செய்திகள் :

"தேசபக்தி பற்றி எங்களுக்குப் பாடமெடுக்க வேண்டாம்" - சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்

post image

சட்டசபையில் இவ்வாண்டிற்கான முதல் கூட்டத் தொடரின் 5-ஆம் நாள் இன்று நடைபெற்று வருகிறது.

கடந்த 20-ஆம் தேதி சட்டசபை கூடிய நிலையில், ஆளுநர் உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இம்முறையும் அவருடைய உரையைப் படிக்காமல் வெளிநடப்பு செய்தார். அதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

5-ஆம் நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "சிக்கல்கள் மிகுந்த சூழலில்தான் திமுக ஆட்சிக்கு வந்தமர்ந்தது. ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மற்றொரு பக்கம் கவலையும் எங்களுக்கு இருந்தது.

ஒன்றிய பாஜக அரசின் செயல்களால்தான் கவலையில் இருந்தேன். ஆனால், இப்போது தமிழகம் அத்தனை துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

விடியலை மக்கள் அனைவரும் பார்க்கின்றனர். 2 லட்சம் பேருக்கு கலைஞர் இல்லம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

4000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. ரூ. 12 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

ஆட்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.35 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகாலக் கோரிக்கையை ஏற்று, ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

விடியல் பயணத்தின் மூலமாக ஒவ்வொரு மகளிரும் 60,000 ரூபாய் சேமித்துள்ளனர். சாதனைக்கு மேல் சாதனை படைப்பதுதான் திராவிட மாடல் அரசு. அரசு பொறுப்பேற்று, 15,137 கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறேன். திமுக அரசின் சாதனைகளை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

MK Stalin
MK Stalin

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நான், அவரின் உரைக்கு விளக்கம் அளிக்கும் சூழல் உள்ளது. மீண்டும் மீண்டும் ஒரே காரணத்தைக் கூறி சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்து வருகிறார்.

அவரின் செயல் எங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. நாட்டின் மீது அளவற்ற மரியாதை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்களுக்கு தேசபக்தி பற்றி பாடமெடுக்க வேண்டாம். சோதனைகள் எங்களுக்குப் புதிதல்ல.

சோதனைகளைக் கடந்து வென்றவர் நான். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்களுடைய சாதனைகளை நாங்களே முறியடிப்போம்" எனப் பேசியிருக்கிறார்.

பாஜக-வை எதிர்க்காத விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா? - குழப்பத்தில் கதர்கள்!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் விலகிச் சென்ற அ.தி.மு.க-வை, என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவந்த டெல்லி பா.ஜ.க., 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வீழ்த்த பல்வேறு அஸ்திரங்களை கையிலெடுத்திருக்... மேலும் பார்க்க

சென்னை தொகுதிகளுக்கு மல்லுக்கட்டும் கூட்டணிக் கட்சிகள்... கறார் காட்டும் திமுக!

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வரும் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகரில் ஒருசில தொகுதிகளை கைபற்ற காய்நகர்த்தி வருகிறார்கள் வி.சி.க, கம்யூனிஸ்ட், ... மேலும் பார்க்க

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்!

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது. அதன் கீழ், சில நடைமுறைகள் மாறும் அல்லவா? அப்படிப் பான் கார்டு எங்கெங்கு தேவை என்பதைப் பார்க்கலாம்... வாங்க...1. முன்பு, ஒரே ந... மேலும் பார்க்க

கலைஞர் உரிமைத் தொகை: ``வங்கி கணக்கில் ரூ.5000" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில... மேலும் பார்க்க

தவெக: சேலம் விஜய் சந்திப்பு; 51 நிபந்தனைகள்; 5,000 பேருக்கு அனுமதி; செங்கோட்டையன் சொல்வது என்ன?

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்திற்குக் கடந்த டிசம்பர் மாதம் அனுமதி கேட்டு தவெக-வினர் போலீஸில் மனு அளித்திருந்தனர். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தக் கூட்டத்துக்கு போலீஸார் தரப்பி... மேலும் பார்க்க

`டி.என்.பி.எஸ்.சி.யில் அரசியல் தலையீடா?' - முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் என்ன சொல்கிறார்?

கடந்த ஞாயிற்றுக் கிழமை டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டிருந்த குரூப் 2 தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்ட‌ நிலையில், தேர்வாணையத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற காவல்துறை அத... மேலும் பார்க்க