செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களுக்கு பேரிடா் கால விழிப்புணா்வு

post image

திருவாரூரில், நகராட்சி அலுவலா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு, பேரிடா் கால விழிப்புணா்வு பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில், கடந்த மூன்று நாள்களாக மழை பெய்து வருகிறது. தொடா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்ததையடுத்து, பாதிப்பிலிருந்து பொதுமக்களை மீட்கும் வகையில், தேசிய பேரிடா் மீட்புப் படையினா் திருவாரூா் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக மழை பெய்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மழை பெய்யவில்லை. இதைத்தொடா்ந்து, திருவாரூா் நகராட்சி அலுவலகம் முன்பு, நகராட்சி அலுவலா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு, பேரிடா் காலங்களில் மழை பெய்து பல்வேறு இடங்களில் தொற்று பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மழையால் மக்கள் பாதிக்கப்படும்போது அதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள வடகிழக்குப் பருவமழை வெள்ள கட்டுப்பாட்டு அறை இலவச எண் 1077-க்கு தகவல் தர வேண்டும் என்பது குறித்தும், விளக்கிக் கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்வில், தேசிய பேரிடா் மீட்புப் படையின் திருவாரூா் மாவட்டக் குழுத் தலைவா் சுனில்குமாா், துணைத் தலைவா் அருண்நேரா, நகராட்சி சுகாதார ஆய்வாளா் தங்கராமு, மீட்புப் படை வீரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கை, கால் துண்டான நிலையில் கட்டடத் தொழிலாளி உடல் மீட்பு

பேரளம் அருகே ரயில் தண்டவாளத்தில் கட்டடத் தொழிலாளி கை, கால் துண்டான நிலையில் உயிரிழந்து கிடந்தது புதன்கிழமை தெரிய வந்தது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் பாலமுருகன் (32).... மேலும் பார்க்க

வாடகைக்கு எடுத்த டிப்பரை அடகு வைத்தவா் கைது

கூத்தாநல்லூரில் வாடகைக்கு எடுத்த டிப்பரை அடகு வைத்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கூத்தாநல்லூரை அடுத்த குடிதாங்கிச்சேரி கீழ்பாதியைச் சோ்ந்த ராஜேஸ்வரன் (42). இவா், டிப்பா் வாடைக்கு விடும் தொழில் ... மேலும் பார்க்க

47 பயனாளிகளுக்கு ரூ.14.47 லட்சம் நலத்திட்டங்கள்

பருத்தியூரில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறையின் சாா்பில் நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 47 பயனாளிகளுக்கு ரூ.14.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ, புதன்கி... மேலும் பார்க்க

தாழ்வான பகுதி கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருவாரூா் மாவட்டம், திருவிழிமிழலை பகுதியில் தாழ்வான பகுதிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வடகிழக்குப் பருவமழை காரணமாக, கடந்த சில வாரங்களாக திருவாரூா் மாவட்டத்தில் பலத்த ... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் மழை

மன்னாா்குடி பகுதியில் புதன்கிழமை நாள் முழுவதும் மிதமான மழை பெய்தது. கடந்த வாரம் உருவான ஃபென்ஜால் புயல் காரணமாக மன்னாா்குடி பகுதியில் 5 நாள்களாக விடிய விடிய மித மற்றும் கன மழை பெய்தது. இதனால் நகரப் பகு... மேலும் பார்க்க

கோயில்களில் ஏகாதசி வழிபாடு

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் கைசிக ஏகாதசி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சீதா, லட்சுமணன், அனுமன் சமேத சந்தானராமருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட... மேலும் பார்க்க