செய்திகள் :

தேசியவாத காங்கிரஸ் இணைப்பு பற்றி விவாதிக்க சரத் பவார் கூட்டிய கூட்டம் - புறக்கணித்த சுனேத்ரா பவார்!

post image

மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக உடைந்தது. மறைந்த துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையில் ஒரு அணியும் இயங்கி வந்தது. சமீபத்தில் அஜித் பவார் விமான விபத்தில் காலமானார். அவர் இறப்பதற்கு முன்பே தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டையும் ஒன்றாக இணைப்பது குறித்து சரத் பவாரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

ஆனால் அவர் அதற்குள் அகால மரணமடைந்துவிட்டார். இதையடுத்து அஜித் பவாரின் அஸ்தி கரைக்கப்பட்ட பிறகு சரத் பவாரின் இல்லத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சந்தித்து பேச சரத் பவார் ஏற்பாடு செய்து இருந்தார்.

இந்த கூட்டத்தில் இரு கட்சிகளையும் ஒன்றாக இணைப்பது மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கூட்டத்திற்கு சுனேத்ரா பவாரோ அல்லது அஜித் பவார் குடும்பத்தினரோ வரவில்லை. சுனேத்ரா பவார் தனது ஒரு மகனை அழைத்துக்கொண்டு மும்பை சென்றுவிட்டதாக சுனேத்ரா பவாருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

சரத்பவார்

அதுவும் சரத் பவாரிடம் துணை முதல்வராக பதவியேற்பது குறித்து கலந்து ஆலோசிக்காமல், அவரிடம் சொல்லாமல் அவசர அவசரமாக சுனேத்ரா பவார் புறப்பட்டு சென்று விட்டார். இது சரத் பவாருக்கு கடும் அதிருப்தியை கொடுத்து இருக்கிறது.

துணை முதல்வர் பதவி அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது கிடையாது. எனவே, அஜித் பவார் மறைந்த நான்காவது நாளில் பதவியேற்பு விழாவை அவசரமாக ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே அஜித் பவாரின் மறைவுக்கு 12 அல்லது 13 ம் நாள் துக்கம் அனுசரித்த பிறகு இது போன்ற நிகழ்வுகளை வைத்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அஜித் பவாருக்கு மிகவும் நெருக்கமான மாநில அமைச்சர் நர்ஹரி ஜரிவால் கூறுகையில்,' அண்ணி அமைச்சரவையில் துணை முதல்வராக இருக்கவேண்டும். சரத் பவார் கட்சிக்கு பாதுகாவலராக இருந்து இரு அணிகளும் இணைய முக்கிய பங்காற்ற வேண்டும்.

இரண்டு அணிகளும் ஏறக்குறைய மீண்டும் ஒன்றிணைந்துவிட்டன. அவை உள்ளாட்சி தேர்தலில் இணைந்து போட்டியிடுகின்றன. இரு அணிகளின் இணைப்பு என்பது ஒரு சம்பிரதாயம் மட்டுமே. அது நடக்க வேண்டும் என்று அஜித் தாதா விரும்பினார். ஆனால் இப்போது பவார் சாஹேப் தலைமை ஏற்று அஜித் பவாரின் முடிக்கப்படாத கனவை நிறைவேற்ற வேண்டும்" என்று கூறினார்.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ்(பவார்) மாநில தலைவர் சசிகாந்த் ஷிண்டே கூறுகையில், ''இரு அணிகளும் மீண்டும் இணைவது குறித்து பவார் குடும்பத்தினர் முடிவு எடுக்க வேண்டும். சோகம் நடந்தபோது விவாதங்கள் இறுதிக் கட்டத்தில் இருந்தன. இப்போது, ​​பவார் குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து இணைப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அவர்களின் முடிவை நாங்கள் மதிப்போம்.

சுனேத்ரா பவார்
சுனேத்ரா பவார்

இந்த இணைப்பு இரு பிரிவினருக்கும் பயனளிக்கும். நாங்கள் முன்பு அஜித் பவாரை சந்தித்தபோது, ​​இரு கட்சிகளும் ஒன்றாக வர வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். அவர் அதைப் பற்றி பலமுறை பேசியிருந்தார். அஜித் பவாருடன் இரு அணிகளின் இணைப்பு குறித்துபல முறை பேசியிருக்கிறேன். ஜில்லா பரிஷத் தேர்தல்களுக்கு பிறகு இது குறித்து முடிவு எடுக்கப்படும் அவர் கூறி இருந்தார்''என்றார்.

ஆனால் இந்த இணைப்பு நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சுனேத்ரா பவாருக்கு அவசரமாக துணை முதல்வர் பதவியை பா.ஜ.க கொடுக்க முன்வந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

பழனி முருகன் கோயிலில் ஒலித்த 'உங்க விஜய்' பாடல்; இளைஞர் அட்ராசிட்டி - போலீஸில் புகார்!

பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு எளிதாகச் செல்வதற்கு யானை பாதையைத்தான் பயன்படுத்துவார்... மேலும் பார்க்க

'96 க்குப் பின் ஒற்றை இலக்க வாக்கு வங்கி மட்டுமே!' - தமிழகத்தில் காங்கிரஸின் பலம்தான் என்ன?

திமுக காங்கிரஸ் இடையே மூன்று மாதங்களுக்கு முன்பாக புகைய தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவில்லை. 'அமைச்சரவையில் பங்கு கிடையாது' என முதல்வர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன பிறகும் காங்கிரஸார் விடுவதாக இல்லை... மேலும் பார்க்க

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

நாடாளுமன்றம்இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழும் நாடாளுமன்றம், மக்களவை மற்றும் ... மேலும் பார்க்க

"2 அரசுகளும் அலைக்கழித்தால் எங்கே போவது?" - நயினார் நாகேந்திரனிடம் குமுறிய அங்கன்வாடி ஊழியர்கள்

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10வது நாளாக தொடர் காத்திருப்பு... மேலும் பார்க்க

பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திர... மேலும் பார்க்க

"மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?"- மீண்டும் எதிர்வினை ஆற்றிய மாணிக்கம் தாகூர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.அதிக சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.இந்தச் ச... மேலும் பார்க்க