செய்திகள் :

நாமக்கல்: அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்; நிகழ்விடத்தில் மூவர் பலியான சோகம்

post image

நாமக்கல்லில் இருந்து சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று திருச்சி நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தது.

நாமக்கல்-திருச்சி பிரதான சாலையில் ரமேஷ் தியேட்டர் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, நாமக்கல் நோக்கி எதிர்புறத்தில் சாக்குப் பை ஏற்றி வந்த மினி வேனும், டேங்கர் லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

அப்போது, மினி வேனுக்குப் பின்னால் வந்த இருசக்கர வாகனமும் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், ஜெய்நகரைச் சேர்ந்த சேனாதிபதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், மினி வேனை ஓட்டி வந்த கர்நாடகத்தைச் சேர்ந்த ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

விபத்து
விபத்து

இந்த விபத்தில் டேங்கர் லாரி ஓட்டுநர் மற்றும் மினி வேனில் வந்த மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாமக்கல் நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து நாமக்கல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளது நாமக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை: லிஃப்ட்டில் பலூன்களுடன் ஏறிய நபர்; நொடிப் பொழுதில் நடந்த அசம்பாவிதம்; இருவர் காயம்!

மும்பை, கோரேகாவ் பகுதியில் உள்ள அமோல் டவர் என்ற குடியிருப்பு கட்டடத்தில் இருக்கும் லிஃப்டில் பலூன் வெடித்து தீப்பிடித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜ்குமார் என்பவர் சாக்குமூட்டையில் ஹீலியம் ... மேலும் பார்க்க

இரு விமானங்களின் இறக்கைகள் உரசிக்கொண்டு விபத்து - மும்பை விமான நிலையத்தில் திக் திக்.!

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை மும்பையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது. அந்நேரம் ஐதராப... மேலும் பார்க்க

Ajit Pawar: 'நிறைவேறாத முதல்வர் கனவு; ஆட்சியைப் பிடித்த வாக்குறுதி' - யார் இந்த அஜித் பவார்?

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இன்று அதிகாலை தனி விமானத்தில் தனது பாதுகாவலர்களுடன் தனது சொந்த ஊரான பாராமதிக்குச் சென்று கொண்டிருந்தார்.விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பாராமதியில் விம... மேலும் பார்க்க

Ajit Pawar: துணை முதல்வர் பயணித்த விமானம் விபத்து! - சொந்த ஊரில் அஜித் பவார் உயிரிழந்த சோகம்

மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (புதன்கிழமை) காலை மும்பையிலிருந்து பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். காலை சுமார் 8:45 மணியளவ... மேலும் பார்க்க

கோவை மாநகரை கரும்புகையால் மூழ்கடித்த தீ விபத்து; களமிறங்கிய ராணுவம்; தீயணைக்கப்பட்டது எப்படி?

கோவை காட்டூர் பகுதியில் வாகன உதிரி பாகங்கள் விற்பனைக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.மூன்று மாடி கட்டிடமான அதன் தரைத்தளத்திலிருந்து, மொட்டை மாடி வரை அனைத்து தள... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர்: விபத்துக்குள்ளான ராணுவ வாகனம்... 10 வீரர்கள் பலி, பலர் படுகாயம்! - விவரம் என்ன?

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் கானி டாப் பகுதியில் ராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் ராணுவ வீரர்களும், உள்ளூர் நிர்வாகக் குழுக்களும் உடனே சம்பவ இ... மேலும் பார்க்க