செய்திகள் :

'இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! 'இப்படி' போராடுவோம்' - சிவா திலீபனுக்கு ஸ்டாலின் இரங்கல்

post image

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மே 17 இயக்கத்தினர் நடத்தி வருகின்றனர். கடந்த 12-ம் தேதி, அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில், சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் போராட்டம் நடந்தது.

அதில் கலந்துகொண்ட சிவா திலீபன் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில், அங்கே வந்த ரயில் ஒன்றின் மீது, 'தமிழ் வாழ்க' என்று முழங்கிப் பாய்ந்திருக்கிறார்.

இதில் காயமடைந்த அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல், அவர் இறந்துவிட்டார்.

மே 17 இயக்கத்தினர் போராட்டம்
மே 17 இயக்கத்தினர் போராட்டம்
இவருக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"இனி ஒரு உயிரும் போக வேண்டாம்!

இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் திரு. சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது.

மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்!

இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

சகோதரர் சிவா திலீபன் அவர்களை இழந்து வாடும் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் - தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன்".

பலே திட்டங்களுடன் ரீ-என்ட்ரி ஆகும் துரைமுருகன் முதல் அப்செட்டில் மணியான மாஜி வரை! | கழுகார்

மீண்டும் களமிறங்கும் துரைமுருகன்!பலே திட்டங்களுடன் ரீ-என்ட்ரி...தி.மு.க பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகனின் வயது மூப்பு மற்றும் உடல்நிலையைக் காரணம் காட்டி, காட்பாடியில் அவருக்குப் பதிலாக... மேலும் பார்க்க

மனோ தங்கராஜுக்கு எதிராக புகார்; ஸ்டாலின் முன்னிலையில் கொந்தளிப்பு; நேர்காணலில் நடந்தது என்ன?

சட்டசபை தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான நேர்காணலில் அமைச்சர் மன... மேலும் பார்க்க

முரண்டு பிடிக்கும் சிபிஎம்; ஆப்சென்ட் ஆன விசிக! - கூட்டணி தலைவலியில் அறிவாலயம்!

திமுக கூட்டணியில் நிலவி வரும் இழுபறிக்கு இன்னமும் ஒரு முடிவு கிடைக்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று காலை கூட்டணி ஒப்பந்தத்தை முடித்த திமுக, இன்றே விசிக மற்றும் சி.பி.எம் உடனும் கூட்டணி ஒப்... மேலும் பார்க்க