அமைதிகாக்கும் உத்தவ் கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் - இன்றைய கூட்டத்தில் பங்கேற்பா...
தேர்தல் பிரசாரத்தில் `ப்ரோ', `அங்கிள்' என்று பேசிய விஜய் எங்கே? - நயினார் நாகேந்திரன் காட்டம்
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்து 30 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 2 நாட்களில் மட்டும் 17 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளது. சூலூரில் 10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுள்ளார்.

இந்த சம்பவங்களெல்லாம் விஜய்க்கு தெரியுமா?
இதைப்பற்றியெல்லாம் வாய் திறக்காமல், முதல்வர் தினமும் காலை 10 மணிக்கு தலைமைச் செயலகம் வருகிறார். மாலை 5 மணிக்கு வீட்டிற்குச் செல்கிறார். இதில் மதியம் டிபன் பாக்ஸ் கொண்டு வந்து சாப்பிடுகிறார் எனப் பெருமையாகப் பேசுகிறார்கள்.
அவர் சந்திப்பது சினிமா பிரபங்களை மட்டுமே. கரூரில் 10 ரூபாய் பாடலுக்கு நடனமாடிய விஜய் தற்போது நடனமாடத் தயாரா?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அ.ம.மு.க எம்.எல்.ஏ-வை விலைக்கு வாங்கினர். தொடர்ந்து குதிரைபேரம் நடத்தி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி வருகின்றனர். த.வெ.கவில் உறுப்பினர்களை சேர்ப்பது என்பது வேறு. எம்.எல்.ஏக்களை பேரம் பேசி விலைக்கு வாங்குவது என்பது வேறு. இதன் மூலம் இடைத்தேர்தல் நடத்துவதால் அரசுப் பணம் வீணடிக்கப்படுகிறது. இது ஒரு முதிர்ச்சித்தன்மை அற்ற செயல்.

குதிரைபேரம் நடத்தி வரும் இந்த அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். அண்ணாமலைக்கு 17 லட்சம் பேர் ஆதரவு அளித்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஒரே நாளில் எனக்கும் 30 லட்சம் பேர் ஆதரவு அளித்துள்ளார்கள் என என்னாலும் கூற முடியும். அண்ணாமலை போன்ற நபர்கள் புதிதாக கட்சி தொடங்கியுள்ளதால் பா.ஜ.கவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது” என்றார்.















