செய்திகள் :

`நீங்க ஊறுகாயா தொட்டுக்க நான் தான் கிடைச்சேனா.?' - சசிகலாவை நீக்கிய அஇபுதமமுக சக்ரவர்த்தி பேட்டி

post image

`அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக'த்திலிருந்து அதன் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவை கட்சியின் தலைவர் சக்ரவர்த்தி நீக்கியிருக்கிறார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, உடனடியாக ராமதாஸ் தலைமையிலான பாமகவும் கூட்டணி சேர்ந்து சாத்தூர், முதுகுளத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தினார்.

இந்த தொகுதிகளில் எல்லாம் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு இவர்களால் தடுக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தற்போது கட்சியின் தலைவரே சசிகலாவை நீக்கியிருக்கிற நிலையில் என்ன நடந்தது என சக்ரவர்த்தியிடம் கேட்டோம்.

அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்

‘’பத்து வருஷமா எம்பாட்டுக்கு ஒழுங்கா கட்சியை நடத்திட்டிருந்தேன் சார். தேடி வந்தது அவங்கதான். சரி அம்மா கூட இருந்தவங்கங்கிற ஒரு மரியாதையில கட்சியை முறையா நடத்துவாங்கனு நம்பினதால பொதுச்ச் செயலாளரா அவங்களை நியமிச்சு தேர்தலைச் சந்திச்சோம்.

சில தொகுதிகள்ல எங்க வேட்பாளர்கள் கணிசமான ஒட்டுகளை வாங்கவும் செய்தாங்க.

ஆனா தேர்தலுக்குப் பிறகு...? ஆளைப் பார்க்க கூட முடியலையேங்க. தேர்தல் முடிவு திமுக, அதிமுகவுக்கே அதிர்ச்சியானதாத்தான் இருந்தது. நாங்க எம்மாத்திரம்? அதுக்காக அப்படியே முடங்கிக் கிடந்தா? நிர்வாகிகள் நியமனம்., ஏன் ஒரு மீட்டிங் கூட இதுவரை போட்டது கிடையாது.

பொதுச் செயலாளரை ஆலோசிக்காம நான் மட்டும் மீட்டிங் போட்டா சரியா இருக்குமா? அதனால சந்திச்சுப் பேசலாம்னு போயஸ் கார்டன் போனா வீட்டுக்குள்ளேயே விடமாட்டேங்குறாங்க.

பி.ஏ வந்து மேடம் வேலையா இருக்காங்கனு பதில் சொல்றார். அல்லது திவாகரன் பையன் ஆனந்த்தைதான் பார்க்க முடியுது. கட்சித் தலைவராலயே பொதுச் செயலாளரைப் பார்க்க முடியலைன்னா அந்தக் கட்சி எப்படிங்க நடக்கும்?

எடப்பாடி பழனிசாமி

பத்து முறையாவது போயிருப்பேன். வாசலைத் தாண்டி வீட்டுக்குள் என்னால் போக முடியலை.

அப்புறம்தான் எனக்குப் புரிஞ்சது. இவங்க ஒரு பகடைக்காயா என் கட்சியைப் பயன்படுத்தியிருக்காங்க.

எடப்பாடி பழனிசாமிக்குப் பாடம் புகட்டணும்னு என் கட்சியில சேர்ந்திருக்காங்க. நினைச்சது ஓரளவு நடந்ததுல திருப்தியாகி இப்ப வீட்டோட உட்கார்ந்துட்டாங்க.

நீங்க ஊறுகாயா தொட்டுக்க நான் தான் கிடைச்சேனா? இது சரி வராதுனுதான் இப்ப அவங்களை நீக்கிட்டேன். இப்ப இந்த நடவடிக்கைக்குக் கூட ரியாக்‌ஷன் இல்லனா பாருங்க. எதுக்கும் வீட்டை வெளியில வரமாட்டேன்னா எதுக்கு பொது வாழ்க்கைக்கு வர ஆசைப்படணும்? வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியதுதானே?

என்னன்னும் போகட்டும். அவங்களுக்கு அதிமுகவுல சேரணும்னுதான் இன்னும் எண்ணமிருக்கு. ஆனா எடப்பாடி ஒருக்காலும் சேர்த்துக்கிடப் போறதில்ல. இவங்களும் காலம் முழுக்க கட்சி ஒன்று படணும்னு பேசிட்டே திரிய வேண்டியதுதான்’’ என்றவரிடம்.

’தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தல்ல கூட உங்க கட்சி எந்த நிலைப்பாடும் எடுத்ததா தெரியலயே’ என்றோம்.

மதுராந்தகம் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம்
மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரம்

‘’தென் மாவட்டங்களைப் போல தாராபுரம், மதுராந்தகத்துல இவர் சொன்னா கேக்குற ஆட்கள் இல்லையே, ஒருவேளை இருந்திருந்தா அங்கயும் வேட்பாளர்களை நிறுத்தச் சொல்லியிருப்பாரோ என்னவோ? ஆனா நான் அந்தச் சமயத்துல தவெகவுக்கு ஓட்டு போடாதீங்கனு சொல்லியிருந்தேன். ஏன்ன இடைத் தேர்தல் வரக் காரணமே அவங்கங்கிறதால அப்படிச் சொன்னேன்.

அதேபோல இனி வரும்காலங்கள்ல எங்க கட்சியின் நிலைப்பாடுனு கேட்டீங்கன்னா திமுக தவெக கூட எந்தக் காலத்துலயும் கூட்டு சேர மாட்டோம். அதிமுகவுடன் கட்சி இணையுமாங்கிற கேள்விக்கும் இப்போதைக்கு தெரியாதுங்கிறதுதான் பதில்’’ என்கிறார்.

ஈரான்: "போரும் இல்லாத, அமைதியும் இல்லாத நிலை.." - முடிவுக்கு கொண்டுவர மொஜ்தபாவுடன் அதிகாரிகள் ஆலோசனை

நவம்பர் 3 ஆம் தேதிக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பு அறிவித்திருந்தார். ட்ரம்ப் சொன்ன தேதி நெருங்கிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் இரு நாடுகளுக்கு இடையே... மேலும் பார்க்க

"ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்புதான் காரணமா?" - தவெக அமைச்சருக்கு அன்புமணி கண்டனம்

திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடுதான் காரணம் என்று அமைச்சர் வி.கே. இராஜிவ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சரின் இ... மேலும் பார்க்க

பத்திரிக்கையாளர்களை புகைப்படம் எடுத்த விஐடி துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம்!

விஐடி துணைத் தலைவரும் வேலூர் சர்வதேசப் பள்ளி (VIS) சென்னையின் தலைவருமான முனைவர் ஜி.வி.செல்வத்துக்கு பிறந்த நாள் விழா 26.10.2026 அன்று வேலூரில் நடைபெற்றது. பிறந்த நாளினையொட்டி வேலூரில் மருத்துவ முகாம்க... மேலும் பார்க்க

JIO: தாத்தா திருபாய் பற்றிய பேசிய அனந்த் அம்பானி; கண்கலங்கிய முகேஷ் அம்பானி; வீடியோ வைரல்

பங்குசந்தையில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்குகள் இன்று காலை பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தலைமையில் அவரின் மகன் ஆகாஷ் அம்பானி, மகள் இஷா அம்பானி இதனைத் தொடங்கி வைத்திர... மேலும் பார்க்க

முதல்வர் விஜய் பற்றி சர்ச்சை கருத்து - தப்பிஓடிய வேலூர் திமுக கவுன்சிலர் விழுப்புரத்தில் சிக்கினார்!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று முன்தினம் அதிரடியாக கைது ச... மேலும் பார்க்க

US Mid-Term Elections Explained: தப்புவாரா ட்ரம்ப்? - நவம்பர் 3, AMERICA-வில் என்ன நடக்கும்?

நவம்பர் 3, AMERICA-வில் என்ன நடக்கும்?US Mid-Term Elections"அமெரிக்காவில் ஒரு தேர்தல்… அதில் டிரம்ப் நேரடியாக போட்டியிட இல்லை தான். ஆனால் அவர் எதிர்காலமே அதில்தான் இருக்கிறது! நவம்பர் 3-ல் அமெரிக்காவி... மேலும் பார்க்க