செய்திகள் :

நாங்குநேரி கொடூரம்: 'சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக?'- இபிஎஸ் கண்டனம்

post image

நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.

6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்தக் கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்து, 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய விடியா திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள்.

இது தங்கள் சமூகத்தைக் குறிவைத்து நடந்த தாக்குதல் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அச்சத்துடன் போராடி வருகின்றனர் அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள்.

இதே நாங்குநேரி தொடங்கி, தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு? வேடிக்கை மட்டும் தானே பார்த்துக்கொண்டு இருந்தது?

தொடர்ந்து இப்பகுதியை பதற்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டுமென்பது தான் திமுக அரசின் எண்ணமா? தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை வளர்த்து விடுகிறதா திமுக? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மக்களிடையே எழுகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

வாய்கிழிய மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, தனது ஆட்சியில் சமூக மோதல்களைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது; கடும் கண்டனத்திற்குரியது.

பெரும்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

`எண்ணிக்கையில் கறார் வேண்டாம்' - ராகுலை சரிகட்டிய கார்கே? - ப.சிதம்பரம் போடும் `2028' கணக்கு!

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பிறகு சில தகவல்களை டெல்லி மேலிடத்திற்கு தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இன்று மாலைக்குள் தி.மு.க வுடன் எண்ணிக்கை இறுதியாகும் என்கிற... மேலும் பார்க்க

'4 மணிக்கு மகள் நிச்சயதார்த்தம்; அந்தரத்தில் கூட்டணி! சித்தரஞ்சன் சாலையில் போராடும் செல்வப்பெருந்தகை

திமுக - காங்கிரஸ் கூட்டணி இழுபறியில் நீடித்து வரும் நிலையில் ப.சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் முதல்வரை சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 4 மணிக்கு ECR இல் மகளின் நிச்சயதார்த்தம் ... மேலும் பார்க்க

லாரி லாரியாக இறங்கும் டிரம்கள் - கோவை தொண்டாமுத்தூரில் அடுத்த பரிசை இறக்கிய வேலுமணி!

கோவை மாவட்டத்தில் எப்படியாவது வெற்றி பெற திமுக தீவிரம் காட்டுகிறது. கோவையில் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க அதிமுக திட்டமிட்டு வருகிறது. கோவையில் அதிமுகவின் வெற்றியை வேலுமணி தன்னுடைய கௌரவ பிரச்னையாகவே ... மேலும் பார்க்க

சிதம்பரம் கொண்டு வந்த `சீக்ரெட்' மெசேஜ்! உற்சாகத்தில் தி.மு.க - `கை'கொடுக்குமா சிதம்பர முயற்சி?

காங்கிரஸ் - தி.மு.க இடையே நிலவி வந்த சிக்கலுக்கு, சிதம்பரம் வழியாக முடிவு எடுக்கபட்டுவிட்டது என்கிற தகவலை காங்கிரஸ் வட்டாரத்தினர் சிலர் உறுதிபடுத்தியுள்ளனர். ஸ்டாலினுக்கு தான் சொல்லி விரும்பிய மெசேஜை ... மேலும் பார்க்க

'திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் ப.சிதம்பரம்?' என்னவாகிறது திமுக - காங்கிரஸ் கூட்டணி?

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொடர் இழுபறி நிலவி வரும் நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.ஸ்டாலின்திமுக - காங்கிரஸ் கூட்டணி இட... மேலும் பார்க்க