செய்திகள் :

`த்ரில்லர்' சினிமாவான திருப்பத்தூர்: அமைச்சரை ‘ஒரு’ வாக்கில் வீழ்த்திய சீனிவாச சேதுபதியின் பின்னணி

post image

காங்கிரஸின் பாரம்பரியம், திமுக - அதிமுகவின் அதிகார பலம் எனப் பலமான அடித்தளம் கொண்ட சிவகங்கை மண்ணில், இம்முறை மொத்தமாக 'ஆப்பு' வைத்திருக்கிறது தவெக.

ஜாம்பவான்களைச் சாய்த்து நான்கு தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக அள்ளிய தவெக-வின் இந்த வேகம், தென்மாவட்ட அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

திராவிட கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சிவகங்கை மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் தனது 'வெற்றிக் கோட்டையாக' மாற்றியிருக்கிறார் விஜய்.

திருப்பத்தூர் தொகுதியில் ‘அமைச்சர் பெரியகருப்பன் கோட்டை’ என்கிற பிம்பத்தை உடைத்துச் சரித்திரம் படைத்திருக்கிறார் தவெக-வின் சீனிவாச சேதுபதி .

39 வயதான பி.இ., எம்.பி.ஏ பட்டதாரியான இவர், தனது அண்ணனின் மருத்துவமனையை கவனித்து வருகிறார்.

தவெக மாவட்ட இணைச் செயலாளரான இவருக்கு எதிரே நின்றதோ, நான்கு முறை தொடர்ச்சியாக வென்று இரண்டு முறை அமைச்சராக வலம் வந்த திமுக-வின் பெரும்புள்ளி பெரியகருப்பன்!

இவரை எதிர்த்து நிற்க உள்ளூர் தவெகவினர் எவரும் முன்வரவில்லையாம். இதற்குப்பின்னர்தான் திருவாடனை அருகே உள்ள கற்காத்தாக்குடியில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து தற்போது காரைக்குடியில் வசித்துவரும் சீனிவாச சேதுபதியை தேடிக் கொண்டுவந்துள்ளனர்.

பெரிய கருப்பனின் பிரமாண்ட அரசியலுக்குமுன் யாரும் எடுபட முடியாது என்று பிரசாரத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் ஒதுங்கி இருந்தவரை விஜய் அலை திருப்பத்தூர் தொகுதி எம் எல் ஏ வாக உயர்த்தி இருக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தின் 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் நடந்தது. அங்கு வாக்கு எண்ணிக்கையின்போது திருப்பத்தூர் தொகுதிதான் பெரிய `திக் திக்' மாற்றத்தை உருவாக்கியது.

உதய சூரியனும், விசிலும் மாறி மாறி முன்னிலை வகிக்க பரபரப்புக் கூடியது. நள்ளிரவுவரை நீடித்த இந்த வாக்கு எண்ணிக்கையில் அமைச்சர தரப்பு பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வெற்றியை தக்க வைக்க தகராறு செய்தது.

பெரியகருப்பன்

இதனால் பல தடவை திரும்ப திரும்ப எண்ணிக்கை நடத்தி கடைசியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் விசில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

த்ரில்லர் சினிமா பாணியில் வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் அமைச்சரை வீழ்த்தி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் திருப்பத்தூர் பக்கம் திரும்ப வைத்திருக்கிறார் இந்த இளம் வேட்பாளர்.!

"அந்த கட்டட தொழிலதிபராலத்தான் இத்தனை குழப்பம்.!" - பொங்கும் அ.தி.மு.க கிளர்ச்சியாளர்கள்

அ.தி.மு.க-வுக்குள் உச்சக்கட்ட குழப்பம் வெடித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளான இன்று, தொண்டர்கள் குழுமி அவருக்கு வாழ்த்து தெரிவித்தாலும், அவரது வலது இடது கரங... மேலும் பார்க்க

`குதிரை பேர அரசியல்: 'மாற்றமல்ல துர்நாற்றம்' - தவெக-வை கடுமையாகச் சாடும் டிடிவி தினகரன்!

அ.ம.மு.க சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்ட எஸ்.காமராஜ், தி.மு.க-வின் டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்து எம்.எல்.ஏ ஆனார். த.வெ.க-வுக்கு ஆதரவு கடிதம் கொடுத்ததாக தகவல் பரவிய நிலையில், "தன் கட்சி எம்.எல்.ஏ-வ... மேலும் பார்க்க

”ஆளுங்கட்சியில் இருப்பதுதான் சேஃப்”- அமமுக-வில் இருந்து நீக்கம்; பொங்கிய எஸ்.காமராஜ்!

அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ். டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்ததால் அரசியல் வட்டத்தில் இவர் மீது தனி கவனம் விழுந்தது. இந்நிலையில் எஸ்.காமராஜ் தவ... மேலும் பார்க்க

'மோடியின் பேச்சில் மர்மம் ஒளிந்திருக்கிறது; இந்திய பொருளாதாரம் மோசமான.!'- கெஜ்ரிவால் காட்டம்

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்ட... மேலும் பார்க்க

சி.வி சண்முகம் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த `முதல்வர்' விஜய் - எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா?

தமிழ்நாடு அரசியலில் தேர்தல் முடிவு வெளியான மே-4 க்குப் பிறகு பிரேக்கிங் நியூஸுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பாரா என்பதில் தொடங்கி தற்போது அ.தி.மு.க-வின் எம்.ஜி.ஆர் மாளி... மேலும் பார்க்க

தேனி: துடைத்தெறியபட்ட அதிமுக… கட்சிக்கு கஷ்ட காலத்தில் கைகொடுத்த மாவட்டத்தில் வீழ்ச்சி! என்ன காரணம்?

அ.தி.மு.க -வின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் களம் கண்டு வெற்றி பெற்ற மாவட்டம் தேனி. இங்கு உள்ள நான்கு தொகுதிகளிலும் கோலோச்சி வந்த அ.தி.மு.க, தற்போது நடந்... மேலும் பார்க்க