செய்திகள் :

"தேசப்பற்றை பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்.!" - பாஜக எம்.பி-க்கு பதிலடி கொடுத்த ஆ.ராசா

post image

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவிற்கு திமுக எம்.பி ஆ.ராசா கொடுத்த பதிலடி இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அரசுத் தரப்பு முன்வந்தது.

பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா

இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைபிடித்த மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சத்தை அவர்கள் முன்வைத்தனர்.

எதிர்க்கட்சிகளின் அமளியால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அந்தவகையில் கர்நாடக பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா லோக் சபாவில், திமுக பிரிவினைவாதம் பேசிவருவதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் தேஜஸ்வி சூர்யாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஆ.ராசா, "1971-இல் பாகிஸ்தான் போர் தொடுத்தபோது நாட்டைக் காக்க ரூ.6 கோடி நிதி கொடுத்தோம். இது மற்ற மாநிலங்களை விட அதிகம்.

1999ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கார்கில் போருக்காக கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு ரூ.100 கோடி கொடுத்தது.

 ஆ. ராசா
ஆ. ராசா

நாட்டுப்பற்றை அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுக்க தேவையில்லை. நாங்களும் தேசத்திற்காகவே நிற்கிறோம். ஒரே விஷயம் என்னவென்றால் நாங்கள் தனித்த அடையாளத்துடன் இருக்க விரும்புகிறோம்.

நீங்கள் இந்தி, சம்ஸ்கிருதத்தைத் திணிக்கும்போது அதை எதிர்க்கிறோம்... மாநில சுயாட்சிக்கு மரியாதை கொடுக்காதபோது அதை எதிர்க்கிறோம்" என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

``வேட்பாளர்கள் முதல் வாக்குகள் வரை அனைத்தும் ஜாதி" - சாதி மதமற்றவன் சான்றிதழ் பெற்ற பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தன்னை ஒரு குறிப்பிட்ட சாதி, மொழி சார்ந்தவராக அடையாளப்படுத்திக்கொண்டு பேசினார். இதற்கு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்தார்... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டின் உரிமைக்குரல் - சட்டமன்றத்தை நோக்கி அருண்ராஜ்

திருச்செங்கோடு தொகுதியில் த.வெ.க வேட்பாளர் அருண்ராஜுக்கு ஆதரவான அலை வீசுவதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் அரசல் புரசலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் களத்தில் இறங்கி விசாரிக்கையிலும், 'அருண்ராஜ... மேலும் பார்க்க

அண்ணா நகரில் களமிறங்கும் ‘தளபதியின்’ நம்பிக்கைக்குரிய தளபதி! - திமுக வேட்பாளர் சிற்றரசு

சென்னை மாநகரின் ‘விஐபி’ தொகுதி என வர்ணிக்கப்படும் சட்டமன்ற தொகுதி அண்ணா நகர். இங்கு, இம்முறை திமுக ஒரு புதிய, ஆனால் தொகுதிக்கு மிகவும் பரிச்சயமான முகத்தைக் களம் இறக்கியுள்ளது. அவர்தான் நே.சிற்றரசு.இளை... மேலும் பார்க்க

“இப்போதே எம்.எல்.ஏ-வாக ஏற்றுக்கொண்டு மனு கொடுக்கிறார்கள் மக்கள்”- தி.மு.க அரூர் வேட்பாளர் அ.சண்முகம்

தர்மபுரி மாவட்டத்தின் அரூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கி இருப்பவர் அ.சண்முகம். 15 ஆண்டுகள் உள்ளாட்சிப் பொறுப்பு வகித்தவர் என்பதும், பகுதி மக்கள் எளிதில் அணுகும் நபராக இருப்பதும் அவரது தனி... மேலும் பார்க்க