செய்திகள் :

தூத்துக்குடி: மீண்டும் ஒரு காவல் மரணம்?- விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு வீடு திரும்பியவர் இறப்பு

post image

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டாஸ்மாக் பார் ஊழியர் தலையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அமுதா நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (24).

இவர், தூத்துக்குடி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், இரவு 10 மணிக்கு மேல் அப்பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்தாராம். இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தரண்யா தலைமையிலான போலீஸார் அவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் ஸ்டேஷன் பெயிலில் அவரை போலீஸார் விடுவித்துள்ளனர். காவல் நிலையத்தில் போலீஸார் அருணாச்சலத்தை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. வீட்டிற்கு அவரை அழைத்துச் செல்லும்போது உடலில் காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்ட நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

அருணாச்சலம் உயிரிழந்த செய்தி பரவியதும், அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் காவல் நிலையப் பகுதியில் திரண்டனர். விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் நடத்திய கடுமையான தாக்குதலாலேயே அருணாச்சலம் உயிரிழந்துள்ளார்... இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும், பர

பரப்பான சூழலும் நிலவியது. சம்பவ இடத்திற்கு வந்த உயர் காவல் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் ஒரு லாக்கப் மரணம்?:``படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்"- உதயநிதி கண்டனம்

தூத்துக்குடி, அமுதா நகரை சேர்ந்தவர் அருணாச்சலம் (26). இவர் அரசு மதுபான கடை பாரில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி மதுபான கடை மூடிய பின்பு, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை... மேலும் பார்க்க

திருச்சி: சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியின் கட்டை விரலைக் கடித்த எலி - அரசு மருத்துவமனை அவலம்!

திருச்சி மாவட்டம், பொன்மலை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ் கொடி (வயது: 60). எலும்பு மூட்டு சிகிச்சைக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்... மேலும் பார்க்க

”ரத்து செய்யப்பட்ட பவரில் நிலம் ரிஜிஸ்ட்ரேஷன்”- பத்திரப்பதிவு அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் நித்யா(42). இவருடைய தந்தை பன்னீர்செல்வத்திற்குச் சொந்தமாக 65 குழி நிலம் இருந்தது. இந்த நிலத்தைப் பராமரிப்பதற்காக, பட்டுக்கோட்டை பாக்... மேலும் பார்க்க

2 கிலோ தங்கம், ரூ.50 லட்சம் வைப்பு தொகை, வீடுகள்! - ரூ.150 கோடிக்கு சொத்து குவித்த எஞ்சினியர்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகத்தில் எஞ்சினியராக இருப்பவர் முத்யம் வெங்கட ரமணா. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார் வந்தது. இதை... மேலும் பார்க்க

திருச்சி: வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் - முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதா கைது!

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், பாம்பாட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி ( 30) என்பவரின் தந்தை கருப்பசாமி சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக அவர் அரசு இ-சேவை மைய... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திவரப்பட்ட 36 கிலோ கஞ்சா - ஒடிசாவைச் சேர்ந்த பெண் உட்பட 5 பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ரோடு ரயில் நிலையப் பகுதியில் தனிப்படை போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு ரயிலிலிருந்து இறங்கிவந்து வாகனத்துக்காக காத்திருந்த 4 பேரின் நடவடிக்கைகள் ச... மேலும் பார்க்க