செய்திகள் :

நாளை டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம்; திமுக பங்கேற்கவில்லை: 'ஒற்றுமையாக இருக்கிறோம்' - காங்கிரஸ்

post image

நாளை டெல்லியில் இந்தியா கூட்டணியின் கூட்டம் நடக்க உள்ளது.

இந்தக் கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளாது. ஆனால், கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலன்களைப் பாதிக்கும் பிரச்னைகளுக்கு திமுக என்றென்றும் குரல் கொடுக்கும் என்று திமுக அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், நாளை நடக்க உள்ள கூட்டம் குறித்து இந்திய தேசிய காங்கிரஸின் தகவல் தொடர்புப் பொறுப்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்...

`இந்தியா’ கூட்டணி
`இந்தியா’ கூட்டணி

"நாளை, ஜூன் 8, 2026 திங்கட்கிழமை மதியம் 12 மணிக்கு புதுடெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் (Constitution Club) நடைபெறவிருக்கும் 'இண்டியா ஜன்பந்தன்' (INDIA janbandhan) கூட்டத்தில் பங்கேற்பதை 23 அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஒரு சில கட்சிகள் தங்களின் சொந்தக் காரணங்களால் இந்தக் குறிப்பிட்ட கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமையை வெளிப்படுத்தியுள்ளனர் - இருப்பினும், மோடி அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு தங்களது கடுமையான எதிர்ப்பை அவர்களும் தெரிவித்துள்ளனர்.

கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிப்பது, நாள்தோறும் அரசியலமைப்பைச் சீர்குலைப்பது, புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை வேட்டையாடுவது, கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிப்பது, தொடர் விலைவாசி உயர்வால் குடும்ப பட்ஜெட்டுகளைத் தலைகீழாக்குவது, லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையையும் ஆசைகளையும் சிதைப்பது, முதலீட்டுச் சூழலை முடக்குவது மற்றும் வெளியுறவுக் கொள்கையின் மூலம் நாட்டின் தேசிய நலனில் சமரசம் செய்துகொள்வது என மோடி அரசின் மக்கள் விரோதச் செயல்களுக்கு எதிரான தங்களின் நிலைப்பாட்டை அவர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்தியாவைப் போலவே, 'இண்டியா ஜன்பந்தன்' கூட்டணியும் தனது பன்முகத்தன்மையோடு என்றும் ஒற்றுமையாகத் துடிப்புடன் நிற்கிறது".

TNEB-ல் இப்போது 300 AEE-களுக்கு வேலை; மீதி 116 பேர் தகுதியற்றவர்களா? தவெக அரசுக்கு திமுக கேள்வி!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதில் உள்ள‌ குளறுபடிகள் குறித்து திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கை இதோ..."நாள் ஒரு பொய்! பொழுதொ... மேலும் பார்க்க

'வெளிச்சம் டிவி எழுச்சி தமிழருக்காக தொடங்கப்பட்டது; அப்படியே தொடரும்'- திமுகவில் இணைந்த பனையூர் பாபு

இன்று விசிகவின் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளர் பனையூர் பாபு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.திமுகவில் ஏன் இணைந்தார் என்பது குறித்து பனையூர் பாபு கூறுவதாவது..."எப்போதும் அம்பேத்கர்... மேலும் பார்க்க

'மாநகராட்சியில் சொத்துக்கணக்கை காட்டாத மேயர் பிரியா உட்பட 157 கவுன்சிலர்கள்!' - விவரம் என்ன?

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியை சேர்ந்த 157 மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துக் கணக்கை மாநகராட்சியில் தாக்கல் செய்யவில்லை என்கிற தகவல் வெ... மேலும் பார்க்க

பதவியேற்ற செ.ம.வேலுசாமி, புறக்கணித்த எஸ்.பி.வேலுமணி – கோவை அதிமுகவில் தொடரும் மோதல்!

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கட்சி பதவிகள் பறிக்கப்... மேலும் பார்க்க

விசிகவில் இருந்து திமுக-வில் இணைந்தார் பனையூர் பாபு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் போட்டியிட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சி.பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றாலும், இந்தத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறவில்லை தமிழக வெற்றிக் கழகம்.... மேலும் பார்க்க

‘சீமான் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறியது ஏன்?' – காங்கிரஸ் கடும் தாக்கு!

காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி மேடைகளில் நகைச்சுவை நாடகம் நடத்தும் சீமானுக்கு, அந்தக் கேள்வியை... மேலும் பார்க்க