செய்திகள் :

தேனாம்பேட்டை அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையம், ‘அப்போலோ ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையாக விரிவாக்கம்!

post image

மருத்துவச் சேவைகளில் நவீன சிகிச்சை முறைகள் மற்றும் அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் அப்போலோ மருத்துவமனைகள், தனது மருத்துவச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், புற்றுநோய் சிகிச்சையில் முன்னணி மையமாக செயல்பட்டு வந்த தேனாம்பேட்டை அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையத்தை முழுமையான பன்முக சிறப்பு மருத்துவமனையாக விரிவுபடுத்தியுள்ளது. இன்று முதல் இந்த மருத்துவமனை ‘அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, தேனாம்பேட்டை’ என்ற பெயரில் செயல்படத் தொடங்குகிறது.

1993 ஆம் ஆண்டு தேனாம்பேட்டையில் தொடங்கப்பட்ட அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையம், கடந்த 33 ஆண்டுகளாக புற்றுநோய் சிகிச்சையில் முன்னணி மையமாகச் செயல்பட்டு வருகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் நிலை புற்றுநோய்களுக்கான சிக்கலான மற்றும் மேம்பட்ட சிகிச்சைகளை வழங்கி வந்த நிலையில், இனி இதயவியல், நரம்பியல் மற்றும் நரம்பியல் அறிவியல், இரைப்பைக் குடலியல், நுரையீரல் மருத்துவம், முதுகெலும்பு மற்றும் எலும்பியல், சிறுநீரகவியல், தீவிர சிகிச்சை மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட துறைகளிலும் முழுமையான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளை வழங்கவுள்ளது.

இதற்காக மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் 300 படுக்கைகள், இதில் 51 தீவிர சிகிச்சைப் படுக்கைகள், 5 நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் 1 மேம்பட்ட கேத் லேப் ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அப்போலோ

இத்தொடக்க விழாவில், தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ், இ.ஆ.ப. அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் டாக்டர் டாரஸ் அஹமது, இ.ஆ.ப. அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் அருண்ராஜ், இன்றைய சூழலில் ஒருங்கிணைந்த சுகாதார அமைப்புகளை விரிவுபடுத்துவதன் அவசியத்தையும், நவீன மருத்துவ சிகிச்சையில் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

சிக்கலான மற்றும் தீவிரமான மருத்துவ நிலைகளுடன் வரும் நோயாளிகளுக்கு, பல்வேறு துறை நிபுணர்களின் ஒருங்கிணைந்த மதிப்பீடும் சிகிச்சையும் தேவைப்படும் நிலை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு துல்லியமான நோயறிதல், தாமதமில்லாத சிகிச்சை மற்றும் நவீன மருத்துவத் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சிகிச்சை அவசியம். அந்த வகையில், தமிழ்நாடு தொடர்ந்து பொது மற்றும் தனியார் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தி, உயர்தர மருத்துவச் சேவைகளை வழங்குவதற்கான சூழலை உருவாக்கி வருகிறது. பொதுமக்கள் உயர்தர மற்றும் சிறப்பு மருத்துவ வசதிகளை எளிதில் பெறும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முன்னெடுப்புகளுக்கு அரசு ஆதரவளிக்கிறது,” என்று அவர் கூறினார்.கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் அருண்ராஜ், ஒருங்கிணைந்த சுகாதார அமைப்புகளின் வளர்ந்து வரும் அவசியத்தை வலியுறுத்தினார். "சிக்கலான மருத்துவ நிலைமைகளுடன் வரும் நோயாளிகளுக்கு, பெரும்பாலும் பல்வேறு மருத்துவத் துறைகளைச் சார்ந்த நிபுணர்களின் ஒருங்கிணைந்த மதிப்பீடும் சிகிச்சையும் தேவைப்படுகின்றன. தமிழ்நாடு தனது பொது மற்றும் தனியார் சுகாதாரக் கட்டமைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது; உயர்தர மற்றும் சிறப்பு மருத்துவக் கட்டமைப்புகளைப் பொதுமக்கள் எளிதில் அணுகுவதை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு அரசு ஆதரவளிக்கிறது," என்று அவர் கூறினார். மேலும், "நலம் TN" (Nalam TN) திட்டத்திற்காக 1 கோடி ரூபாயை வழங்கிய முதல் நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் அப்பல்லோ மருத்துவமனைக்கும் டாக்டர் அருண்ராஜ் நன்றி தெரிவித்தார்

மேம்படுத்தப்பட்ட நவீன சிகிச்சை வசதிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேனாம்பேட்டையில் முன்னணி புற்றுநோய் சிகிச்சை மையமாகச் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனை, நோயறிதல் மற்றும் சிகிச்சை உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை மேற்கொண்டுள்ளது. பல்வேறு துறை நிபுணர்களின் ஒருங்கிணைந்த ஆலோசனையுடன் துல்லியமான நோயறிதல் மற்றும் உயர்தர சிகிச்சைகளை வழங்கும் வகையில் இந்த வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் முக்கிய அம்சங்கள் மேம்பட்ட நோயறிதல் வசதிகள்: இதய நோய்களுக்கான மேம்பட்ட கேத் லேப், 24/7 பக்கவாத சிகிச்சைக்கான பிரத்யேகப் பிரிவு, உயர்தர நோயறிதல் மற்றும் சிகிச்சை நடைமுறைகளுக்காக தமிழ்நாட்டில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜூம் எண்டோஸ்கோப்பி பரிசோதனை முறை, மேம்பட்ட ப்ராங்கோஸ்கோப்பி பிரிவு மற்றும் பிரத்யேக தூக்க ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புற்றுநோய் சிகிச்சை புற்றுநோயாளிகளுக்கு துல்லியமான மற்றும் உயர்தர சிகிச்சைகளை வழங்கும் வகையில், அனுபவமிக்க நிபுணர்களுடன் சிறப்பு புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுகள் தொடர்ந்து செயல்படுகின்றன. குறிப்பாக, புற்றுநோய் மற்றும் தீங்கற்ற கட்டிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் அதிநவீன சைபர்நைஃப் (CyberKnife), மேம்பட்ட கதிரியக்க சிகிச்சையான ட்ரூபீம் (TrueBeam), எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை (Bone Marrow Transplant – BMT), CAR-T Cell Therapy எனப்படும் நவீன செல் சிகிச்சை மற்றும் டாவின்சி ரோபோடிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட மேம்பட்ட சிகிச்சை வசதிகள் உள்ளன.

பல்துறை ஒருங்கிணைந்த சிகிச்சை டாக்டர் ப்ரீதா ரெட்டி, துணைத்தலைவர், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட், கூறுகையில்:“வாழ்க்கையின் மிகக் கடினமான பயணங்களில் புற்றுநோயும் ஒன்று. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையின் மீது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் குடும்பங்களும் ஆழமான நம்பிக்கையை கொண்டிருக்கின்றனர். அந்த நம்பிக்கையும், மருத்துவத் துறையில் நாம் காணும் அபரிமிதமான முன்னேற்றங்களும், உயர்தர நவீன மருத்துவத் தொழில்நுட்ப சிகிச்சைகளை மேலும் வழங்கும் வாய்ப்பையும் பொறுப்பையும் எங்களுக்கு வழங்குகின்றன.

உயர்தர சிகிச்சையை வழங்கும் வகையில் புற்றுநோய் சிகிச்சையில் எங்களின் நிபுணத்துவத்தையும், நோயாளிகள் மீதான அக்கறையையும் அடிப்படையாகக் கொண்டு, தற்போது ஒட்டுமொத்த குடும்பத்திற்குமான முழுமையான மருத்துவச் சேவையை வழங்கும் வகையில் எங்கள் சிகிச்சைப் பிரிவுகளை மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் விரிவுபடுத்துகிறோம்.

சமீப ஆண்டுகளில் மருத்துவத் துறை அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. துல்லியமான நோயறிதல், மேம்பட்ட சிகிச்சை முறைகள் மற்றும் சிறந்த சிகிச்சை முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், மருத்துவச் சிகிச்சை மேலும் சிறப்புத்துறைகளாகப் பிரிந்து சிக்கலானதாகவும் மாறியுள்ளது.

நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப அவருக்குத் தேவையான முழுமையான சிகிச்சையை வழங்குவதற்காக, பல்வேறு துறை நிபுணர்களை ஒருங்கிணைப்பதே எங்களின் குறிக்கோள். இதன் மூலம் சிக்கலான மருத்துவ சிகிச்சைகளை எதிர்கொள்ளும் போது, நோயாளிகளோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ அந்த சிக்கல்களைத் தனியாக எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்காது.

புற்றுநோய் சிகிச்சையில் நம்பகமான உயர்தர சிகிச்சையை வழங்கி வரும் எங்கள் மருத்துவமனை, அடுத்த கட்ட விரிவாக்கத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் முழுமையான சிகிச்சையை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளை உருவாக்குவதே எங்களின் அடுத்த கட்ட முயற்சியாகும்,” என்றார்.

சுனிதா ரெட்டி, நிர்வாக இயக்குநர், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட், கூறுகையில்:

“புற்றுநோய் சிகிச்சைக்காக பிரத்யேகமாக இயங்கி வந்த அப்போலோ மருத்துவமனை, அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக உருவாகியிருப்பது ஒருங்கிணைந்த சிகிச்சை அணுகுமுறையின் பலன்களை மேலும் வலுப்படுத்துகிறது.

நாள்பட்ட மற்றும் தீவிரமான நோய்களால் பாதிக்கப்படும் போது, உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளுக்கும் சிறப்பு கவனிப்பும் சிகிச்சையும் தேவைப்படலாம். அந்த வகையில், அப்போலோ தேனாம்பேட்டையில் பல்வேறு சிறப்புத் துறைகளை ஒரே மருத்துவமனையின் கீழ் கொண்டு வந்திருப்பதன் மூலம், நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான சிகிச்சையை வழங்க முடியும்.

இதன் மூலம் பல்துறை மருத்துவக் குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், நோயாளிகளுக்கான சிகிச்சையை உரிய நேரத்தில் வழங்கவும், சிகிச்சை வழங்கும் செயல்முறையை மேலும் சீராக்கவும் முடியும்,” என்றார்.

ஹர்ஷத் ரெட்டி, இயக்குநர் – செயல்பாடுகள், குரூப் ஆன்காலஜி & இன்டர்நேஷனல், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட், கூறுகையில்:“தேனாம்பேட்டை புற்றுநோய் சிகிச்சை மையம் அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்பட்டு விரிவுபடுத்தப்பட்டிருப்பது, மருத்துவச் சேவைகளில் எங்களின் விரிவான பங்களிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

ஏற்கனவே எங்கள் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இதயவியல், நரம்பியல், இரைப்பைக் குடல் மற்றும் நுரையீரல் மருத்துவம், முதுகெலும்பு மற்றும் எலும்பியல், சிறுநீரகவியல், தீவிர சிகிச்சை மற்றும் பொது மருத்துவம் ஆகிய துறைகளிலும் அந்தந்த துறை நிபுணர்களின் மூலம் உயர்தர சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன,” என்றார்.

அப்போலோ மருத்துவமனை

அப்போலோ மருத்துவமனைகள் பற்றி

1983 ஆம் ஆண்டு சென்னையில் டாக்டர் பிரதாப் ரெட்டி அவர்கள் முதல் அப்போலோ மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம் அப்போலோ மருத்துவக் குழுமம் இந்திய சுகாதாரத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இன்று, உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதார சேவை தளங்களில் ஒன்றாக விளங்கும் அப்போலோ, 76 மருத்துவமனைகளில் 10,400-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 6,600-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள், 264 கிளினிக்குகள், 2,182 நோயறிதல் மையங்கள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட தொலைமருத்துவ மையங்களை கொண்டுள்ளது.

அப்போலோ உலகின் முன்னணி இதய சிகிச்சை மையங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இதுவரை 3,00,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைகளையும், 2,00,000-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டுள்ளது.

நோயாளிகள் உலகத் தரத்திலான சிறந்த சிகிச்சைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, ஆராய்ச்சி மற்றும் மருத்துவப் புதுமைகளில் அப்போலோ தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. அதிநவீன தொழில்நுட்பங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சிகிச்சை நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், நோயாளிகளுக்கு உயர்தர மருத்துவச் சேவையை வழங்குவது அப்போலோவின் தொடர்ச்சியான நோக்கமாகும்.

அப்போலோவின் 1,20,000-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், சிறப்பான மருத்துவச் சேவையை வழங்குவதற்கும், உலகை நாம் கண்டதைவிட சிறந்ததாக மாற்றுவதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.