செய்திகள் :

"நரகத்திற்கு வரவேற்கிறோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்; போர் முனையில் 2,500 கடற்படையினர்!

post image

இஸ்ரேலும் - அமெரிக்காவும் கூட்டு சேர்ந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து தொடங்கிய இந்தப் போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் சந்தித்துப் போரை நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதே வேளையில், மேற்கு ஆசியாவில் தரைவழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியானது.

யுஎஸ்எஸ் திரிபோலி
யுஎஸ்எஸ் திரிபோலி

அதை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் பிரமாண்டமான 'யுஎஸ்எஸ் திரிபோலி' (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்தது. அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மறுபுறம், லெபனானின் தெற்குப் பகுதியில் தனது ஊடுருவலை விரிவாக்கவும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைக்கவும் இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.

இந்த விவகாரம் தீவிரமான நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப், ``அமெரிக்கத் வீரர்கள் தரைவழியாக வருவதற்காக ஈரானியப் படைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்களைத் தீயிட்டுக் கொளுத்தவும், அவர்களது பிராந்தியக் கூட்டாளிகளை நிரந்தரமாகத் தண்டிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். எங்களது ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன. எங்களது உறுதியும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

முகமது பாகர் கலிபாப்
முகமது பாகர் கலிபாப்

இதற்கிடையில் கடந்த சனிக்கிழமையன்று யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக நடக்கும் கடல்சார் வணிகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க் தீவைக் (Kharg Island) கைப்பற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

இதற்குப் பதிலடியாக, ஈரானின் அரசு நாளிதழான 'தி டெஹ்ரான் டைம்ஸ்', தனது முதன்மைப் பக்கத்தில் "நரகத்திற்கு வரவேற்கிறோம்" எனத் தலைப்பிட்டு, "ஈரான் மண்ணில் கால் வைக்கும் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டியில்தான் திரும்புவார்கள்" என உளவியல் ரீதியான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சனிக்கிழமையன்று சவூதி அரேபியாவிலுள்ள இளவரசர் சுல்தான் விமானத் தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன AWACS விமானம் சேதமடைந்தது. இது மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்திற்குப் பலத்த அடியாகக் கருதப்படுகிறது. இப்போருக்காக அமெரிக்கத் பாதுகாப்புத் துறை, நாடாளுமன்றத்திடம் கூடுதலாக 200 பில்லியன் டாலர் நிதியைக் கோரியுள்ளது.!

`இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்' - பழைய நினைவில் பேசிய செங்கோட்டையன்; சட்டென சுதாரிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, அக்கட்சியின் கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் அ.தி.மு.க - வின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன். ஈரோடு மாவட்டம், பவான... மேலும் பார்க்க

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க