செய்திகள் :

தோல்விக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அந்த பண்பு.! - உலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜப்பானியர்கள்

post image

ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரிலிருந்து ஜப்பான் அணி வெளியேறிவிட்டது. ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில், பிரேசிலிடம் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் தோல்வியைத் தழுவியது. ஆனால், ஆட்டம் முடிந்த பிறகு மைதானத்தில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான சில காட்சிகள், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் மனதை வென்றுள்ளது.

ஜப்பான் ரசிகர்கள்
ஜப்பான் ரசிகர்கள்

ரசிகர்களுக்குத் தலைவணங்கிய வீரர்கள்!

போட்டி முடிந்ததும், ஜப்பானிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹஜிமே மோரியாசு, தனது வீரர்களை மைதானத்தின் மையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களிடம் சில வார்த்தைகள் பேசிய பிறகு, அணியினரைத் தங்களின் ரசிகர் பட்டாளம் இருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

தங்களின் உலகக் கோப்பைப் பயணம் முழுவதும் பெரும் ஆதரவளித்த ரசிகர்களுக்கு முன்னால், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்ட பயிற்சியாளர் மோரியாசு, ஆழமாகக் குனிந்து தலைவணங்கி நன்றி தெரிவித்தார். அவரைப் பின்தொடர்ந்து, அணியின் ஒவ்வொரு வீரரும் தலைவணங்கி மரியாதை செலுத்தினர். இந்த ஒரு செயல், தோல்வியின் வலியைத் தாண்டி அவர்களின் பண்பை உலகிற்குப் பறைசாற்றியது.

கடைசி நிமிடத்தில் கைநழுவிய வெற்றி

போட்டியின் முதல் பாதியில் கைஷு சானோ அடித்த கோல் மூலம் ஜப்பான் முன்னிலை பெற்றது. அதன்பிறகு, பிரேசிலின் தொடர் தாக்குதல்களைத் தங்களின் சிறப்பான தற்காப்பு ஆட்டத்தால் நீண்ட நேரம் தடுத்து நிறுத்தினர். ஜப்பானின் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட ஆட்டம், பிரேசில் அணிக்கு பெரும் சவாலாக அமைந்தது. இருப்பினும், ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் காசெமிரோ ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் கடைசி நிமிடங்களில் (ஸ்டாப்பேஜ் டைம்) கேப்ரியல் மார்டினெல்லி கோல் அடித்து பிரேசிலின் வெற்றியை உறுதி செய்தார். இந்தத் தோல்வி, உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றில் முதல் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஜப்பானின் கனவைத் தகர்த்தது.

தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதிதான். ஆனால், அந்தத் தோல்வியை ஏற்கும் விதம் இருக்கிறதே, அதுதான் ஒரு அணியின் உண்மையான குணத்தைக் காட்டும்.

அந்த வகையில், ஆட்டத்தில் தோற்றாலும், தங்களின் பணிவாலும், ரசிகர்களுக்குக் காட்டிய மரியாதையாலும் ஜப்பான் அணி அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளது. அவர்களின் இந்தச் செயல், கால்பந்து உலகில் நீண்ட காலத்திற்கு நினைவுகூரப்படும் என்பதில் சந்தேகமில்லை.

"சாக்குப்போக்கு வேண்டாம், இது எங்களுக்கு தகுதியான தோல்வி!" - ஜெர்மனி கேப்டன் கிம்மிச்சின் நேர்மை

ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், பராகுவே அணியிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் அதிர்ச்சித் தோல்வியடைந்து ஜெர்மனி அணி வெளியேறியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பை தொடர... மேலும் பார்க்க

பிழைப்புக்காக துணி விற்றவர்; இன்று உலகக் கோப்பை ஹீரோ! - ஜெர்மனியை வெளியேற்றிய ஆர்லாண்டோ கில்லின் கதை

கால்பந்து உலகம் அதுவரை பெரிதாக கேட்டிராத ஒரு பெயர்... ஒரே இரவில் சரித்திரம் படைத்திருக்கிறது. 2026 உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், நான்கு முறை சாம்பியனான ஜெர்மனியை பெனால்டி ஷூட் அவுட்டில் வ... மேலும் பார்க்க

கோல்கீப்பர் கைகளில் நொறுங்கிய நெதர்லாந்து கனவு - பெனால்டி ஷூட் அவுட்டில் மொராக்கோ `த்ரில்' வெற்றி!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 32 அணிகள் கொண்ட நாக்-அவுட் சுற்றில், பெனால்டி ஷூட் அவுட் வரை நீண்ட த்ரில்லான போட்டியில், நெதர்லாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி அடுத்த சுற்றுக்கு முன்ன... மேலும் பார்க்க

பிரேசிலுக்கு தண்ணி காட்டிய ஜப்பான்... இன்ஜுரி டைமில் மார்டினெல்லி மேஜிக்! பிரேசில் த்ரில் வெற்றி!

உலகக்கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், ஜப்பானுக்கு எதிரான போட்டியில் பிரேசில் அணி கடைசி நிமிட கோலால் 2-1 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மாற்று வீரர... மேலும் பார்க்க

Japan: தோல்வியின் கண்ணீரிலும் கடமை தவறாத ஜப்பான் - மைதானத்தை சுத்தம் செய்து உலகை வென்ற ரசிகர்கள்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 32 அணிகள் மோதும் நாக் அவுட் சுற்றில், பிரேசில் அணிக்கு எதிராக கடைசி நிமிடம் வரை கடுமையாகப் போராடி தோல்வியடைந்தாலும், ஜப்பான் அணியின் ரசிகர்கள் தங்கள் நன்னடத்தையால் மீ... மேலும் பார்க்க

உலகக்கோப்பை ஷாக்! பெனால்டியில் ஜெர்மனியை வெளியேற்றிய பராகுவே! - திக் திக் போட்டி!

கால்பந்து உலகக்கோப்பை 2026 தொடரின் மிகப்பெரிய அதிர்ச்சியாக, கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒன்றான ஜெர்மனி அணி, பராகுவே அணியிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. பர... மேலும் பார்க்க