செய்திகள் :

`எந்தப் பகுத்தறிவும் கிடையாது... உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருக்கிறதா?'- கடுகடுக்கும் மேயர் பிரியா

post image

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டுச் சென்னையில் தி.மு.க. சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மேயர் பிரியா, தவெக ஆட்சியையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

விஜய்
விஜய்

அவர் பேசுகையில், "ஆட்சிக்கு வந்து இத்தனை நாள்கள் ஆகியும், 'நாங்கள் இந்தத் திட்டத்தைப் புதிதாகக் கொண்டு வந்தோம்' என்று சொல்வதற்கு அவர்களிடம் ஒரு திட்டம்கூட இல்லை. வெறும் 'ஸ்டிக்கர் ஆட்சியும், சோபா ஆட்சியும்தான்' இன்றைக்குத் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

அதை ஒருநாளும் ஒப்புக்கொள்ளாமல், இன்றைக்கும் 'திமுகதான் காரணம், திமுகதான் எங்களை அப்படிப் பண்ணுகிறது' என்று குறை சொல்கிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் பொதுக்கூட்டங்களில் எப்படியெல்லாம் பேசினீர்கள்?

இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் அவரே மேடைகளில் பேசும் போதெல்லாம் 'தீய சக்தி, அந்த சக்தி, இந்த சக்தி' என்கிறார். வீட்டிலிருந்து ஸ்கிரிப்ட் படித்துவிட்டு வருகிறீர்கள். காரில் வரும்போதுகூட அதை ஒரு ஐந்து முறை படித்திருக்கலாம். மேடைக்கு வந்ததும் மறந்துவிடுகிறது.

ஒரு முதலமைச்சர், தான் வெற்றி பெற்ற தொகுதிக்கு நன்றி சொல்லப் போனால், வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி கூறிவிட்டு, அங்கு என்னென்ன திட்டங்களைச் செய்யப்போகிறோம் என்று எடுத்து வைக்க வேண்டும்.

அவர்தான் நல்ல தலைவராகவும் முதலமைச்சராகவும் இருக்க முடியும். ஆனால், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முடிந்து, ரிசல்ட் வந்த மறுநாளே நன்றி சொல்லப் போனார்.

எந்தவொரு விமர்சனமும் வைக்காமல், பொதுமக்களைப் பார்த்து நன்றி மட்டுமே தெரிவித்துவிட்டு வந்தார்.

சேகர் பாபு - மேயர் பிரியா
சேகர் பாபு - மேயர் பிரியா

முதலமைச்சர் பேசும்போது, 'விர்ச்சுவல் வாரியர்ஸ்தான் எங்களுக்கு எல்லாமே' என்கிறார். அந்த விர்ச்சுவல் வாரியர்ஸைப் பார்த்து நான் கேட்கிறேன், உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருக்கிறதா? ஒரு கன்டென்ட் போடுகிறீர்கள்.

அதில் எது உண்மை, எது பொய், எதைப் போட வேண்டும், எதை விட வேண்டும் என்ற எந்தப் பகுத்தறிவும் கிடையாது. 'நாங்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ், எதை வேண்டுமானாலும் போடுவோம்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

நேற்று மதிப்புக்குரிய ஆதவ் அர்ஜுனா அவர்கள் பேசும்போது, 'நாங்கள் அதைச் செய்துவிடுவோம், இதைச் செய்துவிடுவோம்' என்கிறார்கள். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், திமுககாரனை உங்களால் என்னைக்குமே அசைக்க முடியாது. என்றைக்காக இருந்தாலும் தமிழ்நாட்டில் கருப்பு சிவப்பு கொடிதான் பறக்கும்," எனப் பேசியிருக்கிறார்.

"அதிமுகவின் வரலாறு தெரிந்துகொண்டு பேச வேண்டும்" - நிர்மல் குமாருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

அதிமுக குறித்து நேற்று மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், "கேபினட் அமைச்சர் பதவி கொடுத்தால் அதிமுகவை பாஜகவில் இணைக்கும் நிலைமையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ராஜ்ய சபா சீட் தந்த... மேலும் பார்க்க

`அதிமுக-வை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது; பீனிக்ஸ் பறவையைப்போல மீண்டெழும்' - எடப்பாடி சூளுரை

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அ.தி‌.முக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி மக்களுக்கான நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நேற்று பங்கேற்றிருந்தார். கட்சி... மேலும் பார்க்க

புதுச்சேரி: தந்தையை பராமரிக்காத மூன்று மகன்களுக்கு சிறைத் தண்டனை! - அதிரடி காட்டிய பெண் நீதிபதி

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. மனைவியை இழந்த முனுசாமிக்கு தற்போதைய வயது 84. இவருக்கு வரதராஜன், திருமுருகன், மீனாட்சி சுந்தரம் என மூன்று மகன்கள் இருக்கின்றன... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டில் மாற்றம் வரும்' - அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி

தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிதாக இன்னொரு இயக்கம் கூடியிருக்கிறது.பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கத்தை அறிவித்துள்ளார் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.இந்த இயக்கத்தின் முதல் அரசியல் களம் - ... மேலும் பார்க்க

'அண்ணாமலை இயக்கத்திற்கு ரஜினி ஆலோசனையா?' - லதா ரஜினிகாந்த் பதில்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' என்ற இயக்கத்தைக் கடந்த மார்ச் மாதம் தொடங்கினார். இது தொடர்பான காணொளியை இரண்டு தினங்களுக்கு முன்பு லதா ரஜினிகாந்த் பதிவிட்டிருந்தார். பாஜகவிலிரு... மேலும் பார்க்க

"ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்..!" - ஆதவ் அர்ஜூனாவுக்கு ரிப்ளை கொடுத்த ஆர்.எஸ்.பாரதி

சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்ற தவெக-வின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "மேயர் பிரியா, நமது சகோதரி பல்லவிக்கு ஒரு மெழுகுவர்த்தியைக் கூட கொடுக்காமல் அவமானப்படுத்தியிருக்கிறார். ஆத... மேலும் பார்க்க