செய்திகள் :

நாளை 'நேரம்' குறித்திருக்கும் ட்ரம்ப் 'இதை செய்தால் தான்.!' என அசராத ஈரான் பதில்

post image

ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொடுத்த காலக்கெடு முடிவுக்கு வந்துள்ளது.

இதனையடுத்து நேற்று ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"செவ்வாய்க்கிழமை, இரவு 8 மணி. கிழக்கு நேர மண்டலம்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படவில்லை என்றால், ஈரான் மீது கடும் தாக்குதல் என்று எச்சரித்துள்ளார்.

ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள நேரம் இந்திய நேரப்படி நாளை மறுநாள் (ஏப்ரல் 8) காலை 6.30 மணி ஆகும்.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

இதற்குள் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படவில்லை என்றால், "ஈரானில் மின் நிலையங்கள், பாலங்கள் அனைத்தும் அழிக்கப்படும். நீங்கள் நரகத்தில் வாழ்வீர்கள்" என்று பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

ட்ரம்பின் இந்த அச்சுறுத்தல்களுக்கு ஈரானின் பதில்...

ஈரானிய அதிபர் அலுவலகத்தின் தகவல் தொடர்புப் பிரிவு துணை பிரதிநிதியான மெஹ்தி தபதபாயி, "போரில் ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்ட ஈடு வழங்கினால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்.

இந்த நஷ்ட ஈடும் கப்பல்கள் சுங்க வரியாகக் கட்ட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க

TVK Vijay: "அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்.!"- தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்க... மேலும் பார்க்க