செய்திகள் :

நேற்று இரவு சென்னையில் இடி மின்னலுடன் மழை; இன்றும் தொடருமா? - சென்னை வானிலை மையம் சொல்வதென்ன?

post image

பனி, குளிர் எல்லாம் முடிந்து, பிப்ரவரி மாதத்தின் பாதியில் இருந்து தான் தமிழ்நாட்டில் வெயில் எட்டிப்பார்க்கத் தொடங்கியது.

வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வந்த இந்த நேரத்தில், நேற்று இரவு சர்ப்பரைஸ் என்ட்ரியாக சென்னை, வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை எட்டிப்பார்த்துள்ளது.

சென்னையில் இன்றும் மழை பெய்யுமா?

நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,

"இன்று (மார்ச் 19), ஓரளவு மேகமூட்டம் மற்றும் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யலாம்.

நாளை (மார்ச் 20) ஓரளவு மேகமூட்டம் இருக்கும்.

சென்னை மழை
சென்னை மழை

மார்ச் 21-ம் தேதி ஓரளவு மேகமூட்டம் மற்றும் லேசான மழை பெய்யலாம்.

மார்ச் 22, 23 மற்றும் 24 தேதிகளில் ஓரளவு மேகமூட்டம் காணப்படும்.".

மேலும், வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain Alert: உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி; எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த பகுதியாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடலுக்கு நகர்ந்து வருவதால், சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரி... மேலும் பார்க்க

உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டில் 'பிப்ரவரியில் மழை' - சென்னை வானிலை மையம்

பொதுவாகப் பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாட்டில் மழை பெய்வது அரிதிலும் அரிது. இந்த அரிய நிகழ்வு இந்த ஆண்டு நடக்கும் போல. ஆம்... சென்னை வானிலை ஆய்வு மையம் மழை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது அதில் ... மேலும் பார்க்க