார்க்க

"உங்களுடைய அக்கறைக்கும், தாராளமான உதவிக்கும் நன்றி"- இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த நேபாளம் அதிபர்

நேபாள நாட்டின் போடேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை 650-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண... மேலும் பார்க்க