செய்திகள் :

தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தொடர்!

post image

தவெக ஆட்சியின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இது என்பதைத் தாண்டி, இன்றைய சட்டமன்றம் மிகவும் கவனமாகக் கவனிக்கப்படக் காரணம் — தமிழ்த்தாய் வாழ்த்து.

தமிழ்நாட்டின் வழக்கப்படி, தமிழ்நாடு அரசு நிகழ்வுகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்... இறுதியில் தேசிய கீதம் பாடப்படும்.

ஆனால், 2025-ம் ஆண்டு தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150 ஆண்டு நிறைவையொட்டி, அனைத்து அரசு விழாக்களிலும் தேசிய பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

அர்லேகர் - விஜய்
அர்லேகர் - விஜய்

இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்பு விழா, அமைச்சர்கள் பொறுப்பேற்பு விழாவில் 'வந்தே மாதரம்' பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இது தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த இரு நிகழ்வுகளும் ஆளுநர் மாளிகையால் நடத்தப்பட்ட நிகழ்வு என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டது.

இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடர் தமிழ்நாடு அரசினுடையது ஆகும். அதனால்தான், தமிழ்த்தாய் வாழ்த்து மிகவும் கவனமாகக் கவனிக்கப்படுகிறது.

திமுக ஆட்சியில் கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அடுத்து தேசிய கீதம் ஒலிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டத்தொடரைப் புறக்கணித்து வெளியே சென்ற நிகழ்வுகள் நாம் அடிக்கடி பார்த்த ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றிருந்தபோதும், தேசிய பாடல் குறித்து இந்தியப் பிரதமர் மோடியிடம் கேட்டிருந்தார்.

தேசிய பாடலை முதலில் பாடுவது 'நெறிமுறைதானே தவிர, சட்டமில்லை' என்று கேரள முதலமைச்சர் சதீஷன் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இப்படி வெளிப்படையாக எதுவும் பேசவில்லை.

சட்டமன்றக் கூட்டத்தொடர்
சட்டமன்றக் கூட்டத்தொடர்

இந்த நேரத்தில்தான், இன்று சட்டமன்றக் கூட்டத்தொடர்.

ஆளுநர் அர்லேகர் சட்டமன்றத்திற்குள் வந்ததும், தமிழ்த்தாய் வாழ்த்து உடனேயே இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியது. தொடர்ந்து அடுத்ததாக, தேசிய கீதம் பாடப்பட்டது.

அமைதிகாக்கும் உத்தவ் கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் - இன்றைய கூட்டத்தில் பங்கேற்பார்களா?

மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியில் எம்.பி.க்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த சேர்ந்த 6 மக்களவை உறுப்பினர்கள் தங்களை ஒரு தனிப் பிரிவாக அங்கீகரிக்கக் கோரி நேற்று மக்களவ... மேலும் பார்க்க

தாக்கரே கட்சியில் `பிளவு 2.0' தனிஅணியாக அங்கீகரிக்க சபாநாயகரிடம் உத்தவ் கட்சி எம்.பி.க்கள் மனு!

மகாராஷ்டிரா சிவசேனாவில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட பிளவுக்கு பிறகு உத்தவ் தாக்கரே தனி கட்சி மற்றும் தனி சின்னத்துடன் செயல்பட்டு வருகிறார். ஆனாலும் தற்போது சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னத்தை தன் வசம் வைத்த... மேலும் பார்க்க

தேர்தல் பிரசாரத்தில் `ப்ரோ', `அங்கிள்' என்று பேசிய விஜய் எங்கே? - நயினார் நாகேந்திரன் காட்டம்

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்து 30 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 வன்கொடுமை சம்பவ... மேலும் பார்க்க

'நோ' அணுசக்தி டு ஃப்ரீ ஆகும் ஈரான் சொத்துகள்: அமெரிக்கா, ஈரான் MoU-ன் 14 புள்ளிகள்? | Simplified

நேற்று (ஜூன் 17) ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள 14 புள்ளிகளாக அமெரிக்கா வெளியிட்டுள்ளவை... (புள்ளிகள் எளிமையாக்கப்... மேலும் பார்க்க

”தவெக-வில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை” - குற்றம் சாட்டும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறையின் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், “சிங்கப்பெண் படையில் உள்ள பெண் காவலர்களின் நகைகளே திருடப்பட்டுள்ளன. அந்தப் படையில் உள்ள காவ... மேலும் பார்க்க

பி.டி.ஆர் vs மரிய வில்சன் : தவெக அரசின் வெள்ளை அறிக்கையின் போதாமைகள் என்னென்ன?

தமிழகத்தின் நிதி நிலையை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது த.வெ.க-வின் கூட்டணி அரசு. கடந்த 5 ஆண்டுகளில் கஜானா எந்தளவுக்கு காலியாக்கப்பட்டிருக்கிறது என்பதை வெளிக்க... மேலும் பார்க்க