செய்திகள் :

'தொகுதிப் பொறுப்பாளர்களை நியமிக்கலை, ஆனா...' - அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்?

post image

நடிகர் தனுஷ் அரசியல் நோக்கில் சில நகர்வுகளை செய்து வருவதாக பரவலாக பேசப்படுகிறது. அந்தவிதத்தில் தனுஷ் ரசிகர் மன்றத்தில் கோயம்புத்தூரை ஐந்து ஐந்து தொகுதிகளாக பிரித்து மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து தொகுதிவாரியாக பொறுப்பாளர்களை நியமித்து தனுஷ் அரசியலுக்கு அடித்தளமிடுகிறார் எனப் பேசப்படுகிறது.

Dhanush
Dhanush

அரசியல் எண்ணத்தில்தான் தனுஷ் தொகுதிவாரியாக பொறுப்பாளர்களை நியமிக்கிறாரா என்பதை அறிய அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது, 'கோயம்புத்தூரில் 10 தொகுதிகள் இருக்கிறது. அந்த மாவட்டம் முழுவதையும் சங்கத் தலைவர் நிர்வகித்து வந்தார். அவருக்கு உடல்நலக்குறைவு. அதனால் அவரால் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் பார்த்துக் கொள்ள முடியவில்லை.

அதனால் மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் வகையில் ஐந்து தொகுதிகளை பிரித்து 'கோவை தெற்கு' எனப் பெயரிட்டு சதீஷ் என்பவரிடம் கொடுத்துவிட்டோம்.

இதை எங்களின் நற்பணி மன்ற லெட்டர் பேடில் ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக அறிவிப்பாக வெளியிட்டோம். அவ்வளவுதான், மற்றபடி இதில் எந்த அரசியல் நகர்வும் இல்லை.

இப்போது வரை எங்களிடம் 54 மாவட்டத் தலைவர்கள் இருக்கிறார்கள். மாவட்டங்களை தொகுதியாகவெல்லாம் பிரிக்கவில்லை. எங்களின் நிர்வாக வசதிக்கு எப்படி தேவைப்படுகிறதோ அப்படித்தான் பிரித்திருக்கிறோம்.

Dhanush
Dhanush

கடந்த 10 ஆண்டுகளாகவே மன்றத்தில் ரசிகர்களை சேர்க்கும் பணி ஆக்டிவாக நடந்து வருகிறது. எங்களை நம்பி வரும் ரசிகர்களை நாங்கள்தானே முறைப்படுத்த வேண்டும். அதற்காக மட்டுமே இதையெல்லாம் செய்கிறோம். எதனால் வெளியே இது வேறு மாதிரியாக பேசப்படுகிறது என தெரியவில்லை. இப்போதைக்கு எந்த அரசியலும் இல்லை. எங்களின் பணிகள் அப்படியே தொடரும்' என்கின்றனர்!

காலம் கனியட்டும் என காத்திருக்கிறார்கள் போல!

'அமைச்சரின் கோபத்துக்கு காரணமான யூடியூபர்?; டயர்ட் ஆகும் எம்.எல்.ஏக்கள்! - சட்டமன்ற ஹைலைட்ஸ்!

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் நான்காம் நாள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இன்றைய நாளின் ஹைலைட்ஸ் இங்கே.தமீமுன் அன்சாரிஅவையில் தமீமுன் அன்சாரி பேசுகையில், 'சட்டமன்றத்தை இங்கிருந்து தீவுத்திடலுக்... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்: ``தவெக அரசுக்கும், முதல்வர் விஜய்க்கும் வாழ்த்துகள்" - சீமான்

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றத்தில் இன்று (ஆகஸ்ட்.10) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை வ... மேலும் பார்க்க

கோவை தொகுதிகளில் நற்பணி மன்றம்! - நடிகர் தனுஷின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வா?

தனுஷ், சமீபத்தில் தான் படித்த பள்ளிக்கு தனது சொந்த செலவில் 3 தளங்கள் கொண்ட கட்டடத்தைக் கட்டிக்கொடுத்தது, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தது, ரசிகர்களை சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுமாறு வலியுறுத்தியது... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு குறித்த புகார் அளிக்க WhatsApp எண் - முழு விவரம்!

விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் Anti-Narcotics Task Force (ANTF) அமைப்பை மேலும் வலுப்படுத்த தமிழக அரசு ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.இதன்படி, மாநிலம் முழுவதும் 65 சிறப்பு ANTF காவல் நிலையங்கள்... மேலும் பார்க்க

NEET போராட்டம்: `அமித் ஷா விளக்கம் தர ரெடி; ஆனால், ஒரு கண்டிஷன்!' - ரிஜிஜு சொல்வதென்ன?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக... மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த ஜூன் 6-ம் தேதியில் இருந்து ஜூலை 25-ம் தேதி வரை 36 நாள்கள் ஜந்தர் மந்தரில் போ... மேலும் பார்க்க

"நான் பைபிள் படித்திருக்கிறேன்; இப்படித்தான் பேசுவேன்!"- எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு மரிய வில்சன் பதில்

பட்டஜெட் விவாதக் கூட்டத்தொடரின் நான்காவது நாள் இன்று (ஆகஸ்ட்.10) சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவாதத்தின்போது, "சொற்பொழிவாளன் மற்றும் தமிழ் ஆர்வலர் என்ற முறையில் சொல்கிறேன். நிதியமை... மேலும் பார்க்க