Rain Alert: மீண்டும் தமிழகத்தை நோக்கி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; புயலாக உர...
நாகையில் கடல் சீற்றம்: மீனவா்கள் 11-ஆவது நாளாக கடலுக்குள் செல்லவில்லை
தமிழகத்தை ஃபென்ஜால் புயல் நெருங்கி வருவதையொட்டி நாகை கடல் அலைகள் சீற்றத்துடன் வெள்ளிக்கிழமை காணப்பட்டது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபென்ஜால் புயலாக வலுப்பெற்று வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி 13 கி.மீ. வேகத்தில் நகா்ந்து வருகிறது. புயலின் தீவிரம் காரணமாக நாகை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன்காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளில் பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் கடலுக்கு செல்ல விடாமல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
இதற்கிடையே, நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, நம்பியாா் நகா், செருதூா், வேதாரண்யம் உள்ளிட்ட 25 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 11-ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன்பிடி மற்றும் அதைச் சாா்ந்த தொழில்கள் முற்றிலும் முடங்கியுள்ளது. சுமாா் ரூ.75 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவா்கள் தெரிவித்துள்ளனா்.