செய்திகள் :

"அதிமுகவின் வரலாறு தெரிந்துகொண்டு பேச வேண்டும்" - நிர்மல் குமாருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

post image

அதிமுக குறித்து நேற்று மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், "கேபினட் அமைச்சர் பதவி கொடுத்தால் அதிமுகவை பாஜகவில் இணைக்கும் நிலைமையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ராஜ்ய சபா சீட் தந்தால் திமுகவில்கூட கட்சியை இணைக்கும் நிலையில் இருக்கிறார்.

அதிமுக தலைமையிடம் உறுதி இல்லை. கட்சித் தலைமை கைவிட்டதால் பலர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகின்றனர்" என்று பேசியிருந்தார்.

CTR. நிர்மல் குமார்
CTR. நிர்மல் குமார்

இதற்கு பதிலடி தருவது போல, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் அதிக வாக்குகள் ஏறத்தாழ ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் நம்பிக்கையைப் பெற்றவர் எடப்பாடி பழனிசாமி.

அந்த நம்பிக்கையை தமிழ்நாடு முழுவதும் பெறும் நாள் வெகு தொலைவிலே இல்லை.

விஜய் தம்பி தன் மீதே நம்பிக்கை இல்லாமல் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் ராஜினாமா செய்திருக்கிறார்.

எடப்பாடியார் தலைமையிலே உழைக்கிற விசுவாசத் தொண்டர்கள் ஒரு செங்கலை கூட மாற்ற விடமாட்டார்கள்.

பல கட்சி மாறிகள் இன்றைக்கு அதற்கு விளக்கம் கொடுக்கிறார்கள். மதுரையிலே கூட இந்த மாவட்டத்தினுடைய அமைச்சர் அவருக்கு தெரிந்த வரலாறைச் சொல்லி இருக்கிறார். ஆனால் அவரது வரலாறு மதுரை மக்களுக்கு தெரியும்.

அவர் சமீப காலங்களில் மட்டும் எத்தனை கட்சிக்கு மாறி இருக்கிறார்? அதிமுகவில் இருந்தார்... பிறகு பாரதிய ஜனதா கட்சியிலே அண்ணாமலையிடம் டிஜிட்டல் ப்ரோக்ராமராக இருந்தார்... அதற்குப் பிறகு எடப்பாடி அவர்கள் தலைமை ஏற்று அதிமுகவில் இருந்தார். கடைசியாக திமுகவுக்கு போனார்.

இப்போது கூட அதிமுக ஆட்சிக்கு வந்தால், மீண்டும் அதிமுகவுக்கே அடைக்கலம் தேடி வருவார்.

வாழ்ந்தாலும் ஒரே இயக்கம், வீழ்ந்தாலும் ஒரே இயக்கம், ஒரே கொள்கை, ஒரே லட்சியம், ஒரே தலைவருக்கு வாழ்கிற கோடிக்கணக்கான தொண்டர்கள் இந்த இயக்கத்தை காப்பாற்றுவார்கள்.

இந்த வரலாறு தெரிந்து கொண்டு அமைச்சர் எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். இனியும் இது போன்று பேசினால் அது கடுமையான எதிர் விளைவுகளை தேர்தல் களத்திலயும் மக்கள் மன்றத்திலும் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை எச்சரிக்கையாகச் சொல்கிறேன்."

விசிகவில் இருந்து திமுக-வில் இணைந்தார் பனையூர் பாபு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் போட்டியிட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சி.பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றாலும், இந்தத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறவில்லை தமிழக வெற்றிக் கழகம்.... மேலும் பார்க்க

‘சீமான் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறியது ஏன்?' – காங்கிரஸ் கடும் தாக்கு!

காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி மேடைகளில் நகைச்சுவை நாடகம் நடத்தும் சீமானுக்கு, அந்தக் கேள்வியை... மேலும் பார்க்க

`அதிமுக-வை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது; பீனிக்ஸ் பறவையைப்போல மீண்டெழும்' - எடப்பாடி சூளுரை

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அ.தி‌.முக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி மக்களுக்கான நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நேற்று பங்கேற்றிருந்தார். கட்சி... மேலும் பார்க்க

புதுச்சேரி: தந்தையை பராமரிக்காத மூன்று மகன்களுக்கு சிறைத் தண்டனை! - அதிரடி காட்டிய பெண் நீதிபதி

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. மனைவியை இழந்த முனுசாமிக்கு தற்போதைய வயது 84. இவருக்கு வரதராஜன், திருமுருகன், மீனாட்சி சுந்தரம் என மூன்று மகன்கள் இருக்கின்றன... மேலும் பார்க்க

`எந்தப் பகுத்தறிவும் கிடையாது... உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருக்கிறதா?'- கடுகடுக்கும் மேயர் பிரியா

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டுச் சென்னையில் தி.மு.க. சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மேயர் பிரியா, தவெக ஆட்சியையும... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டில் மாற்றம் வரும்' - அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி

தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிதாக இன்னொரு இயக்கம் கூடியிருக்கிறது.பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கத்தை அறிவித்துள்ளார் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.இந்த இயக்கத்தின் முதல் அரசியல் களம் - ... மேலும் பார்க்க