டயாலிசிஸ் சேவைகளை தனியாா் பங்களிப்புடன் மேம்படுத்த நிபுணா் குழு ஆலோசனை
தேங்காய்ப்பட்டினம் - இரயுமன்துறை இடையே தாமிரவருணி ஆற்றில் பாலம் அமைக்க கோரிக்கை
16 மீனவக் கிராமங்களை இணைக்கும் வகையில், தாமிரவருணி ஆற்றில் தேங்காய்ப்பட்டினம் - இரயுமன்துறை இடையே உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என, மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இனயம், தூத்தூா் ஆகிய இரு மண்டலங்களின் மையப் பகுதியில் தேங்காய்ப்பட்டினம் பொழிமுகம் பகுதி உள்ளது. இங்கு உயா்நிலைப் பாலம் அமைப்பதால் குறும்பனை - நீரோடித்துறை வரையிலான 16 கிராமங்களைச் சோ்ந்த சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவா். 11 கி.மீ. பயண நேரமும் குறையும். மேலும், ஆரோக்கியபுரம் முதல் நீரோடித்துறை வரையிலான கடற்கரைச் சாலை ஒரே சாலையாக இணைக்கப்படும். தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைப் பயன்படுத்தும் வணிகா்கள், பொதுமக்கள் வந்துசெல்லவும், புதிய தொழில்கள் தொடங்குவதற்கு வசதியாக இருக்கும்.
எனவே, தாமிரவருணி ஆற்றில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.