செய்திகள் :

நாடாளுமன்றத்திற்குள் 'நோ' ஸ்மார்ட் வாட்ச்; வாகனத்தில் 10 கி.மீ மேல் வேகம் 'நோ'; MP-களுக்கான ரூல்ஸ்!

post image

வருகிற ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை, நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்க உள்ளது.

இந்தக் கூட்டத்தொடர்களை அவை தலைவர்கள் வழிநடத்துவார்கள்... நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவார்கள்... - இதை டிவியிலோ, சோசியல் மீடியாவிலோ பார்த்திருப்போம்.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் ஃபாலோ செய்ய வேண்டிய சில ரூல்ஸ் இருக்கின்றன. அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளலாமா?

வருகிற கூட்டத்தொடருக்கு மக்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் இதோ...

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

> நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஆயுதங்கள் அல்லது வெடிபொருள்கள் கொண்டு வருவதற்குத் தடை.

> அவை தலைவரின் முன் அனுமதி இல்லாமல் எந்தவொரு புத்தகங்கள், கேள்வித்தாள்கள், துண்டுப் பிரசுரங்கள், பத்திரிகைக் குறிப்புகள் அல்லது அச்சிடப்பட்ட எந்தவொரு பொருளையும் வளாகத்திற்குள் விநியோகிக்கக்கூடாது.

> நாடாளுமன்ற வளாகத்திற்குள் வாகனங்களின் வேகம் மணிக்கு 10 கி.மீ ஆக இருக்க வேண்டும்.

> அவைக்கு இடையூறு இல்லாத வகையிலும்... அவைக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் மக்களவைக்குள் மொபைல் போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட வேண்டும்... அலாரங்கள் ஆஃப் செய்யப்பட வேண்டும்.

> நாடாளுமன்ற உறுப்பினரின் ஒரே ஒரேயொரு உதவியாளருக்கு மட்டும் கூட்டத்தொடருக்கான பாஸ் வழங்கப்படும்.

> நாடாளுமன்றக் கட்டடத்தின் நுழைவாயில்கள் முன்பு எந்தவிதப் போராட்டங்களோ அல்லது தர்ணாக்களோ நடத்தக்கூடாது.

> ஸ்மார்ட் கண்ணாடிகள், பேனா கேமராக்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் போன்ற நவீன சாதனங்களுக்குத் தடை. காரணம், இவை உறுப்பினர்களின் தனியுரிமை மற்றும் நாடாளுமன்றச் சிறப்புரிமைகளை மீறும் வகையில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

’கோவை தவெக-வில் உட்கட்சிப் பூசலா?’ – சூலூர் எம்.எல்.ஏ சுகுமார் விளக்கம்!

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் நேற்றிரவு கணியூர் பகுதியில், தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு வாகனத்தில் சென்றபடி நன்றி தெரிவித்தார். அப்போது அங்கு திரண... மேலும் பார்க்க

"உங்கள் பிரதமரின் வயது என்ன? நான் எப்போதாவது கேட்டேனா?" - மம்தா பானர்ஜி தாக்கு

15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு, இந்த முறை சொந்த தொகுதியிலேயே வெற்றியைத் தரவில்லை மக்கள். ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக... மேலும் பார்க்க

"எந்தவொரு உயிரும் விலைமதிப்பற்றது" - சோனம் வாங்சுக் உடல்நிலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி இன்றுடன் 19 நாள்கள் ஆகின்றன. நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கும் நீட் மாணவர்களின் மரணத்திற்கும் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பத... மேலும் பார்க்க

`தவெக புதிய தொழிற்சங்கம்; நீண்ட கால ரசிகரை தலைவராக்கும் முதல்வர் விஜய்?' - திட்டத்தின் பின்னணி!

திமுக, அதிமுக, கம்யூனிஸ்டுகளை போல தவெகவுக்கும் தொழிற்சங்கத்தை ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிறார் முதல்வர் விஜய். இந்த தொழிற்சங்கத்தின் தலைவராக தனது நீண்ட நாள் ரசிகர் ஒருவரின் பெயரையும் விஜய் டிக் அடித்... மேலும் பார்க்க

`இரானின் துருப்புச்சீட்டு' - போர் நிறுத்த மீறல்களும், மீண்டும் வெடித்த இரான் அமெரிக்க மோதல்களும்!

மேனாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை, லண்டன். கட்டுரையாளர் : மணிவண்ணன் திருமலை இரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திய `ஜூன் 17 போர் நிறுத்தப் புரிந்துணர்வு' ஒப்பந்தம் ஏற்பட்டு சற்றே... மேலும் பார்க்க

Dark web-ல் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவுகள் கசிவு; பாதுகாப்பிற்கு என்னென்ன அச்சுறுத்தல்கள்?

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது கூடங்குளம் அணுமின் நிலையம். இது ரஷ்ய நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்ட அணுமின் நிலையம் ஆகும். இங்கே தற்போது தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இ... மேலும் பார்க்க