செய்திகள் :

தெலங்கானா : 'அப்பா முன்ன மாதிரி இல்ல!' - புது கட்சி தொடங்கிய சந்திரசேகர் ராவின் மகள் கவிதா!

post image

தெலங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ்வின் மகள் கவிதா 'தெலுங்கானா ராஷ்டிர சேனா' என்கிற புதிய கட்சியை இன்று தொடங்கியிருக்கிறார்.

TRS
TRS

தெலங்கானாவில் ஒரு தனியார் விடுதியில் கட்சியின் பெயரை அறிவித்த கவிதா, 'தெலங்கானா தனி மாநில கோரிக்கையின் போது இருந்த கே.சந்திரசேகர் ராவ், இப்போது இல்லை. அவர் நிறையவே மாறிவிட்டார்.

ஒரு சிலரின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார். காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில் நடந்த குளறுபடிகளுக்கு எதிராக கேள்வி கேட்டதற்காக நான் கட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டேன். அந்தத் திட்டத்தில் கொள்ளையடித்தவர்கள் இன்னும் கே.சி.ஆர் யைச் சுற்றி இருக்கிறார்கள். தெலுங்கானா மாநிலத்தின் நலன்களையும் உரிமைகளையும் மையப்படுத்தியே தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தொடங்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அந்த கட்சியின் பெயரும் மாறிவிட்டது, கொள்கைக் கோட்பாடுகளும் மாறிவிட்டது.

சந்திரசேகர் ராவ்
சந்திரசேகர் ராவ்

ஒரு கட்சி அது எதற்காக உருவாக்கப்பட்டது என்கிற மையக்கருவையே மறக்குமானால் அந்த கட்சியால் நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்க முடியாது. தெலுங்கானாவின் கனவுகளையும் நோக்கங்களையும் நிறைவேற்ற ஒரு பிராந்திய கட்சி இங்கே தேவை. அந்தக் கட்சியாக நம்முடைய தெலுங்கானா ராஷ்டிர சேனா இருக்கும். தெலுங்கானா ராஷ்டிர சமிதியிலிருந்தும் என்னுடைய குடும்பத்திலிருந்தும் நானாக வெளியேறவில்லை. நம்மை தூக்கி வெளியே வீசினார்கள். இப்போது தெலுங்கானா மக்களைத்தான் என்னுடைய குடும்பமாக பார்க்கிறேன்' என்றார்.

கவிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் கவிதாவே முன்வந்து கட்சியிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரயில்வேயில் அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கை; பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்படுமா?

இந்திய ரயில்வே நிர்வாகம் தனது ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் 2 சதவீதத்தைக் குறைக்க அதிரடி உத்தரவிட்டிருக்கிறது. இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள 14,80,455 பணியாளர்களில், சுமார் 29,608 பணியாளர்களைக் கு... மேலும் பார்க்க

கோவை: ஸ்ட்ராங் ரூம்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்

கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம்கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம்கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம்கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம்கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்... மேலும் பார்க்க

ஈரான் போர் நெருக்கடி: பணத்தைத் திருப்பிக் கேட்ட அபுதாபி; சவுதியிடம் 'கடன்' வாங்கி கடனை அடைத்த பாக்

ஐக்கிய அமீரகத்தில் இருக்கும் அபுதாபியின் வெளிநாட்டு உதவி நிறுவனம், 'அபுதாபி மேம்பாட்டு நிதியம் (ADFD)'. 'The Dawn Newspaper' தகவலின்படி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்த நிதியத்திடமிருந்து... மேலும் பார்க்க

``ரத்தம், வியர்வை சிந்தி நான் வளர்த்த கட்சி, இன்று..!"- ஆம் ஆத்மியிலிருந்து ராகவ் சதா விலகல்

ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி இருக்கின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற... மேலும் பார்க்க