செய்திகள் :

நண்பருடன் கோயிலுக்கு சென்ற சிறுமி; போலீஸ் எனக்கூறி கூட்டு பாலியல் வன்கொடுமை - டெல்லி அதிர்ச்சி

post image

டெல்லியில் கடந்த வாரம் தான் தனது நண்பர்களுடன் சென்ற மைனர் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு திறந்த வெளியில் வீசப்பட்டார். அதற்குள் மேலும் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்து இருக்கிறது.

தெற்கு டெல்லியில் உள்ள கல்காஜி கோயிலுக்கு நேற்று இரவு 7 மணியளவில் 17 வயது மைனர் சிறுமி தனது 17 வயது ஆண் நண்பருடன் சென்றார். கோயிலில் பிரார்த்தனை செய்த பிறகு, இருவரும் இரவு 7:30 மணியளவில் கோவிலுக்கு அருகிலுள்ள பூங்காவிற்குச் சென்றனர்.

அங்கு மூன்று பேர், சுமார் 25 முதல் 30 வயதுடையவர்கள், அவர்களை அணுகி தங்களை போலீஸ்காரர்கள் என்று கூறினர். அவர்கள் மூன்று பேரும் மைனர் பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது மூன்று பேரில் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

பூங்கா

அதன்பிறகு, மேலும் இரண்டு பேரும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இருவர் பிடித்துக்கொள்ள ஒருவர் பாலியல் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மூன்று பேரும் அப் பெண்ணையும் அவரது நண்பரையும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்து அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க உடனே தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பூங்காவில் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிய அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு தனிப்படை இக்குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை அமர் காலனி பகுதியில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அந்த நபரை கைது செய்ய முயன்றபோது ​​அந்த நபர் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும், அவர் போலீஸார் மீது மூன்று முறை சுட்டார். இதையடுத்து, போலீஸார் அவரது வலது காலில் சுட்டு அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் ஆசிஃப் எனவும், ஓக்லா மண்டியில் பணிபுரிபவர் என்றும் தெரிய வந்தது.

மூன்று பேருக்கும் எதிராக போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இரண்டு குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

10 நாளில் 4 சிறுமிகள் பெண்கள் பாலியல் வன்கொடுமை

டெல்லியில் கடந்த 10 நாட்களில் 4 மைனர் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ம் தேதி வடமேற்கு டெல்லியின் ஸ்வரூப் நகரில், மூன்று சிறார்கள் உட்பட நான்கு பேரால் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து 16ம் தேதி வடக்கு டெல்லியின் சதார் பஜார் பகுதியில் உள்ள ஒரு கடையில், 6-ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி ஒருவரின் கை, கால்கள் கட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 21ம் தேதி மத்திய டெல்லியின் கிஷன் கஞ்ச் பகுதியில் 34 வயது நபர் ஒருவரால் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது கல்காஜி பூங்காவில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

நடுரோட்டில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை; "இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்" - பீகார் அமைச்சர் பேச்சு

பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில், பயிற்சி வகுப்பிலிருந்து தனது ஆண் நண்பருடன் திரும்பிக்கொண்டிருந்த 10வது மாணவியை ஒரு கும்பல் வழிமறித்துச் சூழ்ந்துகொண்டது, அவர்களிடம் விசாரணை நடத்தியதோடு, அவர்களைத் தாக்க... மேலும் பார்க்க

ஜெம் வீரமணியைக் கைது செய்யாமலிருக்க கோடிகளில் பேரமா? சிறுமிகளிடம் ரகசிய வாக்குமூலம்; பின்னணி என்ன?

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவையும், பென் டிரைவரையும் கொடுத்தார். அதன் அடிப்படையில் தொழிலதிபரும் ஜெம் கிராணைட் குழுமத்தின் தலைவரான வீரமணியை சென்ன... மேலும் பார்க்க

கும்பகோணம்: திமுக பிரமுகருக்குச் சொந்தமான லாட்ஜில் பாலியல் தொழில்; 10 பெண்கள் மீட்பு; 3 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள லாடஜ், ஸ்பா உள்ளிட்ட இடங்களில், அதிகப்படியாக பாலியல் தொழில் நடப்பதாக, எஸ்.பி சுந்தரவதனத்திற்குப் புகார்கள் சென்றுள்ளன. இது தொடர்பாக, கும்பகோணம் மேற்கு மற்றும... மேலும் பார்க்க

`ரூ.60 கோடி தங்கப் புதையல் கிடைச்சிருக்குது!’ – மளிகைக் கடை அண்ணாச்சியை ஏமாற்றி ரூ.20 லட்சம் `அபேஸ்’

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த ராஜா, எட்டயபுரத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் இவரை செல்போனில் தொடர்புகொண்ட முன்பின் அறிமுகமில்லாத நபர் ஒருவர், `மளிகைக் ... மேலும் பார்க்க

தொழில்துறை : `கெஸ்ட் ஹவுஸுக்கு வரச்சொன்ன முதல்வரின் உதவியாளர்' - தெலங்கானா பெண் தொழிலதிபர்

தெலங்கானா மாநிலத்தில் விளம்பரத்துறையில் தொழில் வாய்ப்புகளுக்காக முயன்ற பெண் தொழிலதிபர் ஒருவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் பேசுபொருளாகியிருக்கிறது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கே. சோபா ... மேலும் பார்க்க

சாதி ரீதியான துன்புறுத்தலால் மாணவர் தற்கொலை? போராடிய மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்ற மும்பை ஐஐடி

மும்பை ஐ.ஐ.டியில் தேர்வில் மொபைல் போன் மூலம் காப்பியடித்த மாணவர் சாஹில் பிடிப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு தேர்வு மையத்தில் இருந்த பேராசிரியர் சூரிய நாராயணா மாணவனை ... மேலும் பார்க்க