செய்திகள் :

தேர்தல் பிரசாரத்தில் `ப்ரோ', `அங்கிள்' என்று பேசிய விஜய் எங்கே? - நயினார் நாகேந்திரன் காட்டம்

post image

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்து 30 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 2 நாட்களில் மட்டும் 17 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளது. சூலூரில் 10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுள்ளார்.

நயினார் நாகேந்திரன்

இந்த சம்பவங்களெல்லாம் விஜய்க்கு தெரியுமா?

இதைப்பற்றியெல்லாம் வாய் திறக்காமல், முதல்வர் தினமும் காலை 10 மணிக்கு தலைமைச் செயலகம் வருகிறார். மாலை 5 மணிக்கு வீட்டிற்குச் செல்கிறார். இதில் மதியம் டிபன் பாக்ஸ் கொண்டு வந்து சாப்பிடுகிறார் எனப் பெருமையாகப் பேசுகிறார்கள்.

அவர் சந்திப்பது சினிமா பிரபங்களை மட்டுமே. கரூரில் 10 ரூபாய் பாடலுக்கு நடனமாடிய விஜய் தற்போது நடனமாடத் தயாரா?

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அ.ம.மு.க எம்.எல்.ஏ-வை விலைக்கு வாங்கினர்.  தொடர்ந்து குதிரைபேரம் நடத்தி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி வருகின்றனர். த.வெ.கவில் உறுப்பினர்களை சேர்ப்பது என்பது வேறு. எம்.எல்.ஏக்களை பேரம்  பேசி விலைக்கு வாங்குவது என்பது வேறு. இதன் மூலம் இடைத்தேர்தல் நடத்துவதால் அரசுப் பணம் வீணடிக்கப்படுகிறது. இது ஒரு முதிர்ச்சித்தன்மை அற்ற செயல்.

நயினார் நாகேந்திரன்

குதிரைபேரம் நடத்தி வரும் இந்த அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். அண்ணாமலைக்கு 17 லட்சம் பேர் ஆதரவு அளித்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஒரே நாளில் எனக்கும் 30 லட்சம் பேர் ஆதரவு அளித்துள்ளார்கள் என என்னாலும் கூற முடியும். அண்ணாமலை போன்ற நபர்கள் புதிதாக கட்சி தொடங்கியுள்ளதால் பா.ஜ.கவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது” என்றார்.

`மேகதாது அணை, தமிழ்நாடு கடன், சாதிவாரி கணக்கெடுப்பு, கனிமவளம்.!' - அர்லேகர் உரையின் ஹைலைட்ஸ்!

தவெக ஆட்சி பொறுப்பேற்றதும் கூடும் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் இது. வழக்கப்படி, ஆளுநரின் உரையுடன் தான் முதல் கூட்டத்தொடர் தொடங்கும். இன்று கூட்டத்தொடர் ஆளுநர் அர்லேகரின் உரையுடன் தான் தொடங்... மேலும் பார்க்க

அமெரிக்கா - இரான் போர் : வரைவு ஒப்பந்தம் முழுமையான அமைதிக்கு இட்டுச்செல்லுமா? | மணிவண்ணன் திருமலை

மேனாள் ஆசிரியர், பிபிசி உலக சேவை, லண்டன்மணிவண்ணன் திருமலைஅமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே நடந்த மூன்று மாதப் போர் ஒரு வழியாக முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படத் தொடங்கி விட்டன. கடந்த ஒரு மாதமாக நட... மேலும் பார்க்க

அமைதிகாக்கும் உத்தவ் கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் - இன்றைய கூட்டத்தில் பங்கேற்பார்களா?

மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியில் எம்.பி.க்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த சேர்ந்த 6 மக்களவை உறுப்பினர்கள் தங்களை ஒரு தனிப் பிரிவாக அங்கீகரிக்கக் கோரி நேற்று மக்களவ... மேலும் பார்க்க

தாக்கரே கட்சியில் `பிளவு 2.0' தனிஅணியாக அங்கீகரிக்க சபாநாயகரிடம் உத்தவ் கட்சி எம்.பி.க்கள் மனு!

மகாராஷ்டிரா சிவசேனாவில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட பிளவுக்கு பிறகு உத்தவ் தாக்கரே தனி கட்சி மற்றும் தனி சின்னத்துடன் செயல்பட்டு வருகிறார். ஆனாலும் தற்போது சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னத்தை தன் வசம் வைத்த... மேலும் பார்க்க

'நோ' அணுசக்தி டு ஃப்ரீ ஆகும் ஈரான் சொத்துகள்: அமெரிக்கா, ஈரான் MoU-ன் 14 புள்ளிகள்? | Simplified

நேற்று (ஜூன் 17) ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள 14 புள்ளிகளாக அமெரிக்கா வெளியிட்டுள்ளவை... (புள்ளிகள் எளிமையாக்கப்... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தொடர்!

தவெக ஆட்சியின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இது என்பதைத் தாண்டி, இன்றைய சட்டமன்றம் மிகவும் கவனமாகக் கவனிக்கப்படக் காரணம் — தமிழ்த்தாய் வாழ்த்து.தமிழ்நாட்டின் வழக்கப்படி, தமிழ்நாடு அரசு நிகழ்வுகளில் ம... மேலும் பார்க்க