செய்திகள் :

தொழிலதிபர் வீரமணி வழக்கு: ``20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த பாலியல் சுரண்டல்" - அதிர்ச்சி தகவல்!

post image

பிரபல கிரானைட் தொழிலதிபர் ஆர். வீரமணி (85) சம்பந்தப்பட்ட போக்சோ (POCSO) வழக்கில், 2003-ம் ஆண்டுக்கும் முன்பிருந்தே பல சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மேலும் பல சிறுமிகளின் வாக்குமூலங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாலியல் வன்கொடுமை

ஏழை மற்றும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை இலக்கு வைத்து, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் திட்டமிட்ட பாலியல் சுரண்டல் நடைபெற்றிருக்கிறது.

இந்த வழக்கில் முதன்மை குற்றவாளி வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் (IT) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மூத்த காவல் அதிகாரிகளின் தலைமையில் வீடியோ பதிவுடன் நடத்தப்பட்டு வரும் இந்த விசாரணை, போலீஸ் காவல் காலம் நிறைவடைந்ததும் முடிவுக்கு வரும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ChatGPT, ஏ.ஐ மூலம் தேர்வில் காப்பிடியத்த மும்பை ஐ.ஐ.டி மாணவர்: பிடிபட்டதால் விபரீத முடிவு!

மும்பை ஐ.ஐ.டியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் சாஹில் வகோடே. எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த சாஹில் வகோடே தேர்வின்போது விடைகளைக் கண்டரிய காப்பியடித்துள்ளார். அவர் இதற்காக தனது ம... மேலும் பார்க்க

புதுச்சேரி: பொய்ப் புகாரால் பெண்ணை பழிவாங்க நினைத்த முதியவர்! - போலீஸார் செய்த `சைலண்ட்’ சம்பவம்

புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் நகரைச் சேர்ந்தவர் கோபால். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமனின் உதவியாளராகப் பணிபுரிந்த இவர், ஆட்சியாளர்கள், அரசு உயரதிகாரிகள், தனி நபர்கள் என அனைவரையும் விமர்சி... மேலும் பார்க்க

சேலம்: மீன் கடையில் நீர் காகம் இறைச்சி விற்பனை; அத்துமீறும் வேட்டை கும்பல்... அதிர்ச்சி பின்னணி!

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகில் உள்ள கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு மீன் கடையில் நீர் காகம் ( Cormorant) இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இ... மேலும் பார்க்க

9 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: `தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்' - தொழிலதிபர் வீரமணி வழக்கு!

சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் அளித்த ரகசிய புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்புப் பிரிவு காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. புகார்தாரர் அளித்த பென்டிரைவை ஆய்வு செய்தபோது, ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: வைக்கோல் லாரியில் சென்ற சிறுவன்; மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்!

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள மார்க்கம்பட்டி எல்லைப்பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (23). லாரி ஓட்டுநரான இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரியில் எல்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு : மாமியாரைக் கொலை செய்த மருமகள் - சிக்கியது எப்படி?

செங்கல்பட்டில் பெரியநத்தம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பெருந்தேவி (61). இவரின் மகன் வெங்கடேசன் (34). அவரின் மனைவி இந்துஜா (28). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். செப்டம்பர் 13-ம் தேதி மாலை ... மேலும் பார்க்க